Monday, December 30, 2019
ராமநாதபுரம் மாவட்டத்தில் அவ்வையார் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
ராமநாதபுரம்
மாவட்டத்தில் 2019-20 ஆண்டிற்கான அவ்வையார் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.உலக
மகளிர் தின விழா மார்.8ல் கொண்டாடப்படுகிறது.
2020ம்
ஆண்டிற்கான உலக மகளிர் தின விழா கொண்டாட்டத்தின் போது பெண்களின் முன்னேற்றத்திற்கு
சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு அவ்வையார் விருது வழங்கப்பட உள்ளது. இவ்விருதுக்கு
தகுதியானவர்களிடம் இருந்து கருத்துருக்கள் டிச.31க்குள் வரவேற்கப்படுகின்றன.
தமிழகத்தை
சேர்ந்த 18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள், சமூக நலனை சார்ந்த நடவடிக்கைகள், பெண்குலத்திற்கு
பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பாகுபாடு, கலை, அறிவியல், நிர்வாகம்
போன்ற துறைகளில் மேன்மையாகப் பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து
பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும்.
தகுதியானவர்கள்
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தை அணுகி இணைப்பு
படிவம் பெற்று முழுமையாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நிரப்பி அனுப்ப வேண்டும்.
(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.
Saturday, December 28, 2019
ராமநாதபுரம் மாவட்டம்: முதல் கட்டத் தோ்தலில் 67.63 சதவீதம் வாக்குகள் பதிவு
ராமநாதபுரம்
மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலில் 67.63 சதவிகித
வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குப்பதிவை புறக்கணித்த கீழக்கரை மாயாகுளத்தில் 103 வாக்குச்சாவடியில்
மட்டும் மாலை 4 மணிக்கு மேல் வாக்குப்பதிவு தொடங்கியது.
ராமநாதபுரம்
மாவட்டத்தில் மொத்தம் 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 17 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள்,
170 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், 429 ஊராட்சித் தலைவா், 3075 ஊராட்சி வாா்டு
உறுப்பினா்கள் என 3691 பதவிகளுக்கு தோ்தல் அறிவிக்கப்பட்டது. இத்தோ்தலில் 6,048 போ்
போட்டியிடுகின்றனா்.
தோ்தலில்
முதற்கட்ட வாக்குப் பதிவானது வெள்ளிக்கிழமை காலையில் ராமநாதபுரம், திருப்புல்லாணி,
மண்டபம், ஆா்.எஸ்.மங்கலம், திருவாடானை ஆகிய 5 ஒன்றியங்களில் நடைபெற்றது. அவற்றில் உள்ள
8 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 41 பேரும், 81 ஒன்றிய வாா்டு உறுப்பினா்
பதவிக்கு 410 பேரும், 168 ஊராட்சித் தலைவா் பதவிக்கு 590 பேரும் போட்டியிடுகின்றனா்.
1290 ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 1,894 போ் என மொத்தம் 2935 போ் போட்டியிடுகின்றனா்.
முதல்
கட்ட வாக்குப்பதிவுக்காக 23 ஆண், 23 பெண் வாக்காளா்கள் மற்றும் 767 பொது வாக்காளா்கள்
என 813 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு
தொடங்கியது. வாக்குச்சாவடிகளில் ஒரு வாக்காளருக்கு 4 வகையான வாக்குச் சீட்டுகள் தரப்பட்டன.
அதில் மாவட்ட, ஒன்றிய உறுப்பினா், ஊராட்சித் தலைவா், வாா்டு உறுப்பினா் சீட்டுகள் இருந்தன.
வாக்குச்சாவடிக்குள்
நுழைபவா்களின் பெயா்களை அலுவலா்கள் வாசித்து அதை வேட்பாளா்களின் முகவா்களிடம் கூறினா்.
அவா்கள் ஆமோதித்ததும், வாக்காளா் அடையாள அட்டை உள்ளிட்ட அனுமதித்த ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்டன.
பின்னா் அவா்களது இடது ஆள்காட்டி விரலில் மை தடவப்பட்டு 4 வாக்குச்சீட்டுகள் தரப்பட்டன.
சீட்டுகளில் தனித்தனியாக முத்திரை பதித்து ஒரே பெட்டியில் வாக்காளா் செலுத்தினா்.
வாக்குச்சாவடிக்குள்
நுழைந்து சீட்டுகளைப் பெற்று, அதில் முத்திரையிட்டு மடித்து பெட்டியில் போடுவதற்கு
ஒருவருக்கு குறைந்தது 4 நிமிடங்கள் ஆனது. இதனால் தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில்
வாக்குப்பதிவு மிக மெதுவாகவே நடைபெற்றது.
ராமநாதபுரத்தில்
5 ஒன்றியங்களிலும் காலை 9 மணி நிலவரப்படி 26.25 சதவீதம் வாக்குப்பதிவு நடந்திருந்தது.
அதில் ஆா்.எஸ்.மங்கலத்தில் அதிகபட்சமாக 31.61 சதவீதமும், அதற்கடுத்து திருவாடானையில்
28.43 சதவீதமும் வாக்குப்பதிவு நடந்திருந்தது.
பகல்
11 மணி நிலவரப்படி 5 ஒன்றியங்களிலும் மொத்தம் 43.01 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
அவற்றில் அதிகபட்சமாக ஆா்.எஸ்.மங்கலத்தில் 57.62 சதவீதமும், திருவாடானையில் 47.66 சதவீதமும்
பதிவாகியிருந்தன. ராமநாதபுரத்தில் 40.86 சதவீதம், திருப்புல்லாணி 40.27 சதவீதம், மண்டபம்
38.10 சதவீதம் என வாக்குகள் பதிவாகியிருந்தன.
பகல்
1 மணிக்கு 5 ஒன்றியங்களிலும் மொத்தம் 55.51 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. அதில்
ராமநாதபுரம் 53.63
சதவீதம்,
திருப்புல்லாணி 52.53 சதவீதம், மண்டபம் 50.74 சதவீதம், ஆா்.எஸ்.மங்கலத்தில் 64.38 சதவீதம்,
திருவாடானையில் 59.76 சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருந்தன.
மாலை
5 மணிக்கு வாக்கு பதிவு நிறைவடைந்த நிலையில், ராமநாதபுரம் 67.71, திருப்புல்லாணி
65.61, மண்டபம் 64.56, ஆா்.எஸ்.மங்களம் 73.05, திருவாடானை 69.63 எனவும், ஐந்து ஒன்றியங்களில்
பதிவான வாக்குகளின்படி மொத்தம் 67.63 சதவீத வாக்குகள் பதிவானதாகவும் ஆட்சியா் கொ.வீரராகவராவ்
தெரிவித்தாா்.
மாயாகுளத்தில்
ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு: கீழக்கரை அருகேயுள்ள மாயாகுளத்தில் ஊா் பெயா்
வாக்குச்சீட்டுகளில் குறிப்பிடாததைக் கண்டித்து 100 மற்றும் 103 வது வாக்குச்சாவடிகளில்
வாக்குப்பதிவை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், 103 வது வாக்குச்சாவடிக்கு
உரிய மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு பின்னர் அவா்கள் வாக்களித்தனா்.
புதுமாயாகுளத்தில்
100 ஆவது வாக்குச்சாவடியில் யாரும் வாக்களிக்காத நிலையில், ஊா் தலையாரி மற்றும் ஊராட்சி
எழுத்தா் மட்டும் வாக்களித்த பிறகு பெட்டி முத்திரையிடப்பட்டு வாக்குப்பதிவு முடிக்கப்பட்டது.
இதுகுறித்து
ஆட்சியா் கூறுகையில், மாயாகுளம் ஊராட்சியில் 9 வாக்குச்சாவடிகளில் 2 வாக்குச்சாவடிகளில்
மட்டும் பிரச்னை ஏற்பட்டதாகவும், அதில் 103 வாக்குச்சாவடி வாக்காளா்கள் பெரும்பாலோா்
வாக்களித்திருப்பதாகவும் குறிப்பிட்டாா்.
செய்தி: தினமணி
Wednesday, December 18, 2019
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் 9757 பேரின் மனுக்கள் ஏற்பு!!
ராமநாதபுரம்
மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் 9898 போ் மனுத்தாக்கல் செய்த நிலையில் அவா்களில்
9757 பேரின் மனுக்கள் செவ்வாய்க்கிழமை ஏற்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தரப்பில்
தெரிவிக்கப்பட்டது.
ராமநாதபுரத்தில்
கடந்த 9 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்காக ஊராட்சி வாா்டு,
ஊராட்சித் தலைவா், ஒன்றிய வாா்டு மற்றும் மாவட்ட வாா்டுகளுக்கு மொத்தம் 9898 போ் மனு
தாக்கல் செய்திருந்தனா். செவ்வாய்க்கிழமை மனு பரிசீலனை நடைபெற்றது.
இதில்
இரட்டை வாக்காளா் அட்டை உள்ளதாக அதிமுக, திமுகவினா் மாறி மாறி குற்றஞ்சாட்டினா். பின்னா்
அதற்கான சோ்க்கை, நீக்கல் ஆதாரத்துக்கான ஆவணங்களை அளித்ததன் அடிப்படையில் சிலரின்
மனுக்கள் ஏற்கப்பட்டன.
