Monday, December 10, 2018
கீழக்கரை இந்தியன் வங்கி இடமாற்றம், புதிய அலுவலக திறப்புவிழாவில் ஏராளமானோர் பங்கேற்பு!!
தபால் அலுவலக சாலையில் மாடி பகுதியில் செயல்பட்டு வந்த இந்தியன் வங்கி தற்போது கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் இருக்கும் சித்தி விநாயகர் கோவில் எதிர்புறம் இம்பாலா சுல்தான் காம்ப்ளக்சில் மாற்றப்பட்டு புதிய அலுவலகம் இன்று திறக்கப்பட்டது.
இஸ்லாமிய பைத்துல் மால் செயலாளர் அப்துல் மலீக் திறந்து
வைத்தார்.வங்கியின் பாதுகாப்பு பெட்டக அறையை காம்ப்ளக்ஸ் உரிமையாளர் இம்பாலா
சுல்தான் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், கீழக்கரை DSP, கீழக்கரை ரோட்டரி சங்கத்தினர், அ.தி.மு.க
பிரமுகர் இம்பாலா உசைன் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
வங்கியின் மேலாளர்கள் மற்றும் ஊழியர்கள் விழா
ஏற்பாட்டினை செய்திருந்தனர்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
108 சேவைக்கான டிரைவர், டெக்னீசியன் பணிக்கான தேர்வு நாளை (டிச-11) நடக்கிறது!!
ஆம்புலன்ஸ் 108 சேவைக்கான டிரைவர், டெக்னீசியன்
பணிக்கு இன்று பரமக்குடி அரசு மருத்துவமனையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ்
செல்வன் கமுதியில் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
செல்வன் கமுதியில் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
மெடிக்கல் டெக்னீசியன் பணிக்கு இளங்கலை அறிவியல் படிப்பான தாவரவியல், விலங்கியல், மைக்ரோ
பையாலஜி, பையோ- கெமிஸ்ட்ரி,
அல்லது 'பிளஸ் 2' தேர்ச்சியுடன், 2 ஆண்டுகள் நர்சிங் அல்லது 3 ஆண்டு நர்சிங், அல்லது
இளங்கலை நர்சிங் படித்திருக்க வேண்டும்.
19-
30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
13,650 ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆம்புலன்ஸ் டிரைவர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகு ரக வாகன லைசென்ஸ், மூன்றாண்டுகளுடன் 'பேஜ் லைசென்ஸ்' பெற்று, ஓராண்டு நிறைவு பெற்றிருக்கவேண்டும்.
24-
35 வயதிற்குள் தேவை.
13,100
ரூபாய் சம்பளம் வழங்கப்படும்.
கூடுதல் தகவலுக்கு 73977 24828, 73974 44156 அலைபேசியில்
தொடர்பு கொள்ளலாம்,
என்றார்.
செய்தி:
தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)