(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, January 3, 2019

ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 4 , 11 , 18 மற்றும் 25 ஆம் தேதிகளில் வேலைவாய்ப்பு முகாம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் இம்மாதத்தில் 4 நாள்கள் நடத்தப்படவுள்ளதாக ஆட்சியர் கொ.வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

வாரம்தோறும் வெள்ளிக்கிழமை இந்த முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் இம்மாதத்தில் வரும் 4 , 11 , 18 மற்றும் 25 ஆம் தேதிகளில் என வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்படவுள்ளன.

இதில் முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடத்திற்கு தகுதியுடைய பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.



எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

மேலும், தங்களின் சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பம், மார்பளவு புகைப்படம் ஐந்து , அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் சான்றிதழ்களின் நகல்கள் ஆகியவற்றுடன் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வரவேண்டும்.

இவ்வேலைவாய்ப்பு முகாம் மூலம் தேர்வு செய்யப்படுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது.

மேலும் முகாமில் பங்கேற்பவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக ஆன்லைன் பதிவில் குறைபாடுகள் இருந்தால், அது உடனடியாக சரி செய்து தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment