முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, September 5, 2018

ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 பேர் சிறந்த ஆசிரியர்களாக தேர்வு!!

No comments :
தமிழக அரசு சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி வருகிறது.

அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 11 பேர் சிறந்த ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

எம்.மோகனதாஸ்,தலைமை ஆசிரியர் சக்கரக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி

வி.விஜயாபாய், அரசுமேல்நிலைப்பள்ளி, சுந்தரபாண்டியபட்டணம்

லீலாவதி, தலைமை ஆசிரியை, திருப்பாலைக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி

எஸ்.நவநீதகிருஷ்ணன், முதுகலை ஆசிரியர் உத்தரகோசமங்கை அரசு மேல்நிலைப்பள்ளி

எஸ்.கருணாகரன், இடைநிலை ஆசிரியர் செங்குடி புனித மிக்கேல் மேல்நிலைப்பள்ளி

பிரேமலதா.பட்டதாரி ஆசிரியை வ.உ.சி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,மஞ்சள்பட்டினம் வளையனேந்தல்

ஜெ.அந்தோணி அமலோற்பவதாஸ், தலைமை ஆசிரியை,கடம்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி



எம்.வேலுச்சாமி தலைமை ஆசிரியர் , ஆனந்துார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

சி.மாணிக்கம்,தலைமை ஆசிரியை, முத்துராமலிங்கபட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

சாந்தி, தலைமை ஆசிரியை, தொண்டி மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

ராமச்சந்திரன்,தலைமை ஆசிரியர், கமுதி ஒன்றியம் உடைகுளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி

இவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டனி, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டனி மற்றும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டனி சார்பில் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்டத்தில் மூன்று நகராட்சிகளில் கமிஷனர் இல்லை; பணிகள் தேக்கம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில் மூன்று நகராட்சியில் கமிஷனர் இல்லை. ராமநாதபுரத்தில் அடுத்த நிலையில் உள்ள பொறியாளர் பணியிடமும் காலியாக இருப்பதால், வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் ராமநாதபுரம், ராமேஸ்வரம், கீழக்கரை, பரமக்குடி ஆகிய நான்கு நகராட்சிகள் உள்ளன. இதில் கீழக்கரையில் பணியாற்றிய கமிஷனர் வசந்தி ஒரு ஆண்டுக்கு முன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இன்று வரை இந்தப்பணியிடத்தில் கமிஷனர் நியமிக்கப்படவில்லை.

சில நாட்களுக்கு முன் போடப்பட்ட பதவி உயர்வில் பரமக்குடி கமிஷனர் நாராயணன் பதவி உயர்வுக்காக பழனி நகராட்சி ஆணையாளராகவும், ராமநாதபுரம் நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி தேனி நகராட்சிக்கும் பணியிட மாறுதல் செய்து உத்தரவிடப்பட்டது.
இதில் ராமநாதபுரம் நகராட்சி கமிஷனர் பணியிட மாறுதல் உடனடியாக ரத்து செய்யப்பட்டு ஆம்பூர் நகராட்சிக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார்.


இதன் காரணமாக நான்கு நகராட்சிகளில் மூன்று நகராட்சிகளுக்கு கமிஷனர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது ராமேஸ்வரம் கமிஷனர் வீரமுத்துக்குமார் மட்டுமே பணியில் உள்ளார். மூன்று நகராட்சிகளில் கமிஷனர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

மாவட்ட தலைநகரமான ராமநாதபுரத்தில் கமிஷனருக்கு அடுத்த நிலையில் உள்ள பொறியாளர் நடராஜன் 4 மாதங்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அந்தப்பணியிடத்தில் பொறியாளர் நியமிக்கப்படாத நிலை உள்ளது. இது போன்று நிர்வாகத்தை நடத்தும் அதிகாரிகள் இல்லாத நிலையில் நகராட்சிகளில் வளர்ச்சிப்பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது வாக்காளர்பட்டியல் சுருக்க திருத்தப்பட்டியல் செப்.,1 ல் வெளியிடப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. 31.10.2018 ல் வரைவு வாக்காளர் பட்டியலும்,5.1.19 ல் இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்படுகிறது. இந்த நேரத்தில் கமிஷனர்களை பணியிட மாற்றம் செய்ய முடியாது. அப்படியே அவசரம் கருதி பணியிட மாறுதல் செய்ய தேர்தல் கமிஷன் ஒப்புதல் பெற்றே மாற்ற முடியும். இனி கமிஷனர்கள் பணி நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பதவி உயர்வு பெற்றவர்களை ஆக., 31ல் பணியில் சேர அறிவுறுத்தப்பட்டதால், அந்த நாளில் அனைவரும் பணியில் சேர்ந்துவிட்டனர்.
பாதிக்கப்படுவது பொதுமக்களே, ஆக, அதிவிரைவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர் பொதுமக்கள்.


நன்றி: திரு. தாஹீர், கீழை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

8ம் வகுப்பு 10ம் வகுப்பு படித்தவர்கள் அரசு கோட்டாவில் ஐ.டி.ஐ -ல் சேர செப்-12க்குள் விண்ணப்பிக்கலாம்!!

No comments :
அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ.,களில் 50 சதவீதம் அரசு ஒதுக்கீட்டிற்கான மூன்றாம் கட்ட கலந்தாய்விற்கு செப்.,12 வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம், என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பரமக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் எஸ்.ரமேஷ்குமார் கூறியிருப்பது:

மாவட்டத்தில் அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதி தொழிற்பயிற்சி நிலையங்களால் ஒப்படைப்பு செய்யப்படும் 50 சதவீதம் அரசு இட ஒதுக்கீட்டிற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது. மீதம் உள்ள காலியிடங்கள் மற்றும் ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்துார் ஆகிய மூன்று இடங்களில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தற்போது அங்கீகாரம் பெறப்பட்டுள்ள தொழிற்பிரிவுகளுக்கும் சேர்த்து மூன்றாம் கட்ட கலந்தாய்வுக்காக விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பங்களை இணையதளத்தில்(ஆன்லைன்) செப்.,12 வரை பதிவு செய்யலாம்.

பரமக்குடி, ராமநாதபுரம் அரசு ஐ.டி.ஐ.,களில் எலக்ட்ரீசியன் தொழிற்பிரிவிலும்,
முதுகுளத்துார் அரசு ஐ.டி.ஐ.,யில் கம்மியர் மோட்டார் வண்டி தொழிற்பிரிவிலும் சேரலாம்,
எட்டாம் வகுப்பு தகுதியில் இன்ஜினியரிங் (பொது) 2 இடங்கள், எட்டாம் வகுப்பு இன்ஜினியரிங் அல்லாத பிரிவில் 46 இடங்கள்,
பத்தாம் வகுப்பு தகுதியில் இன்ஜினியரிங்(பொது) 74 இடங்கள், பத்தாம் வகுப்பு இன்ஜினியரிங் அல்லாத பிரிவில் 36 இடங்கள் உள்ளன.


இவ்வாறு கூறியுள்ளார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)