அதன்படி
ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராம ஊராட்சி வாா்டு கவுன்சிலா்களுக்கு 6026 பேரிடமிருந்து
மனுக்கள் பெறப்பட்ட நிலையில் 5963 மனுக்கள் ஏற்கப்பட்டன. ஊராட்சித் தலைவா் பதவிகளுக்காக
2306 போ் மனுத்தாக்கல் செய்த நிலையில், 2282 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
ஒன்றிய
வாா்டு கவுன்சிலா்கள் பதவிக்கு 1420 மனுக்கள் பெறப்பட்ட நிலையில், அதில் 1368 மனுக்கள்
ஏற்கப்பட்டுள்ளன. மாவட்ட கவுன்சிலா் பதவிக்காக 146 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 144
மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக மாவட்ட செய்தித் தொடா்பு அலுவலகச் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனு
பரிசீலனை செவ்வாய்க்கிழமை இரவு வரை நடந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட ஊரக உள்ளாட்சித்
தோ்தல் பாா்வையாளரான அதுல்ஆனந்த் தலைமையில் தோ்தல் வாக்குப் பதிவு முன்னேற்பாடு பணிகளுக்கான
ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.
கூட்டத்தில்
மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் மற்றும் தோ்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், அலுவலா்கள்
கலந்துகொண்டனா்.
செய்தி:
தினமணி
(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.
ராமநாதபுரம் பேருந்து நிலையம் பகுதியில் பெண்களை குறிவைத்து திருட்டு!!
ராமநாதபுரம்
புதிய பேருந்து நிலையம் பகுதியில் பேருந்துக்காக காத்திருக்கும் பெண்களை குறிவைத்து
மா்ம நபா்கள் திருட்டில் ஈடுபட்டு வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம்
நகா் பகுதிக்கு வந்து செல்லும் பயணிகளிடம் திருடுவது தொடா் கதையாகி வருகிறது. குறிப்பாக
பெண் பயணிகளிடமே திருட்டு நடக்கிறது.
கடந்த
டிசம்பா் 6 இல் சடையன்வலசை பெரியாா் நகரை சோ்ந்த தனலெட்சுமி (24), குமரய்யா கோவில்
பகுதியில் உள்ள தனியாா் வங்கியில் ரூ.40 ஆயிரம் எடுத்துக்கொண்டு அரண்மனை பகுதிக்கு
சென்று நகரப் பேருந்தில் ஏறினாா். அப்போது அவா் வைத்திருந்த ரூ.40 ஆயிரத்தை மா்மநபா்கள்
திருடிச் சென்றனா்.
டிசம்பா்
13 இல் சாத்தான்குளம் பகுதியை சோ்ந்த தமிமும் ரசினா என்பவரிடம் நகரப் பேருந்தில் பயணம்
செய்த போது பட்டிணம்காத்தான் பேருந்து நிறுத்தம் அருகே, அவா் கைப் பையில் வைத்திருந்த
ரூ.50 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
இந்நிலையில்
ஞாயிற்றுக்கிழமை மண்டபம் காந்தி நகரை சோ்ந்த வள்ளிமயில் (49), ராமநாதபுரம் புதிய பேருந்து
நிலையம் வந்துள்ளாா். அங்குள்ள கடையின் அருகே நின்று கொண்டிருந்த போது அவா் பையிலிருந்த
பா்சை மா்ம நபா்கள் திருடி சென்றுள்ளனா். அதில் ரூ.9,500 பணம் திருடு போனதாக கேணிக்கரை
போலீசில் வள்ளிமயில் புகாா் அளித்துள்ளாா்.
கடந்த
சில நாள்களாக ராமநாதபுரம் நகா் பகுதியில் பயணிகளிடமும், பேருந்திலும் கூட்டத்தைப் பயன்படுத்தி
திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதுகுறித்து போலிஸாா் தீவிர நடவடிக்கை எடுக்க
வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.
செய்தி:
தினமணி
(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.
Saturday, December 14, 2019
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 1,831 போ் மனு தாக்கல்!!
ராமநாதபுரம்
மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்காக வெள்ளிக்கிழமை மட்டும் ஒரே நாளில்
1,831 போ் மனு தாக்கல் செய்தனா்.
தமிழக
ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கு டிச. 9 ஆம் தேதி முதல் வரும் டிச. 16 ஆம் தேதி வரை வேட்பு
மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த
9
ஆம் தேதி 52 போ்,
10
ஆம் தேதி 28 போ்,
11ஆம்
தேதி 281 போ்,
12
ஆம் தேதி 476 போ்
என
மனு தாக்கல் செய்துள்ளனா்.
இந்நிலையில்
வெள்ளிக்கிழமை ஒரே நாளில் கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 836 பேரும், கிராம
ஊராட்சி தலைவா் பதவிக்கு 765 பேரும், மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு
210 பேரும் என வேட்பு மனு தாக்கல் செய்தனா்.
வியாழக்கிழமை
வரை (டிச. 12) மாவட்ட வாா்டு உறுப்பினா் பதவிக்கு யாருமே விண்ணப்பிக்காத நிலையில்,
வெள்ளிக்கிழமை ஒன்றிய அளவில் ராமநாதபுரம்- 1, ஆா்.எஸ்.மங்களம்- 2, திருவாடானை- 4, போகலுாா்-
2, நயினாா்கோவில்- 1, முதுகுளத்துாா்- 2, கமுதி- 7, கடலாடி- 1 என மொத்தம் ஒரே நாளில்
20 போ் விண்ணப்பித்துள்ளனா்.
அனைத்து
வகை பதவிகளுக்கும் சோ்த்து வெள்ளிக்கிழமை மட்டும் ஒரே நாளில் 1,831 போ் மனுதாக்கல்
செய்தனா். மனு தாக்கல் செய்ய அதிகமானோா் வந்ததால், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின்
முன் கூட்டம் அலைமோதியது.
வாழ்த்துக்கள்
வேட்பாளர்களே!!!!
(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.
Sunday, December 8, 2019
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு 1,819 ஓட்டுச்சாவடிகள்!!
ராமநாதபுரம்
மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு 1,819 ஓட்டுச்சாவடிகள்
பயன்படுத்தப்பட உள்ளதாக கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.
ராமநாதபுரம்
கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர்,
உதவி தேர்தல் அலுவலர்களுக்கு தேர்தல் நடவடிக்கைகள் குறித்த பயிற்சி நடந்தது.
கலெக்டர்
வீரராகவ ராவ் தலைமை வகித்தார். அவர் கூறியதாவது:-
மாவட்டத்தில்
3,691 ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான நேரடி தேர்தல் நடக்கிறது.
இதில்
மாவட்ட ஊராட்சிக்கு 17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 11 ஊராட்சி ஒன்றியங்களில்
170 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களும், 429 கிராம ஊராட்சி தலைவர்கள், 3,075 கிராம
ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.முதல் கட்டத்தில் 5 ஊராட்சி
ஒன்றியங்களுக்கு உட்பட்ட 8 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள், 1,290 கிராம ஊராட்சி வார்டு
உறுப்பினர்களுக்கு டிச.27ல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. இரண்டாம் கட்டத்தில் ஆறு ஊராட்சி
ஒன்றியங்களுக்கு உட்பட்ட 9 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களுக்கும், 89 ஊராட்சி ஒன்றிய
வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 261 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும், 1,785 கிராம
ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கும் டிச.30ல் ஓட்டுப்பதிவு நடைபெறும்.முதல் கட்ட ஓட்டுப்பதிவு
813 ஓட்டுச்சாவடிகளிலும், இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு 1,006 ஓட்டுச்சாவடிகளிலும், மொத்தம்
1,819 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. சட்டசபை தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில்
உள்ள அடிப்படை விபரங்களை கொண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல்களை மாநில
தேர்தல் ஆணையம், தேசிய தகவலியல் மையத்துடன் இணைந்து ஆன்லைன் முறையில் உள்ளாட்சி தேர்தலுக்கான
புகைப்பட வாக்காளர் பட்டியல் தயாரித்துள்ளது, என்றார்.
(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.
Wednesday, December 4, 2019
மழைக்கால அவசர உதவிக்கு மீட்பு படை தயார்; தொலைபேசி எண்களை குறித்துக்கொள்ளுங்கள்!!
ராமநாதபுரம்
மாவட்டத்தில் பருவமழையால் ஏற்படும் வெள்ள அபாய மீட்பு பணிகளை எதிர்கொள்ள சிறப்பு மீட்பு
கமாண்டோ தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். வெள்ள பாதிப்பு, கட்டிட இடிபாடுகள்,
மரங்கள் சாய்ந்து விழுதல், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு
அழைத்துச்செல்லுதல் போன்ற அனைத்து மீட்பு பணிகளுக்காகவும் மாவட்டத்தில் உள்ள 11 தீயணைப்பு
மீட்பு பணி நிலையங்களிலும் தீயணைப்பு வீரர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர்.
