முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, June 17, 2018

இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அதி நவீன சி.டி.ஸ்கேன் மையம், செயற்கை சுவாச கருவிகள்!!

No comments :
இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பொதுமக்கள் பயன் பெறும் வகையில்  பொது சுகாதாரத் துறையின் சார்பாக,  புதியதாக அதி நவீன வசதியுடன்கூடிய  சி.டி.ஸ்கேன் மையம், செயற்கை சுவாச கருவிகள் மற்றும் தாய்ப்பால் சேமிப்பு வங்கி ஆகியவைகள் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

மருத்துமனை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு  மாவட்ட ஆட்சித்தலைவா் நடராஜன் தலைமை வகித்தார். 

தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் மணிகண்டன் முன்னிலை வகித்து சி.டி.ஸ்கேன் மையம், செயற்கை சுவாச கருவிகள் மற்றும் தாய்ப்பால் சேமிப்பு வங்கி ஆகியவற்றை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநா்  (நலப்பணிகள்) (பொ)  சகாயஸ்டீபன்ராஜ், மருத்துவமனை கண்கானிப்பாளா் ஜவகா்லால், நிலைய மருத்துவா் ஞானக்குமா் உட்பட அரசு மருத்துவா்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் தெரிவித்தது:
  
தமிழக அரசு பொதுமக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு பல கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து அவற்றை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது. ஏழை, எளிய மக்கள் நவீன முறையில் மருத்துவ சிகிச்சை பெற்று பயன்பெறும் வகையில் எண்ணற்ற மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.


அதனடிப்படையில்  நேற்று இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு மருந்து வாணிபக் கழகம் சார்பில் ரூ1.3 கோடி செலவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கென்று புதியதாக சி.டி ஸ்கேன் மையம் நிறுவப்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வரும் சி.டி ஸ்கேன் நான்கு அடுக்கு முறையில் உள்ளது.

மருத்துவக்கல்லுரிக்கு இணையான மருத்துவம் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் பல நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  மேலும்  இந்த  சி.டி.ஸ்கேன் 16 அடுக்கு முறையில் உள்ளது. இதன் மூலம் மூளை மற்றும் உடலின் பிற பகுதிகளில் உள்ள தமனிகளில் ஆஞ்சியோகிராம் எடுக்க முடியும்.

மேலும் இது வேகமாகவும் சிறந்த தெளிவான படங்களையும் தரவல்லது. மேலும் ரூ.50 இலட்சம் செலவில் 5 புதிய செயற்கை சுவாச கருவிகள் தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர பிhpவு முறை சிறப்பாக செயல்படுவதற்காக நிறுவப்பட்டுள்ளன.

இதன்மூலம் இயற்கையான சுவாசம் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு அவா;களை காப்பாற்ற முடியும். மேலும் இதன்மூலம் உயா; மருத்துவ சிகிச்சைக்காக பிற மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக குறையும். இதுதவிர இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கா்ப்பிணித் தாய்மார்கள் பிரசவ காலத்தில் பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தங்கள் சிசுக்களுக்கு தாய்ப்பால் ஊட்ட முடியாத நிலை ஏற்பட்டால் அந்த சிசுக்களுக்கு தாய்ப்பால் தருவதற்காக கருவிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதி என ரூ.6 இலட்சம் மதிப்பில் தமிழக அரசால் வழங்கப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது. இதில் தன்னார்வத் தொண்டு முறையில் தாய்ப்பால் பெறப்பட்டு அதன்பின் அது சுத்திகரிக்கப்பட்டு உறை நிலையில் 6 மாதம் வரை சேமித்து வைக்கப்படுகிறது. சேமித்து வைக்கப்பட்ட பால் இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு இலவசமாக வழங்கப்படும்.

புட்டிப்பாலைக் காட்டிலும் தாய்ப்பாலில் உள்ள நன்மைகள் இதன்மூலம் விளக்கப்பட்டு வரும் இந்த புதிய நடைமுறை தமிழ்நாடு அரசின் குடும்ப நலத்துறையின் கீழ் இயங்கி வரும் மிகச் சில இடங்களில் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும் .

இது தவிர இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மருத்துவகல்லூரி அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என  அமைச்சா் மணிகண்டன் தெரிவத்தார்.


செய்தி; தினபூமி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுர மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை, சிறப்பு தொழுகை!!

No comments :
ராமநாதபுரம் ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது.
ராமநாதபுரம் மதுரை ரோட்டில், ராஜா மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானம் எதிரில் உள்ள ஈத்கா மைதானத்தில், காலை 9:00 மணிக்கு ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தொழுகைக்கு பின் ரம்ஜான் சிறப்பு சொற்பொழிவு நடந்தது.
பின், ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி அன்பை பரிமாறிக்கொண்டனர்.

இதே போல், நகரில் சில இடங்களில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. பனைக்குளம், அழகன்குளம், சித்தார்கோட்டை, புதுவலசை, சாத்தான்குளம், பெருங்குளம், கீழக்கரை உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது.

கீழக்கரை: கீழக்கரை பழைய குத்பா பள்ளிவாசல், கடற்கரைப்பள்ளி, மின்ஹாஜியார் பள்ளி, ஜும்மா பள்ளி, வடக்குத்தெரு, கிழக்குத்தெரு, தெற்குத்தெரு, மேலத்தெரு புதுப்பள்ளி,ஓடைக்கரைப்பள்ளி, உள்ளிட்ட இடங்களில் ரம்ஜானை முன்னிட்டு சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.திடல் தொழுகை காலை 7:30 முதல் 10:30 வரை நடந்தது.


பெரியபட்டினம் ஜலால் ஜமால் ஜூம்மா பள்ளிவாசலில்நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

சிக்கல்: சிக்கல் ஜாமியா மஸ்ஜித் பள்ளியில்மவுலவிமுகம்மது சம்சு மீரான் தலைமையில் சிறப்பு தொழுகையில்பங்கேற்றனர். மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி, உலக நன்மைக்காகவும், சிக்கல் பள்ளிவாசலில் இருந்து பஸ்ஸ்டாண்ட் வரை தேசியக்கொடியை ஏந்தியவாறு ஊர்வலம் சென்றனர்.

ஆர்.எஸ்.மங்கலம்: ரம்ஜானை முன்னிட்டு ஆர்.எஸ்.மங்கலம் ஜூம்மா பள்ளியில் இருந்து ஊர்வலமாக சென்ற முஸ்லிம் ஜமாத்தார்கள் பெரிய கண்மாய் பாலம் அருகே ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.




(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)