முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, May 13, 2018

இராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னையா? புகார் செய்ய பகுதி வாரியாக வாரியாக தொலைபேசி எண்கள்!!

No comments :
இராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னை தொடர்பான புகார்களை தெரிவிக்க உள்ளாட்சி அலுவலகம் வாரியாக தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் கலெக்டர் கூறியிருப்பது:

மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க கடந்த ஆண்டு 1153 பணிகளுக்கு 1295 கோடி ரூபாய் ஒதுக்கிடு செய்யப்பட்டது. நடப்பு ஆண்டில் இதுவரை 195 பணிகளுக்கு 1138 கோடி ருபாய்க்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

காவிரி குடிநீர் திட்டத்தில் தினமும் 4 எம்.எல்.டி, தண்ணீர் சப்ளை செய்ய வேண்டிய நிலையில், வறட்சியால் ஆற்றுப்படுகையில் நீர்மட்டம் குறைந்ததால், தற்போது 30 எம்.எல்.டி, மட்டுமே கிடைக்கிறது.


தற்போது, குடிநீர் பற்றாக்குறை, விநியோகம் தடைபடுதல், முறைகேடான இணைப்புகள், தேவைப்படும் புதிய குடிநீர் திட்டம் குறித்து தெரிவிக்கவும், மாவட்ட அளவில் உதவி இயக்குனர் ஊராட்சிகள் அலுவலகத்திலும் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சிகள், ஆகியவற்றில் பொதுமக்கள் புகார் செய்ய கணினி தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

தொலைபேசி எண்கள் விபரங்கள் கீழ்கண்டவாறு

மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க 1800 425 7040 என்ற கட்டணமில்லா நம்பரையம், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) அலுவலகத்திற்கு 04567-230490 மற்றும் 91598 22298 என்ற அலைபேசியிலும் தொடர்புகொள்ளலாம்.

ஊராட்சி ஒன்றியங்கள்:
ராமநாதபுரம் 04567-220404,
திருப்புல்லாணி 04567-25411,
மண்டபம் 04567-259234,
ஆர்.எஸ்.மங்கலம் 04581-251226,
திருவாடானை 04567-254228,
பரமக்குடி 04564-226706.
நயினார்கோயில் 04564- 266229,
போகலுார் 04564-262226,
முதுகுளத்துார் 04576-222230,
கமுதி 04576-223 228
கடலாடி 04576-266528.

நகராட்சிகள்:
ராமநாதபுரம் 04567-220445
ராமேஸ்வரம் 04573-221264,
கீழக்கரை 04567-241317
பரமக்குடி 04564-226742

பேரூராட்சிகள்:
கமுதி 04576-223364
முதுகுளத்துார் 04576-222247,
அபிராமம் 04576- 265645
சாயல்குடி 04576-244293,
தொண்டி 04561-253290,
ஆர்.எஸ்.மங்கலம் 04561-251551,
மண்டபம் 04573-241593.


தகவல்: திரு. தாஹீர், கீழை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரத்தில் மருத்துவகல்லூரி - அமைச்சர் மணிகண்டன் தகவல்!!

No comments :
ராமேசுவரம் கோவில் கிழக்கு வாசலில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் கோடை கால உணவு மற்றும் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் வெயில் காலமாக உள்ளதால் மெல்லிய தளர்ந்த பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்,வெயிலில் செல்லும் போது குடைதொப்பிகாலணிகளை பயன் படுத்த வேண்டும்உணவு புகார் குறித்து சுற்றுலா பயணிகள்பொது மக்கள் 94440-42322 என்ற செல்போன் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்பதை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் நடராஜன்,மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஜெகதீசன்சந்திரபோஸ் ஆகியோர் பேசினர்.
அமைச்சர் மணிகண்டன் நடமாடும் உணவு பொருள் பாதுகாப்பு குறித்த கண்காட்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து உணவுபாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்களை சுற்றுலா பயணிகள்கடைக்காரர்களிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் கே.கே.அர்ச்சுனன்நகரசபை முன்னாள் துணை தலைவர் குணசேகரன்மாவட்ட விவசாய அணி செயலாளர் வீரபத்திரன்ராமநாதபுரம் தொகுதி கழக முன்னாள் செயலாளர் தஞ்சி சுரேஷ்கட்சி நிர்வாகிகள் அயோத்திமகேந்திரன்,முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் மணிகண்டன் நிருபர்களிடம் கூறியதாவது:-




ராமேசுவரம் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு தேவையான பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை செய்ய மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து வருகிறது. ராமநாதபுரம் சட்மன்ற தொகுதிக்குஉட்பட்ட பகுதியாக உள்ளதால் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறேன். மத்திய அரசின் சுதேஷ்தர்ஷன் திட்டத்தின் கீழ் ரூ. 15 கோடி நிதி ராமேசுவரத்தின் பல்வேறு வளர்ச்சி திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுஉள்ளது. இதில் புயலால் அழிந்து போன தனுஷ்கோடி கட்டிடங்கள் உள்ள பகுதி ரூ.4கோடியே 30 லட்சம் நிதியில் பழமை மாறாமல் புனரமைக்கப்பட உள்ளது.

குந்துகால் கடற்கரையில் ரூ.4 கோடி 50 லட்சத்தில் ஒளி-ஒலி காட்சிக் கூடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ராமேசுவரத்தில் ரூ. 5 கோடி நிதியில் கடற்கரையில் பூங்கா, நடைபாதை, மின் விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளும் நடைபெற்று வருகின்றன. சுற்றுலா பயணிகளின் வசதிக்காக குந்துகால் கடற்கரையில் இருந்து பாம்பனுக்கு பை-பாஸ்சாலை அமைக்கப்பட உள்ளது.கலப்படம் உள்ள உணவு பொருட்களை தயார் செய்யும் ஓட்டல்கள் உணவுபாதுகாப்புதுறையின் மூலம் சீல் வைக்கப்படும்.

ராமேசுவரம் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் தீர்த்தமாட வரும் பக்தர் ஒருவருக்கு ரூ.25 கட்டணமே அரசால் நிர்ணயிக்கப்பட்டுஉள்ளது. ஆனால் 22 தீர்த்த கிணறுகளில் தீர்த்தமாட வரும் பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்து வருவதாக தொடர்ந்து புகார் வருகிறது. அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே தீர்த்தம் யாத்திரை பணியாளர்கள் கண்டிப்பாக வாங்க வேண்டும். கூடுதல் கட்டணங்கள் வாங்கினால் யாத்திரை பணியாளர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளேன்.

இதற்காக மாவட்ட கலெக்டர் தலைமையில் தீவு வளர்ச்சி திட்டகுழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இனிமேல் இது போன்ற புகார் வராத அளிவிற்கு யாத்திரை பணியாளர்கள் நடந்து கொள்ள வேண்டும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துமனை அமைய உள்ளது. ராமநாதபுரத்திற்கு மருத்துவ கல்லூரி கட்டாயம் வரும். மருத்துவ கல்லூரி அமைக்க முழு முயற்சி எடுத்து வருகிறேன். மேலும் ராமேசுவரம் தீவு பகுதியில் உள்ள மாணவ-மாணவிகளின் வசதிக்காக மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பெயரில் தங்கச்சிமடம் பேய்க்கரும்பு பகுதியில் அரசுகலைக்கல்லூரி ஒன்றும் அமைய உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)