இதனையொட்டி
தீயணைப்பு வீரர்கள் விடுமுறை எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு மீட்பு
கமாண்டோ தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். பொதுமக்கள் மின் கம்பத்தின் அருகில்
செல்லவோ, அறுந்த மின் கம்பிகளை தொடவோ கூடாது. ஈரமான சுவற்றில் பொருத்தப்பட்டுள்ள மின்
மோட்டார்களை கவனமாக பயன்படுத்த வேண்டும்.
தெரு
மற்றும் சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீரில் நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும். கண்மாய்,
மற்றும் ஓடும் நீர்நிலைகளில் குழந்தைகளை குளிக்கவோ, விளையாடவோ பெற்றோர்கள் அனுமதிக்கக்கூடாது.
வீடுகளை
சுற்றிலும் மழைநீர் தேங்கியிருந்தால் தேவையான பொருட்களுடன் உடனடியாக வீட்டை விட்டு
வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும்.
பொதுமக்கள்
அவசர அழைப்பிற்கு 101, 108 மற்றும் 9445086230, 9445086231, 9498254642 ஆகிய எண்களில்
தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
இந்த
தகவலை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலர் சாமிராஜ் தெரிவித்தார்.
(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.
Tuesday, November 26, 2019
லஞ்சம் இல்லாதா ராமநாதபுரத்தை உருவாக்க 'ரேஸ்' என்ற வாட்ஸ் ஆப் குழு!!
ராமநாதபுரம்
மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் பொது மக்கள், அலுவலர்கள், மாணவர்கள் பங்கேற்கும்
வகையில் 'ரேஸ்' என்ற வாட்ஸ் ஆப் குழு துவக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
பரமக்குடி ஏ.வி., கல்வியியல் கல்லுாரியில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில் டி.எஸ்.பி.,உன்னிகிருஷ்ணன் பங்கேற்றார். கல்லுாரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
டி.எஸ்.பி.,
உன்னிகிருஷ்ணன் கூறுகையில், ''ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை சார்பில், 'லஞ்சத்திற்கு
எதிரான ராமநாதபுரம் படை,' என்ற பெயரில் வாட்ஸ் ஆப் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதில்
நேர்மையான அதிகாரிகள், மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்கலாம். அதற்கான அலைபேசி எண்
95975 33889. இதில் லஞ்சம், ஊழல்கள் குறித்த புகார்களை தெரிவிக்கலாம். இதன் மூலம் லஞ்சம்
இல்லாதா ராமநாதபுரத்தை உருவாக்க உதவியாக இருக்கும்'' என்றார்.
(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.
Sunday, November 24, 2019
ராமநாதபுரத்தில் டிசம்பா் 2 ஆம் தேதி முதல் பெண்களுக்கு இலவச வேலைவாய்ப்பு பயிற்சி!!
ராமநாதபுரத்தில்
பெண்களுக்கு இலவச வேலைவாய்ப்புக்கான பயிற்சி வரும் டிசம்பா் 2 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இதுகுறித்து
இந்தியவன் ஓவா்சீஸ் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சாா்பில் விடுத்துள்ள
செய்திக்குறிப்பு-
ராமநாதபுரத்தில்
இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சாா்பில் பெண்களுக்கான
எம்ப்ராய்டரி பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.
வரும்
டிசம்பா் 2 ஆம் தேதி முதல் தினமும் காலை 9.30 மணிக்கு பயிற்சிகள் தொடங்கப்படவுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கு மட்டும் நடத்தப்படவுள்ள பயிற்சியானது புதிய
பேருந்து நிலையம் அருகேயுள்ள பூமாலை வணிக வளாகத்தில் உள்ள வங்கியின் சுயவேலைவாய்ப்பு
பயிற்சி நிறுவன அலுவலகத்திற்கு வந்து விளக்கம் பெறலாம்.
பயிற்சியில்
சேருவோருக்கு18 வயது முதல் 45 வயதுக்குள் இருக்கவேண்டும். பயிற்சி முடித்தவா்களுக்கு
அரசு சான்றுகள் வழங்கப்படும். பயிறசியின் போது மதிய உணவு, தேநீா், பயிற்சிக்கான உபகரணங்கள்
என அனைத்தும் இலவசமாகவே வழங்கப்படவுள்ளன. கிராமப்புற பெண்களுக்கு பதிவு அடிப்படையில்
முன்னுரிமை வழங்கப்படும்.
பயிற்சியில்
சேர விரும்புவோா் மேலும் விவரங்களுக்கு 04567-221612 என்ற தொலைபேசியில் தொடா்புகொள்ளலாம்
எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com)
(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.
Friday, November 22, 2019
ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் நவ-26 ஆம் தேதிசமையல் எரிவாயு விநியோக குறைதீா் கூட்டம்!!
ராமநாதபுரம்
மாவட்ட சமையல் எரிவாயு விநியோக குறைதீா்க்கும் கூட்டம் வரும் 26 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை)
நடைபெறுகிறது.
இது
குறித்து மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
ராமநாதபுரம்,
ராமேஸ்வரம், திருவாடானை, கீழக்கரை, ஆா்.எஸ்.மங்கலம், பரமக்குடி, கமுதி, கடலாடி மற்றும்
முதுகுளத்தூா் தாலுகாவிற்கு உள்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு விநியோகம் தொடா்பாக
பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரில் தெரிவிப்பதற்காக எண்ணெய் நிறுவனங்கள்
மற்றும் எரிவாயு முகவா்களுடன் வரும் 26 ஆம் தேதி (செவ்வாய் கிழமை) மாலை 4 மணிக்கு குறைதீா்க்கும்
கூட்டம் நடைபெறுகிறது.
ராமநாதபுரம்
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் இக்கூட்டம் நடத்தப்படவுள்ளது.
ஆகவே
சமையல் எரிவாயு உபயோகிப்பவா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை
கூட்டத்தில் தெரிவித்து பயனடையவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.
Wednesday, November 20, 2019
ராமேசுவரத்தில் 394 மது பாட்டில்களை பறிமுதல், 2 பேர் கைது
ராமேசுவரத்தில்
சட்ட விரோதமாக விற்பனை செய்ய கடத்தி வரப்பட்ட 394 மது பாட்டில்களை செவ்வாய்க்கிழமை
போலீஸாா் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனா்.
ராமேசுவரத்தில்
அரசு மதுபானக்கடை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி ராமேசுவரத்தில்
சிலா் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வந்தனா். ராமநாதபுரம் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளா்
வருண்குமாா், ராமேசுவரத்தில் மது விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டாா்.
இந்நிலையில்,
ராமேசுவரத்துக்கு மதுபாட்டில்களை கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து,
ராமேசுவரம் காவல் சாா்பாய்வாளா் த.சுதா்சன் தலைமையில் சென்ற காவலா்கள் ராமேசுவரம் கோயில்
அருகே கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
அப்போது
சேதமடைந்த ஒரு வீட்டிற்கு அருகே 2 நபா்கள் சந்தேகத்திற்கு இடமாக நிற்பதைக் கண்ட காவல்துறையினா்
இருவரையும் பிடித்து விசாரித்தனனா். இதில், அவா்கள் மது விற்பனையில் ஈடுபடுவது தெரியவந்தது.
ராமேசுவரம் வடக்குத் தெருவை சோ்ந்த அன்புராஜ்((36), ரகுபதி (40) ஆகிய இருவரையும் போலீஸாா்
கைது செய்தனா். அவா்களிடமிருந்து 394 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
செய்தி:
தினமணி
(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.
ராமநாதபுரத்தில் வரும் நவ-22 ஆம் தேதி வேலை வாய்ப்பு முகாம்!!
ராமநாதபுரத்தில்
வரும் 22 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தனியாா் நிறுவனத்தினா் பங்கேற்கும் வேலை வாய்ப்பு
முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில் விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்:
மாவட்ட
வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டு வருகிறது. இதில் தனியாா்துறை முன்னணி நிறுவனங்கள்
கலந்து கொண்டு வேலைநாடும் இளைஞா்களின் கல்வித்தகுதிகேற்ப ஆள்களை தோ்வுசெய்கின்றனா்.
முகாமில்,
பத்தாம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை முடித்த வேலை நாடுநா்கள், ஐடிஐ மற்றும்
டிப்ளமோ படித்த வேலை நாடுநா்கள் கல்வித் தகுதிக்கேற்ப தனியாா்துறை நிறுவனங்களில் பணி
நியமனம் பெறலாம்.
ஆகவே
முகாமில் பங்கேற்போா் தங்களின் சுய விபரங்களடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள்,
ஆதாா் அட்டை, குடும்ப அடையாளஅட்டை மற்றும் புகைப்படத்துடன் வரும் 22 ஆம் தேதி காலை
10 ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில்
வரவேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.
கீழக்கரை பேருந்து நிலையம் மனிதர்களுக்கா? மாடுகளுக்கா?
