(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, January 8, 2019

பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் குறித்து புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக அரசின் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் குறித்து புகார் தெரிவிக்க அதிகாரிகள் செல்லிடப் பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் திங்கள்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 3.50 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் தொடர்பாக புகார் ஏதும் இருப்பின் பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் மற்றும் வட்ட அளவில் நியமனம் செய்யப்பட்ட அலுவலர்களின் செல்லிடப்பேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.



மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை 04567-230506, 9445476344,

பரமக்குடி வட்டத்துக்கு சார்ஆட்சியர் பா.விஷ்ணுசந்திரன் 9445000473,

ராமநாதபுரம் வட்டத்துக்கு, வருவாய் கோட்டாட்சியர் ஆர்.சுமன் 9445000472,

திருவாடானை வட்டத்துக்கு தனித்துணை ஆட்சியர் திருஞானம் 9445461747,

கமுதி வட்டத்துக்கு உதவி ஆணையர் ச.ரவிச்சந்திரன் 9445074591,

முதுகுளத்தூர் வட்டத்துக்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் என். சுகிபிரேமலா 7338801269,

கடலாடி வட்டத்துக்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் மு. மதியழகன் 9445000362 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

கீழக்கரை வட்டத்துக்கு கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) எம்.அமிர்தலிங்கம் 9486448501,

ராமேசுவரம் வட்டத்துக்கு தனித்துணை ஆட்சியர் (மறுவாழ்வு) ந.ராமச்சந்திரன்( மண்டபம் அகதிகள் முகாம்) 8300163431,

ஆர்.எஸ்.மங்கலம் வட்டத்துக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் இரா.சிவதாஸ் 9443647321


ஆகிய தொலைபேசி எண்களில் பொதுமக்கள் தொடர்புகொண்டு புகார்களை தெரிவிக்கலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment