முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, June 20, 2018

ராமேஸ்வரம் கோயிலில் ரூ.72.27 லட்சம் உண்டியல் காணிக்கை வசூல!!

No comments :



ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் கடந்த ஒரு மாதத்தில் ரூ. 72.27 லட்சம் ரொக்கம், 135 கிராம் தங்கம் உண்டியல் காணிக்கையாக வரப்பெற்றுள்ளது. இக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, இணை ஆணையர் கோ.செ.மங்கையர்க்கரசி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 



இதில்,  ரூ.72 லட்சத்து, 27 ஆயிரத்து 307 ரொக்கம், 135 கிராம் தங்கம், 4.150 கிலோ வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். காணிக்கை எண்ணும் பணியில், சிவகங்கை இணை ஆணையர் ஜெகநாதன், உதவி ஆணையர் பாலகிருஷ்ணன், தக்கார் பிரதிநிதி வீரசேகரன், கோயில் பணியாளர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் ஈடுபட்டனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்பனா சாவ்லா விருதுக்கு தகுதியுடைய பெண்கள் வியாழக்கிழமைக்குள் (ஜூன் 21) விண்ணப்பிக்கலாம்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆண்டுதோறும் தமிழகத்தில் வீரதீரச் செயல்கள் மற்றும் சாகசங்கள் புரிந்த பெண்களுக்காக கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது. இதன்படி 2018 ஆம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்படவுள்ளது. 



இவ்விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது சுய விவர அறிக்கை, புகைப்படம், பத்திரிகை செய்திகள், சான்றிதழ்கள் மற்றும் வீரதீர சாதனைகள் பற்றிய விவரங்களை மூன்று ஸ்பைரல் பைண்டிங் நகல்களாக தயார் செய்து,

சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கம்,
மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகம், ராமநாதபுரம்

என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபாலிலோ வரும் 21 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


மேலும், விவரங்களுக்கு 04567-230238 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

உச்சிப்புளி கடற்படை விமானதளம் விமான நிலையமாக மாற்றப்படும் அமைச்சர்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து அமைச்சர் மணிகண்டன் அனைத்து துறை அதிகாரிகளுடன் பங்கேற்ற ஆய்வுகூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் நடராஜன் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அமைச்சர் மணிகண்டன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் டாக்டர் மணிகண்டன், கணிப்பாய்வு அலுவலர் சந்திரமோகன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:–

ராமநாதபுரம் மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பணிகள் மற்றும் வரும் காலங்களில் நிவேற்றப்பட உள்ள பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டோம். மாவட்டத்தில் அமைந்துள்ள சட்டக்கல்லூரிக்கு புதிதாக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நீண்டகால கோரிக்கையான மருத்துவ கல்லூரி அமைப்பதற்காக அமைச்சர் என்ற முறையில் நான் வைத்த கோரிக்கையை ஏற்று முதல்–அமைச்சர் பிரதமரிடம் மருத்துவ கல்லூரி அமைக்க அனுமதி வழங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இதற்கான அனுமதி விரைவில் கிடைக்க உள்ளது. மருத்துவ கல்லூரி அமைக்கவும், தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கவும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ராமேசுவரம் பகுதி மக்களின் தேவை கருதி பேய்கரும்பு பகுதியில் புதிதாக அரசு கலைக்கல்லூரி அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டு அதற்காக 5 ஏக்கர் இடம் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அப்பகுதியில் கல்லூரி தொடங்கப்படும்.
ராமநாதபுரத்தில் இடிந்த நிலையில் உள்ள அரசு ஊழியர் குடியிருப்பு முழுமையாக அகற்றப்பட்டு புதிதாக கட்டப்பட உள்ளது.

அச்சுந்தன்வயல் முதல் பட்டணம்காத்தான் வரை ரூ.25 கோடியில் தரமான சாலை அமைக்கப்பட உள்ளது. ராமேசுவரம், திருஉத்தரகோசமங்கை, திருப்புல்லாணி கோவிலை சுற்றிலும் சாலை அமைக்கப்பட உள்ளது. ராமநாதபுரம் நகர் போக்குவரத்து பணிமனை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு அந்த இடம் புதிய பஸ்நிலையமாக விரிவாக்கம் செய்யப்படும். திருவாடானையில் புதிய பஸ் பணிமனை அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் ராமநாதபுரம் புதிய போக்குவரத்து மண்டலமாக தரம் உயரும்.

இ–சேவை மையங்களின் அவசியம் கருதி முதல்கட்டமாக மாநிலம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி பகுதியில் 600 இ–சேவை மையங்கள் தனியாருக்கு புதிதாக வழங்கப்பட உள்ளது. மாவட்ட வளர்ச்சி கருதியும், சுற்றுலா பயணிகள் வருகை கருதியும் உச்சிப்புளியில் உள்ள கடற்படை விமானதளம் விரிவாக்கம் செய்யப்பட்டு பயணிகள் விமான நிலையமாக மாற்றப்பட உள்ளது. உதான் திட்டத்தின்கீழ் இந்த விமான நிலைய ஓடுதளம் 8 ஆயிரம் அடி நீளமாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


செய்தி; தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)