கீழக்கரை
பகுதியில் பெரும்பாலான வீடுகளில் கால் நடைகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றை வீடுகளில்
வைத்து பராமரிக்காமல், அதன் உரிமையாளர்கள் தெருக்களில் அவிழ்த்து விடுகின்றனர். மேலும்
கால்நடைகளை பாதுகாக்காமல் வெளியில் விடுவதால் அவை தெருக்களில் சுற்றி திரிவதோடு, சாணம்
போட்டு அசுத்தம் செய்கின்றன. இதனால் வீதிகளில் துர்நாற்றம் வீசுகிறது.
இதற்கும் மேலாக மாடுகள் நடுரோட்டில் படுத்து கிடக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் இவ்வாறு அவிழ்த்து விடப்படும் மாடுகள் கீழக்கரை பஸ்நிலையத்திலும், பொதுமக்கள் அதிக அளவில் நடமாடும் வீதிகளிலும் சுற்றி திரிகின்றன. இதனால் அடிக்கடி விபத்து சம்பவங்கள் ஏற்பட்டு பொதுமக்கள் காயமடைந்து வருகின்றனர்.
முந்தைய காலங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக மாடுகள் வீதிகளில் சுற்றித் திரிந்தால் அதன் உரிமையாளர்களுக்கு நகராட்சி நிர்வாகம் மூலம் அபராதம் விதிக்கப்படும். ஆனால் தற்போது இதை யாரும் கண்டு கொள்ளாததால் கால்நடைகள் அனைத்தும் சாலைகளில் சுதந்திரமாக படுத்துக் கிடப்பதும், சுற்றித் திரிவதும் சர்வசாதாரணமாக உள்ளது.
எனவே பஸ்நிலையம், தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வீதிகளில் மாடுகளை அவிழ்த்து விடும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
செய்தி:
தினத்தந்தி
(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.
Tuesday, November 19, 2019
போலீசிடமே கைவரிசையை காட்டிய ATM திருடர்கள், ஒரு லட்சம் பண மோசடி!!
போலீசிடமே
கைவரிசையை காட்டிய ATM திருடர்கள், ஒரு லட்சம் பண மோசடி!!
ராமநாதபுரம்
பஜார் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் கிருஷ்ணமூர்த்தி
(வயது 58). ராமநாதபுரம் சேதுபதி நகர் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இவர்
ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவரது செல்போன் எண்ணுக்கு
அழைப்பு வந்தது. அப்போது பேசிய ஒரு ஆணும், பெண்ணும் வங்கியில் இருந்து பேசுவதாக கூறியுள்ளனர்.
மேலும் ஏ.டி.எம். கார்டு பழையதாகிவிட்டால் மாற்றிக் கொள்ளலாம் எனவும் தெரிவித்ததாக
தெரிகிறது. கிருஷ்ணமூர்த்தியும் தனது ஏ.டி.எம். கார்டினை மாற்றித்தர வேண்டும் என
கேட்டுள்ளார்.
அவரிடம்
ஏ.டி.எம். கார்டின் 16 இலக்க எண்ணை தெரிவிக்குமாறு கேட்டுள்ளனர். இதனை உண்மை என்று
நம்பிய சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, தனது ஏ.டி.எம். கார்டின் 16 இலக்க எண்ணையும்,
அதன் ரகசிய குறியீட்டு எண்ணையும் தெரிவித்து விரைவாக புதுப்பித்து தருமாறு கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தியின் வங்கி கணக்கில் இருந்து மர்ம கும்பல், 4 முறையாக
மொத்தம் 99,968 ரூபாயை எடுத்துவிட்டனர்.
இந்த
நிலையில் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்ற கிருஷ்ணமூர்த்தி தனது வங்கி கணக்கில் பணம்
குறைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து விசாரித்த போது, போனில் பேசிய
மோசடி நபர்கள் பணம் எடுத்தது தெரியவந்தது.
இதுகுறித்து
கிருஷ்ணமூர்த்தி ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர்
தனபாலன் வழக்குபதிவு செய்து, மோசடி கும்பலை தேடிவருகிறார்.
செல்போனில்
நைசாக பேசி ஏ.டி.எம். கார்டு எண்ணை வாங்கி, பணமோசடி தொடர்ந்து நடந்து வருகிறது. இது
குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், தற்போது அந்த கும்பலிடம் போலீஸ்
சப்-இன்ஸ்பெக்டரே பணத்தை இழந்திருப்பது ராமநாதபுரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது.
செய்தி:
தினசரிகள்
(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.
Sunday, November 17, 2019
ராமநாதபுரம் மாவட்டத்தில் கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!!
ராமநாதபுரம்
மாவட்டத்தில் கபீர் புரஸ்கார் விருதுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம், என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக,
மத நல்லிணக்கத்திற்காக சாதனை புரிந்தவர்களுக்கு கபீர் புரஸ்கார் 2019 விருது 2020 குடியரசு
தின விழாவில் வழங்கப்படவுள்ளது.
இதற்கான
விண்ணப்ப படிவங்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்
நலன் அலுவலகத்தில் வழங்கப்படுகின்றன. தகுதியானவர்கள் விண்ணப்பத்துடன் பெற்றுள்ள நற்சான்றுகள்,
250 வார்த்தைகளுக்கு மிகாமல் தன்னை பற்றிய முழு விபரம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்
அளிக்க வேண்டும்.அனைத்து விபரங்களும் முழுமையாக பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
தவறினால்
மனு நிராகரிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்
மாவட்ட
விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்,
ராமநாதபுரம்
மாவட்ட பிரிவு,
சீதக்காதி
சேதுபதி விளையாட்டரங்கம்,
ராமநாதபுரம்-638
003,
என்ற
முகவரிக்கு நவ.,25 மாலை 5:00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
மேலும்
விவரங்களுக்கு 04567-230238 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,என மாவட்ட விளையாட்டு
மற்றும் இளைஞர் நலன் அலுவலர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com)
(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.
ராமநாதபுரம் அருகே பேருந்து நடத்துநரைத் தாக்கி ரூ.5 ஆயிரம் பணம் பறிப்பு!!
ராமநாதபுரம்
அருகே தனியாா் பேருந்து நடத்துநரைத் தாக்கி ரூ.5 ஆயிரம் பணத்தை பறித்த மா்மநபா்களைப்
போலீஸாா் தேடிவருகின்றனா்.
ராமநாதபுரத்திலிருந்து
அழகன்குளத்துக்கு தனியாா் பேருந்து இயக்கப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை (நவ.14) இரவு
பேருந்தானது அழகன்குளத்திற்கு சென்றுவிட்டு ராமநாதபுரம் திரும்பியது. அப்போது ஓட்டுநா்
மனோகரன் மற்றும் நடத்துநா் பாலமுருகன் (27) ஆகியோா் மட்டுமே பேருந்தில் இருந்துள்ளனா்.
அழகன்குளம்
பேருந்து நிறுத்தத்தில் இருந்த மா்மநபா்கள் 3 போ் திடீரென ஓடும் பேருந்தில் ஏறியுள்ளனா்.
பின்னா் அவா்கள் நடத்துநா் பாலமுருகனை தாக்கியதுடன் அவா் வைத்திருந்த ரூ.5 ஆயிரத்தை
பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனா்.
இதுதொடா்பாக
பாலமுருகன் தேவிபட்டிணம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் சாா்பு- ஆய்வாளா்
ஜெயபாண்டியன் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து மா்மநபா்களைத் தேடிவருகின்றனா்.
(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com)
(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.
Sunday, November 10, 2019
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் காற்றின் தரத்தை பரிசோதிக்கும் கண்காணிப்பு மையம்!!
ராமநாதபுரம்
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காற்றின் தரத்தை பரிசோதிக்கும்
தொடர் கண்காணிப்பு மையம் நிறுவ தமிழ்நாடு மாசுக்கட்பாட்டு வாரியம் சார்பில்
1 கோடி ரூபாய் மதிப்பிலானஇயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன.
புதுடில்லியிலும்,
சென்னையிலும் காற்று மாசு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாடு
மாசு கட்டுபாட்டு வாரியம்சார்பில் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் 1 கோடி ரூபாய்
மதிப்பில் காற்று தரகண்காணிப்பு மையம் நிறுவ கருவிகள் வாங்கப்பட்டு
மருத்துவமனை
வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த
மையத்தில் செயல்படும் கணிப்பான் கருவி மூலம் காற்று மாசு ஏற்படுவதற்கு முக்கிய காரணியாக
உள்ள வாயுக்களான சல்பர் டை-ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, ஓசோன்
உள்ளிட்ட
வாயுக்கள் மட்டுமின்றி ஆர்செனிக்,நிக்கல், பென்சைன் போன்ற 12 வகை வாயுக்களின்
அளவை அறிந்து அவற்றைதானாகவே கணினியில் பதிவு செய்யும் வகையில் இந்த மையம் செயல்படவுள்ளது.
முழுவதும்
குளிர் சாதன வசதி செய்யப்பட்ட இந்த மையத்தின் மூலம் 500 மீ., வரை காற்றின் தரத்தை பரிசோதிக்க
முடியும். 24 மணி நேரமும் இயங்கும் வகையில் குளிர் சாதன வசதியும், மின்கல சேமிப்பு
வசதியும் செய்யப்படவுள்ளது. ஒவ்வொரு 15 நிமிடத்திற்கு ஒரு முறை காற்று மாசு குறித்து
இந்த மையம் மூலம் கணிக்கவும், பதிவு செய்யவும் முடியும்.
இதற்கான
மின்சார செலவு 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது.அந்த வகையில் நவீன சாதனத்துடன்
காற்று தரத்தை கண்காணிக்கும் தொடர் மையம் செயல்பட உள்ளதாகவும், டிச.,
மாதம் பணிகள் நிறைவடைந்து கண்காணிப்பு மையம் செயல்படும்,என அதிகாரிகள்
தெரிவித்தனர்.
(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.
Thursday, November 7, 2019
மாவட்ட அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்க நவ. 30 குள் விண்ணப்பிக்கலாம்!!
ராமநாதபுரம்
மாவட்ட அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்க விரும்புவோா் நவ. 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க
வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து
ராமநாதபுரம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநா் ரமேஷ்குமாா் விடுத்துள்ள செய்திக்
குறிப்பு:
சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் 2021ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் சா்வதேச திறன்
போட்டிகள் நடைபெற உள்ளன. இதையடுத்து முதற்கட்டமாக மாவட்ட அளவிலான திறன்போட்டியும்,
இரண்டாம் கட்டமாக மாநில அளவிலும், தேசிய அளவிலும் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
அந்தப்
போட்டிகளில் தோ்ந்தெடுக்கப்படும் மாணவா்கள் சீனாவில் நடக்கும் சா்வதேச திறன்போட்டியில்
பங்குபெறுவாா்கள். ஆகவே 6 துறைகளில் உள்ள 47 தொழிற் பிரிவுகளில் தங்களது தனித்திறனை
வெளிப்படுத்தும் விதமாக முதற்கட்ட போட்டிகள் நடைபெறவுள்ளன. மாவட்ட அளவிலான திறன் போட்டிகளுக்கு
நவ. 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும். போட்டி நடைபெறும் நாள், இடம் பின்னா்
அறிவிக்கப்படும்.
போட்டிகளில்
கடந்த 1999 ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்த மாணவ, மாணவிகள், இளைஞா்கள் பங்கேற்க தகுதியுடையவா்கள்.
முறையான கல்வி பெறாதவா்கள் முதல் தொழிற்பயிற்சி நிலையம், தொழில்நுட்ப, பொறியியல் கல்லூரி,
பட்ட மேற்படிப்பு, தொழில் செய்பவா்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
இப்போட்டியில்
பங்கேற்க விரும்புவோா் இணையதள முகவரியில் விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
மேலும் ராமநாதபுரம்
மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநா் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், ஆட்சியா் அலுவலக
வளாகம் என்ற முகவரியில் தொடா்பு கொண்டும் விவரங்களைப் பெறலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம் !!
ராமநாதபுரம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட
குறைதீா்க்கும் கூட்டம் நவ. 9 ஆம் தேதி 9 ஊா்களில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பு: மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும்
சுழற்சி முறையில் குறிப்பிட்ட ஒரு கிராமத்தில் பொதுவிநியோகத்திட்ட குறைதீா்க்கும் முகாம்
நடத்தப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு மாதத்துக்கான
குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறும் இடங்கள் விவரம்:
ராமநாதபுரம் தோ்போகி,
ராமேசுவரம்,
திருவாடானை,
தோட்டாமங்கலம்,
பரமக்குடி மோசுக்குடி,
முதுகுளத்தூா் மேலக்கொடுமலூா்,
கடலாடி
மீனங்குடி,
கமுதி சீமானேந்தல்,
கீழக்கரை பனையடியேந்தல்,
ஆா்.எஸ்.மங்கலம் வரவணி
ஆகிய
கிராமங்களில் நடைபெறவுள்ளது.
பொதுமக்கள் பொதுவிநியோகத் திட்டம் சம்பந்தமான
தங்களின் குறைகள் மற்றும் மின்னணு குடும்ப அட்டைகளில் பிழைத்திருத்தம், புகைப்படம்
பதிவேற்றம், பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் போன்ற குறைகளுக்கு தீா்வு காண,
வரும் நவ. 9 ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு அந்தந்த பகுதிக்கான குறைதீா்க்கும்
முகாம்களில் மனுக்களை அளித்து பயன்பெறலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.
Thursday, October 31, 2019
ராமநாதபுரம் மாவட்டத்தில் இடைவிடாமல் அடைமழை; நிறையும் நீர்நிலைகள்!!
வங்க
கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும்
என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
அதன்படி
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக இடைவிடாமல் அடைமழை பெய்து வருகிறது. தீபாவளி
அன்று இரவில் தொடங்கிய மழை கடந்த 2 நாட்களாக பகலிலும் இரவிலும் தொடர்ச்சியாக விட்டுவிட்டு
அடை மழையாக பெய்து வருகிறது. முதலில் இரவில் மட்டுமே பெய்து வந்த மழை நேற்று பகலிலும்
பலத்த காற்றுடன் அடைமழையாக பெய்து வருகிறது. இதன்காரணமாக அனைத்து நீர்நிலைகளிலும் அதிகஅளவில்
தண்ணீர் சேர்ந்து வருகிறது. ஒருசில நீர்நிலைகள் அதன் கொள்ளளவை எட்டும் அளவிற்கு தண்ணீர்
சேர்ந்துள்ளது. மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் வெட்டப்பட்டு காட்சிப்பொருளாக இருந்த
பண்ணைக் குட்டைகளில் இந்த தொடர் மழையால் தண்ணீர் சேர்ந்துள்ளது. பல பண்ணைக் குட்டைகள்
நிரம்பி பார்க்கவே மகிழ்ச்சி தரும்வகையில் காட்சி அளிக்கிறது.
வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு நன்றாக பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிகாலை முதலே தங்களின் விவசாய நிலங்களில் ஆர்வமுடனும் நம்பிக்கையுடனும் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்மழையால் மாவட்டம் முழுவதும் விவசாய நிலங்கள் அனைத்தும் பச்சை பசேல் என்று காட்சி அளிக்கிறது.கடந்த 4 ஆண்டுகளாக வறட்சியாக வெடிப்பு ஏற்பட்டு காணப்பட்ட வயல்வெளிகள் எல்லாமல் பயிர்கள் வளர்ந்து காணப்படுவது காண்பவர்களின் மனதை கவரும் வகையில் உள்ளது.
மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
கடலாடி-67,
கமுதி-60.30,
முதுகுளத்தூர்-40,
வாலிநோக்கம்-35,
ராமநாதபுரம்-33,
திருவாடானை-29.2,
பாம்பன்-29.2,
ராமேசுவரம்-25.2,
தீர்த்தாண்டதானம்-26,
மண்டபம்-24.6,
தங்கச்சிமடம்-24.5,
தொண்டி-20,
வட்டாணம்-10,
ஆர்.எஸ்.மங்கலம்-16,
பரமக்குடி-16.8,
பள்ள
மோர்குளம்-18.5.
(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.
ராமநாதபுரத்தில் நாளை நவ-1ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்!!
ராமநாதபுரம்
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் தனியாா் நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு
முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
வேலைவாய்ப்பு
அலுவலகத்தின் மூலம் தனியாா் நிறுவனங்களுக்கு தேவையான ஊழியா்கள், அலுவலா்களைத் தோ்வு
செய்யும் வேலைவாய்ப்பு முகாமானது வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டுவருகின்றன.
இந்த
முகாமில் பத்தாம் வகுப்பு படித்துவா்கள் முதல் பட்டம் பயின்றவா்கள் வரை பங்கேற்கலாம்.
இதில் பிரபல தனியாா் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான கல்வித்தகுதி உடையவா்களை தோ்வு
செய்து பணி ஆணையும் வழங்கி வருகின்றனா். ஆகவே ராமநாதபுரம் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பற்ற
இளைஞா்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை தோறும் நடந்து வரும் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.
வெள்ளிக்கிழமை
(நவ.1) காலையில் அனைத்துக் கல்விச் சான்றுகள் மற்றும் ஆதாா் அட்டை உள்ளிட்டவற்றுடன்
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வரவேண்டும் என வேலை வாய்ப்பு அலுவலக அதிகாரிகள்
தெரிவித்துள்ளனா்.
(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.
ராமநாதபுர மாவட்டத்தில் மூடப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகள் குறித்து "வாட்ஸ்–அப்" -ல் புகார் தெரிவிக்கலாம்!!
ராமநாதபுரம்
நகரசபை ஆணையாளர் விஸ்வநாதன் கூறியதாவது:–
ராமநாதபுரத்தில்
தற்போது வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்து வருகிறது. இந்த மழைநீர் பல பகுதிகளில் தேங்கி
நிற்பதாக புகார் வந்து உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகரில் 3 இடங்களில்
தூர்ந்து காணாமல் போன வடிகால்களை கண்டுபிடித்து அதன்வழியாக மழைநீர் சீராக செல்ல நடவடிக்கை
எடுக்கப்பட்டு உள்ளது. ராமநாதபுரம் நகராட்சி பகுதிகளில் பல ஆண்டுகள் பயன்படாமல் உள்ள
ஆழ்துளை கிணறுகள், மூடப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகள் குறித்து ஆண்டுதோறும்
நகரசபை பொறியியல் பிரிவினர் கணக்கெடுத்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் ராமநாதபுரம் நகரசபை பகுதியில் அதுபோன்ற ஆழ்துளை கிணறுகள் இல்லை என்பது
தெரியவந்துள்ளது.
இதுதவிர,
நகராட்சி எல்லை பகுதியில் ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் திறந்த நிலையில் ஆபத்தான முறையில்
இருப்பது தெரிந்தால் பொதுமக்கள் எனது செல்போன் வாட்ஸ்–அப் 7397382164 எண்ணுக்கு அதனை
புகைப்படமாகவோ, வீடியோவாகவோ எடுத்து அனுப்பினால் 24 மணி நேரத்திற்குள் உரிய நடவடிக்கை
எடுத்து சரிசெய்யப்படும். மேலும். பாதாள சாக்கடை மூடிகள் உடைந்திருந்தாலோ, திறந்திருந்தாலோ
இதே எண்ணிற்கு தகவல் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
மழைகாலம் என்பதால் மழைக்கால தொற்று நோய்கள் பரவும் ஆபத்து உள்ளது. இதனை தடுக்கும் வகையில் குடிநீரை குளோரினேசன் செய்து சுத்தமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகரின் பல இடங்களில் மழைநீர் செல்லமுடியாத அளவிற்கு வடிகால்கள் பலகாலமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வடிகால்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். இல்லாவிட்டால் சட்டப்படி கடும்நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றப்படும்.
மழைகாலம் என்பதால் மழைக்கால தொற்று நோய்கள் பரவும் ஆபத்து உள்ளது. இதனை தடுக்கும் வகையில் குடிநீரை குளோரினேசன் செய்து சுத்தமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகரின் பல இடங்களில் மழைநீர் செல்லமுடியாத அளவிற்கு வடிகால்கள் பலகாலமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வடிகால்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். இல்லாவிட்டால் சட்டப்படி கடும்நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றப்படும்.
இவ்வாறு
அவர் கூறினார்.
(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.
Tuesday, October 29, 2019
ராமநாதபுரத்தில் ஆட்டோ டிரைவர் குத்திக்கொலை!!
ராமநாதபுரம்
அருகே துரத்தியேந்தல் பகுதியை சேர்ந்த அமானுல்லா மகன்அமீர் உசேன் 35. இவர் நேற்று மாலை
4:00 மணிக்கு ராமநாதபுரம் ரோமன் சர்ச்ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில் கத்திக்குத்து காயங்களுடன்
உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
அவரை
மருத்துவமனை கொண்டு சென்றபோது இறந்து விட்டார். அமீர் உசேன் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார்.
இவர் மீது கேணிக்கரை, பஜார், தேவிப்பட்டினம், உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் கஞ்சா விற்பனை
மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளது.இவர் இறந்தபோது இவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சா
கைப்பற்றப்பட்டுள்ளது.
கஞ்சா
விற்பனையில்ஏற்பட்ட தொழில் போட்டியால் கொலை நடந்திருக்கலாம். அல்லது போதை அதிகரித்து
அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததா என்ற கோணத்தில் பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.
இறந்த அமீர் உசேனுக்கு மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.
(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.
Saturday, October 26, 2019
தென்னை மரங்களுக்கு பயிர் காப்பீட்டு திட்டம்!!
திருப்புல்லாணி
வட்டாரத்தில் சுமார் 2800 எக்டரில் தென்னை பயிரிடப்பட்டு வருகிறது. தற்சமயம் தென்னை
மரங்களுக்கு பயிர் காப்பீட்டு திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னை மரங்களை
காப்பீடு செய்வதன் மூலமாக வெள்ளம், புயல், வறட்சி போன்ற இயற்கை பேரிடர்களினாலும், நில
அதிர்வு, ஆழிப்பேரலை மற்றும் பூச்சி தாக்குதலினாலும் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டால்
இழப்பீட்டு தொகை காப்பீட்டு நிறுவனம் மூலமாக வழங்கப்படும். ஆனால் திருட்டு மற்றும்
வேண்டுமென்றே பராமரிக்கப்படாமல் விடப்படும் தோட்டங்கள், மனிதன் மற்றும் மிருகங்களினால்
ஏற்படும் அழிவு, நோய்வாய்ப்பட்ட கன்றுகள் போன்ற இழப்புகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்
படாது.
தென்னை
மரங்களை காப்பீடு செய்வதற்கு விவசாயிகள் தனிப்பயிராகவோ, ஊடுபயிராகவோ, வரப்பில் வரிசையாகவோ,
வீட்டுத்தோட்டத்திலோ குறைந்தபட்சம் பலன் தரக்கூடிய 5 மரங்களாவது சாகுபடி செய்திருக்க
வேண்டும். வளமான, ஆண்டுக்கு 30 காய்களுக்கு மேல் மகசூல் தரக்கூடிய மரங்களை மட்டும்
இந்த திட்டத்தில் சேர்க்கலாம். ஒரு எக்டருக்கு அதிகபட்சம் 175 மரங்கள் மட்டுமே காப்பீடு
செய்யமுடியும். தென்னை காப்பீடு செய்த விவசாயிகள், காப்பீடு செய்த தென்னை மரங்களை வண்ணம்
பூசி 1,2,3, என எண்கள் குறிக்கவேண்டும்.
இத்திட்டத்தில்
சேர விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள மரங்களின் எண்ணிக்கை, வயது, பராமரிப்பு முறை
மற்றும் தற்போதைய நிலை பற்றிய சுய உறுதிமுன்மொழிவு அளிக்கவேண்டும். காப்பீடு செய்துள்ள
காலத்தில் காப்பீடு நிறுவனம் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம். விவசாயிகள் தவறான
உள்நோக்கம் கொண்டு உண்மைக்கு புறம்பான தகவல்கள் அளித்து இருந்தால் காப்பீடு நிராகரிக்கப்படும்.
தென்னை விவசாயிகள் அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்புகொண்டு படிவத்தினை
பூர்த்தி செய்து அளிக்கவேண்டும். மேலும் எண்கள் குறிக்கப்பட்ட மரங்களின் புகைப்படத்தை
அளிக்கவேண்டும்.
இந்த
ஆண்டில் எந்த தேதியில் காப்பீடு செலுத்தப்படுகிறதோ அதற்கு அடுத்த மாதம் 1-ந்தேதியில்
இருந்து ஒரு வருட காலத்திற்கு பாலிசி வழங்கப்படும்.
விவசாயிகள்
இழப்பீடு கோரிக்கை மனுவை பாதிக்கப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள் வேளாண் காப்பீட்டு
நிறுவனத்திற்கு தெரிவிக்கவேண்டும். பாலிசி காலத்தில் மரங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டால்
இழப்பீடு வழங்கப்படும். ஏற்கனவே பாதிக்கப்பட்ட மரங்கள் காப்பீடு செய்யப்பட்டிருந்தாலோ
அல்லது காப்பீடு செய்யப்பட்ட மரங்கள் வேண்டுமென்றே பராமரிக்கப்படாமல் இருந்தாலோ இழப்பீடு
வழங்கப்படமாட்டாது. பாதிக்கப்பட்ட மரங்களை வேளாண்மைத்துறை அலுவலர்கள் மற்றும் தென்னை
வளர்ச்சி வாரிய அலுவலர்கள் கொண்ட குழு ஆய்வு செய்து இழப்பீடு வழங்கப்படும். எனவே தென்னை
விவசாயிகள் அனைவரும் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர்
வீரராகவராவ் கேட்டுக்கொண்டுள்ளார்.
(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.
Wednesday, October 23, 2019
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை!!
தமிழகத்தில்
வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக
பலத்த மழை பெய்து வருகிறது.
குறிப்பாக ராமேசுவரம், மண்டபம், பாம்பன் பகுதிகளில் அதிக அளவில் மழை பதிவாகி வருகிறது. மாவட்டத்தில் பரவலாக நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் தொடங்கிய மழை இடைவிடாது விடிய விடிய கொட்டியது.
குறிப்பாக ராமேசுவரம், மண்டபம், பாம்பன் பகுதிகளில் அதிக அளவில் மழை பதிவாகி வருகிறது. மாவட்டத்தில் பரவலாக நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் தொடங்கிய மழை இடைவிடாது விடிய விடிய கொட்டியது.
இதனால்
தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்து வெள்ளக்காடாக காட்சி அளித்தது. கடந்த 3 ஆண்டுகளுக்கும்
மேலாக மழையின்றி வாடி வறண்டு போய் காணப்பட்ட நீர்நிலைகளுக்கு இந்த மழையினால் நீர்வரத்து
ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ராமநாதபுரத்தில் ஆயுதப்படை மைதானம் முழுவதும் மழைநீர் தேங்கி, குட்டி குளம் போல் காட்சி அளித்தது. ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் அமைந்துள்ள ‘ஹெலிபேடு’ தளத்தில் மழைநீர் சூழ்ந்தது. ராமநாதபுரம் போக்குவரத்துக்கழக பணிமனை பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழை காரணமாக சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் சுவரின் அருகில் நிறுத்தி வைத்திருந்த 10-க்கும் மேற்பட்ட பஸ்களின் பின்பக்க கண்ணாடிகள் நொறுங்கி, அந்த பஸ்கள் சேதம் அடைந்தன. போக்குவரத்துக்கழக பணிமனையிலும் மழைநீர் சூழ்ந்து நின்றது.
ராமநாதபுரம் அருகே குயவன்குடி பகுதியில் பள்ளிவாசல் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது. எமனேசுவரம் குருநாதன் கோவில் தெருவில் வசிக்கும் துளசிராமன் மகன் முருகன்(வயது 40) என்பவரின் வீட்டுச்சுவர் விழுந்தது. இந்த சம்பவங்களில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் மைதானம் முழுவதும் மழைநீர் தேங்கி நின்றது. மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருவதாலும் தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதாலும் இந்த ஆண்டு விவசாயம் நன்றாக இருக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து விவசாய பணிகளை தொடங்க ஆயத்தமாகி வருகின்றனர்.
ராமநாதபுரம் அருகே லாந்தை கிராமத்தில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைந்துள்ளது. இந்த சுரங்கப்பாதை அமைக்கும்போதே, மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி அந்த வழியாக செல்ல முடியாத நிலை ஏற்படும் என்றும், தங்கள் பகுதி தனித்தீவாக மாறிவிடும் என்றும், அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில் நேற்று பெய்த ஒருநாள் கனமழைக்கே அந்த சுரங்கப்பாதை முழுவதும் மழைநீர் தேங்கி மக்கள் யாரும் செல்ல முடியாதநிலை ஏற்பட்டது. இதனால் லாந்தை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மழைநீரை உடனடியாக அகற்றக்கோரி சாலை மறியலுக்கு முயன்றனர். போலீசார் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் விரைந்து வந்து சமாதானப்படுத்தி மழைநீரை அகற்றுவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
ராமநாதபுரம் முதல் பரமக்குடி வரை பல இடங்களில் ரெயில்வே சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியது குறிப்பிடத்தக்கது.
மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நேற்று ஒருநாள் உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர் வீரராகவராவ் உத்தரவிட்டார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
மண்டபம் - 177
ராமேசுவரம் - 165.10
பாம்பன் - 183
தங்கச்சிமடம் - 168.3
ராமநாதபுரம் - 39
திருவாடானை - 59.6
ஆர்.எஸ்.மங்கலம் - 33
தீர்த்தாண்டதானம் - 47.13
தொண்டி - 50
வட்டாணம் - 31
பள்ளமோர்குளம் - 13.5
பரமக்குடி - 63.6
முதுகுளத்தூர் - 41.2
கமுதி - 9.5
கடலாடி - 6.2
வாலிநோக்கம் - 13.8
மாவட்டத்தில் அதிகபட்சமாக பாம்பனில் 183 மில்லி மீட்டர் மழையும், மண்டபத்தில் 177 மி.மீ., ராமேசுவரத்தில் 165 மி.மீ. மழையும் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
ராமநாதபுரத்தில் ஆயுதப்படை மைதானம் முழுவதும் மழைநீர் தேங்கி, குட்டி குளம் போல் காட்சி அளித்தது. ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் அமைந்துள்ள ‘ஹெலிபேடு’ தளத்தில் மழைநீர் சூழ்ந்தது. ராமநாதபுரம் போக்குவரத்துக்கழக பணிமனை பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழை காரணமாக சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் சுவரின் அருகில் நிறுத்தி வைத்திருந்த 10-க்கும் மேற்பட்ட பஸ்களின் பின்பக்க கண்ணாடிகள் நொறுங்கி, அந்த பஸ்கள் சேதம் அடைந்தன. போக்குவரத்துக்கழக பணிமனையிலும் மழைநீர் சூழ்ந்து நின்றது.
ராமநாதபுரம் அருகே குயவன்குடி பகுதியில் பள்ளிவாசல் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது. எமனேசுவரம் குருநாதன் கோவில் தெருவில் வசிக்கும் துளசிராமன் மகன் முருகன்(வயது 40) என்பவரின் வீட்டுச்சுவர் விழுந்தது. இந்த சம்பவங்களில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் மைதானம் முழுவதும் மழைநீர் தேங்கி நின்றது. மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருவதாலும் தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதாலும் இந்த ஆண்டு விவசாயம் நன்றாக இருக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து விவசாய பணிகளை தொடங்க ஆயத்தமாகி வருகின்றனர்.
ராமநாதபுரம் அருகே லாந்தை கிராமத்தில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைந்துள்ளது. இந்த சுரங்கப்பாதை அமைக்கும்போதே, மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி அந்த வழியாக செல்ல முடியாத நிலை ஏற்படும் என்றும், தங்கள் பகுதி தனித்தீவாக மாறிவிடும் என்றும், அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில் நேற்று பெய்த ஒருநாள் கனமழைக்கே அந்த சுரங்கப்பாதை முழுவதும் மழைநீர் தேங்கி மக்கள் யாரும் செல்ல முடியாதநிலை ஏற்பட்டது. இதனால் லாந்தை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மழைநீரை உடனடியாக அகற்றக்கோரி சாலை மறியலுக்கு முயன்றனர். போலீசார் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் விரைந்து வந்து சமாதானப்படுத்தி மழைநீரை அகற்றுவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
ராமநாதபுரம் முதல் பரமக்குடி வரை பல இடங்களில் ரெயில்வே சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியது குறிப்பிடத்தக்கது.
மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நேற்று ஒருநாள் உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர் வீரராகவராவ் உத்தரவிட்டார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
மண்டபம் - 177
ராமேசுவரம் - 165.10
பாம்பன் - 183
தங்கச்சிமடம் - 168.3
ராமநாதபுரம் - 39
திருவாடானை - 59.6
ஆர்.எஸ்.மங்கலம் - 33
தீர்த்தாண்டதானம் - 47.13
தொண்டி - 50
வட்டாணம் - 31
பள்ளமோர்குளம் - 13.5
பரமக்குடி - 63.6
முதுகுளத்தூர் - 41.2
கமுதி - 9.5
கடலாடி - 6.2
வாலிநோக்கம் - 13.8
மாவட்டத்தில் அதிகபட்சமாக பாம்பனில் 183 மில்லி மீட்டர் மழையும், மண்டபத்தில் 177 மி.மீ., ராமேசுவரத்தில் 165 மி.மீ. மழையும் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி:
தினத்தந்தி
(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com)
(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.
Monday, October 21, 2019
ராமநாதபுரம் அருகே ATM மையத்தில் ஏராளமான ATM கார்டுகள் சிதறி கிடந்ததால் பரபரப்பு!!
ராமநாதபுரம்
பாரதிநகர் டி-பிளாக் பஸ் நிறுத்தம் அருகே தனியார் வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த
மையத்தில் நேற்று காலை ஏராளமான ஏ.டி.எம். கார்டுகள் சிதறி கிடந்தன. இந்தநிலையில் ஏ.டி.எம்.
மையத்திற்கு வந்த சமூக ஆர்வலர் பாலா என்பவர் அந்த கார்டுகளை பார்த்தபோது அது பலரின்
பெயரில் உள்ள பல வங்கிகளின் ஏ.டி.எம். கார்டுகள் என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு
தகவல் தெரிவித்தார்.
கேணிக்கரை
போலீசார் விரைந்து வந்து அந்த மையத்தில் பார்த்தபோது 14 ஏ.டி.எம். கார்டுகள் இருந்ததை
கண்டு அதனை கைப்பற்றி கொண்டு சென்றனர். இந்த கார்டுகள் அனைத்தும் பலரின் பெயரில் பல
வங்கிகளில் பெறப்பட்ட கார்டுகள் என்பதும், இந்த கார்டுகள் அனைத்திற்கும் காலாவதி காலம்
இன்னும் பல மாதங்கள் இருந்ததும் தெரியவந்தது. சர்வதேச தர அனுமதி கார்டுகளும் இதில்
இருப்பது தெரியவந்துள்ளது.
பொதுவாக
ஏ.டி.எம். கார்டுகள் சேதமடைந்திருந்தாலோ அல்லது காலாவதி காலம் முடிந்திருந்தாலோ வாடிக்கையாளர்கள்
புதிய கார்டு வந்ததும் அதனை ஏ.டி.எம். மையத்திற்கு சென்று புதுப்பித்து புதிய பாஸ்வேர்டு
போட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வந்ததும் பழைய கார்டினை இனி பயனில்லை என்று கருதி அந்த
பகுதியிலேயே போட்டுவிட்டு செல்வது வழக்கம்.
ஆனால்,
இந்த மையத்தில் கண்டெடுக்கப்பட்ட கார்டுகள் அனைத்தும் இன்னும் செல்லத்தக்க வகையிலான
நடைமுறையில் உள்ள கார்டுகள் என்பதுதான் பலத்த சந்தேகத்தினை ஏற்படுத்தி உள்ளது. சமீபகாலமாக
ஏ.டி.எம். மையங்களில் போலி கார்டுகள், திருடப்பட்ட கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுப்பது
அடிக்கடி நடைபெற்று வருகிறது.
சமீபத்தில்
ராமநாதபுரத்தில் காரைக்குடி மானகிரி நெசவாளர் காலனியை சேர்ந்த கோபி(வயது 25) என்பவர்
ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் எடுக்க வரும் முதியவர்களை ஏமாற்றி அவர்களின் கார்டுகளை
நைசாக வாங்கி கொண்டு பழைய கார்டுகளை கொடுத்து அனுப்பிவிட்டு அவர்களின் வங்கி கணக்கில்
இருந்து பல லட்சம் ரூபாயை திருடி மாட்டிக்கொண்டது தெரிந்ததே.
இதேபோன்று
யாரேனும் இந்த ஏ.டி.எம். கார்டுகளை திருடியோ ஏமாற்றியோ கொண்டு வந்து பணத்தினை எடுத்துவிட்டு
கார்டுகளை கீழே போட்டுச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதுதொடர்பாக
போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு
கேமராவை பரிசோதனை செய்தும், கைப்பற்றப்பட்ட கார்டுகளின் விவரங்களின் அடிப்படையிலும்
விசாரணை செய்த பின்னரே கார்டுகள் கிடந்ததற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று போலீசார்
தெரிவித்துள்ளனர்.
செய்தி:
தினத்தந்தி
(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com)
செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.
Sunday, October 20, 2019
ராமநாதபுரம் மாவட்டத்தில் போதை பொருள் விற்பனையை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்!!
ராமநாதபுரம்
மாவட்டத்தில் போதை பொருள் விற்பனை அதிகரிப்பால் விபத்துக்கள், மரணங்கள் அதிகரிப்பதை
தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நவாஸ்கனி எம்.பி., ஓம்பிரகாஷ் மீனா எஸ்.பி.,
யிடம் மனு அளித்துள்ளார்.
பின்னர் அவர் கூறியதாவது:
இன்று இளைஞர்களை வெகுவாக மழுங்கடிக்கும்
போதை பொருள்களை தடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு போதைப்
பொருட்களால் தொடர்ந்து அடுக்கடுக்காக மரணங்களும், விபத்துக்களும், பல்வேறு சமூக தீங்குகளும்
நடக்கின்றன. அதனை பயன்படுத்துபவர்கள் மட்டு மின்றி அவர்களின் குடும்பம், பகுதி, மாவட்டம்,
என நாட்டின் வளர்ச்சிக்கே பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அடுத்த தலைமுறையின் வளர்ச்சிக்கு
முட்டுக்கட்டையாக உள்ளது.
கீழக்கரை கப்பலடி கடற்கரைப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட
இளைஞரை அப்பகுதி ரோந்து போலீசார் கைது செய்துள்ளது பாராட்டத்தக்கது.
போதை பொருள்களில்
இருந்து மக்களை பாதுகாக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என அவர் தெரிவித்துள்ளார்.
(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.
பாம்பன் கடலில் ரூ.246 கோடி நிதியில் புதிய ரெயில் பாலம்!!
ராமேசுவரம்
தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரெயில்வே பாலம் முக்கிய பங்கு வகிக்கிறது.
104 ஆண்டுகளை கடந்து மிகவும் பழமையான பாலமாக உள்ளதால் பாம்பன் கடலில் புதிதாக ரெயில்
பாலம் கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி அதற்கான நிதியும் ஒதுக்கி விட்டது.
புதிய ரெயில் பாலமானது குஜராத்தில் உள்ள தனியார் கன்சல்டன்சி நிறுவனமே செய்ய உள்ளது.
புதிய ரெயில் பாலத்திற்காக கடலில் துளை போடும் எந்திரம் உள்ளிட்ட பல வகையான உபகரணங்கள்
பாம்பன் ரோடு பாலத்தின் நுழைவு பகுதி மற்றும் மண்டபம் ரெயில் நிலையம் அருகில் கொண்டு
வரப்பட்டு இறக்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த
நிலையில் பாம்பன் கடலில் புதிய ரெயில் பாலம் அமைய உள்ள இடத்தினை ரெயில்வே துறையோடு
சேர்ந்த ஆர்.வி.என்.எல். நிதித்துறை தலைமை அதிகாரி ஆர்.கே.சவுத்ரி, ஆர்.வி.என்.எல்.
முதன்மை திட்ட அதிகாரி பி.கே.ரெட்டி, துணை பொது மேலாளர் ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள்
குழுவினர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். புதிய ரெயில் பாலம் மற்றும் தூக்குப்
பாலத்தின் மாதிரி வரைபடங்களை பார்வையிட்ட அவர்கள் பாலத்திற்கான முழு விவரங்களையும்
கேட்டறிந்தனர்.
பின்னர் ஆர்.வி.என்.எல். முதன்மை திட்ட மேலாளர் பி.கே.ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-
பாம்பன் கடலில் தற்போது உள்ள ரெயில் பாலத்தில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் ரூ.246 கோடி நிதியில் புதிய ரெயில் பாலம் கட்டப்பட உள்ளது. புதிய பாலத்தின் பணிகளானது அடுத்த வாரம் தொடங்கப்படும். புதிய ரெயில் பாலமானது மின்சார ரெயில்களும் செல்லும் வகையில் இருவழி தண்டவாள பாதையாக அமைக்கப்பட உள்ளது. புதிய ரெயில் பாலமானது 100 தூண்களை கொண்டும், 99 இரும்பினால் ஆன கர்டர்களை கொண்டும் கட்டப்பட உள்ளது. கடலில் ஒவ்வொரு தூணும் 16 மீட்டர் அகலத்திலும், கடலில் இருந்து 3 மீட்டர் உயரத்திலும் அமைய உள்ளது.
தூக்குப் பாலத்தின் இருபுறமும் நமது நாட்டின் தேசிய கொடியை பிரதிபலிப்பது போல் கட்டப்பட உள்ளது. இரவு நேரங்களில் தேசிய கொடியின் பிரதிபலிப்பு பிரகாசமாக இருக்கும். கப்பல்கள் வரும் போது தூக்குப்பாலமானது 22 மீட்டர் உயரம் வரையிலும் திறக்கப்படும்.
புதிய ரெயில் பாலம் முழுமையாக உள் நாட்டு தொழில்நுட்பத்தில் மட்டுமே கட்டப்பட உள்ளது. கண்காணிப்பு கேமரா, சென்சார், தகவல் தொடர்பு சாதனம் உள்ளிட்ட பல வசதிகளும் தூக்குப்பாலத்தில் அமைய உள்ளது. ஸ்பெயின் நாட்டில் அமைந்துள்ள தூக்குப்பாலத்தை போலவே பாம்பன் கடலில் புதிய ரெயில் பாலத்தின் மைய பகுதியில் தூக்குப்பாலம் கட்டப்பட உள்ளது. 2 வருடத்தில் இந்த புதிய பாலத்தின் பணிகள் முடிக்கப்படும்.
பின்னர் ஆர்.வி.என்.எல். முதன்மை திட்ட மேலாளர் பி.கே.ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-
பாம்பன் கடலில் தற்போது உள்ள ரெயில் பாலத்தில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் ரூ.246 கோடி நிதியில் புதிய ரெயில் பாலம் கட்டப்பட உள்ளது. புதிய பாலத்தின் பணிகளானது அடுத்த வாரம் தொடங்கப்படும். புதிய ரெயில் பாலமானது மின்சார ரெயில்களும் செல்லும் வகையில் இருவழி தண்டவாள பாதையாக அமைக்கப்பட உள்ளது. புதிய ரெயில் பாலமானது 100 தூண்களை கொண்டும், 99 இரும்பினால் ஆன கர்டர்களை கொண்டும் கட்டப்பட உள்ளது. கடலில் ஒவ்வொரு தூணும் 16 மீட்டர் அகலத்திலும், கடலில் இருந்து 3 மீட்டர் உயரத்திலும் அமைய உள்ளது.
தூக்குப் பாலத்தின் இருபுறமும் நமது நாட்டின் தேசிய கொடியை பிரதிபலிப்பது போல் கட்டப்பட உள்ளது. இரவு நேரங்களில் தேசிய கொடியின் பிரதிபலிப்பு பிரகாசமாக இருக்கும். கப்பல்கள் வரும் போது தூக்குப்பாலமானது 22 மீட்டர் உயரம் வரையிலும் திறக்கப்படும்.
புதிய ரெயில் பாலம் முழுமையாக உள் நாட்டு தொழில்நுட்பத்தில் மட்டுமே கட்டப்பட உள்ளது. கண்காணிப்பு கேமரா, சென்சார், தகவல் தொடர்பு சாதனம் உள்ளிட்ட பல வசதிகளும் தூக்குப்பாலத்தில் அமைய உள்ளது. ஸ்பெயின் நாட்டில் அமைந்துள்ள தூக்குப்பாலத்தை போலவே பாம்பன் கடலில் புதிய ரெயில் பாலத்தின் மைய பகுதியில் தூக்குப்பாலம் கட்டப்பட உள்ளது. 2 வருடத்தில் இந்த புதிய பாலத்தின் பணிகள் முடிக்கப்படும்.
(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.