முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, May 12, 2018

ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க 101 இடங்களில் உப்புநீரை குடிநீராக்கும் நிலையங்கள் – கலெக்டர்!!

1 comment :

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை இல்லாமல் கடும் வறட்சி ஏற்பட்டு நிலத்தடி நீர் ஆதாரங்கள் எல்லாம் வறண்டு போய்விட்டன. காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் இதுநாள் வரை கைகொடுத்து வந்த நிலையில் தற்போது அந்த நீரின் அளவும் படிப்படியாக குறைந்து பாதி நிலைக்கு வந்துவிட்டது. வரும் கோடைகாலத்தில் ஏற்படும் வறட்சியை சமாளிக்கும் வகையில் இந்த காவிரி நீராவது தொடர்ந்து வருமா என்ற சந்தேகம் ஏற்பட்டுஉள்ளது.

இதன்காரணமாக மாவட்ட நிர்வாகம் வறட்சியால் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் நிலத்தடி நீர் ஆதாரம் இல்லாத உப்புநீராக உள்ள பகுதிகளில் மாற்று ஏற்பாடாக உப்புநீரை குடிநீராக்கும் நிலையங்கள் அமைக்க முடிவு செய்துள்ளது. அரசின் நிதி உதவியுடன் உப்புநீரை குடிநீராக்கும் 50 நிலையங்களும், மாவட்ட நிர்வாகத்தின் நிதியின் கீழ் 30 நிலையங்களும், இந்திய எண்ணெய் எரிவாயு கழகத்தின் சார்பில் 15 நிலையங்களும், டாடா நிறுவனத்தின் சார்பில் 4 நிலையங்களும், தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் 2 நிலையங்களும் என மாவட்டத்தில் 101 இடங்களில் உப்புநீரை குடிநீராக்கும் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.


இந்த நிலையங்கள் ஒவ்வொன்றும் ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட உள்ளன.

இதுதவிர மாவட்டம் முழுவதும் கோடைகால வறட்சியை சமாளிக்கும் வகையில் குடிநீர் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இதன்படி ரூ.11 கோடியே 76 லட்சம் மதிப்பில் 395 பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

121 புதிய கிணறுகள் உள்பட இதுவரை 150-க்கும் மேற்பட்ட பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. மீதம் உள்ள பணிகளை இந்த மாத இறுதிக்குள் முடித்து கோடை வறட்சியை சமாளிக்க முழு அளவில் தயாராக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது.

மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் சுகாதார வளாகங்கள் அனைத்திலும் முழு பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் பழுதடைந்த வளாகங்களை மராமத்து செய்து குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களிலும் குடிநீர், கழிப்பறை, மின்வசதி செய்து கோடை விடுமுறைக்குள் பூர்த்தி செய்ய உத்தரவிடப்பட்டுஉள்ளது. இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்தார். அப்போது ஊராட்சிகள் உதவி இயக்குனர் செல்லத்துரை உடன் இருந்தார்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

மக்கள் வாழ தகுதியற்ற இடமாக மாறிவருகிறதா ராமநாதபுர மாவட்ட கிராமங்கள்?!!

No comments :

GAIL நிறுவனம் வாலாந்தரவை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் மேலும் சில கியஸ் பைப்புகளை பதிக்க தாசில்தார் தலைமையில் மக்களிடம் கலந்தாய்வு என்று அறிவிப்பு செய்யாமல், குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் தகவல்களை தெரிவித்து காவல்துறை பாதுகாப்புடன் கலந்தாய்வு நடத்த முயற்சி செய்தது.

யாருக்கும் தெரியாமல் திருட்டுதனமாக நடத்த முயற்சி எதற்காக?!..யாரை திருப்தி படுத்த?!..யாரை ஏமாற்ற?!..

கூட்டத்தை நடத்தவிடாது மக்கள் அனைவருக்கும் தெரியபடுத்தி அனைத்து நிறுவன மேலாளர்களையும் வரவைத்து மீண்டும் ஒருநாள் நடத்த சொல்லி கூட்டத்தை கலைத்துவிட்டாச்சு.


வாலாந்தரவை சமுதாயகூடத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தை பற்றி வாலாந்தரவை மக்களுக்கே தெரியவில்லை, ஏற்கனவே 20 வருடங்களாக சிலரின் சுயலாபத்திற்க்காக ONGC,GAIL,RK PLANT மற்றும் EB ஆகியவை ஊருக்குள் நடத்த அனுமதி வழங்கிவிட்டனர் , Industrial சட்டத்தின்படி மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளில் இருந்து 15 Km அப்பால் தான் நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்கவேண்டும். ஆனால் எந்தவித சட்ட விதிகளை பின்பற்றாமல் அனுமதி வழங்கியுள்ளனர்.

மேலும் இந்த நிறுவனங்கள் அனுமதியின்றி 5,4,3,2 என்று ஆழ்துளைக் கிணறு அமைத்துள்ளனர், ஆதலால் இந்தப்பகுதிகளில் கிணறுகளில் கூட தண்ணீர் இல்லாது தண்ணீர் பிரச்சனை தலையாய பிரச்சனையாக உருவாகியுள்ளது. இதுவரை ஊராட்சியில் CSR - Corporate Social Responsibility கீழ் எந்தவித திட்டங்களும் பெரிதாக செயல்படுத்தவில்லை, உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கவில்லை, தொடர்ந்து இந்த நிறுவனங்களிலிருந்து வெளிவரும் இரைச்சல்களால் வீடுகளில் அதிர்வுகள் ஏற்படுகின்றது.

மேலும் ஊராட்சிகளில் தற்போது கேன்சர் நோய் தாக்கம் அதிகமாக உள்ளது. ஏற்கனவே நிலம் கையகப்படுத்திய நில உரிமையாளர்களுக்கு இன்னும் இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை , இந்த நிலையில் மேலும் இடங்களை கையகப்படுத்த முனைகிறது கெயில் நிறுவனம்.
ஒரு சிலரின் சுயநலத்திற்க்காக ஒட்டுமொத்த ஊராட்சி கிராமங்களும் அழிவை நோக்கி!...

*இந்த நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்தது யார்?..
*அப்போது போட்ட ஒப்பந்தம் எங்கே?...

*இந்த நிறுவனங்கள் வருடந்தோறும் கட்டும் பஞ்சாயத்து வரி எவ்வளவு?...

*எத்தனை ஆழ்துளைக் கிணறுக்கு அனுமதி கொடுக்கபட்டது?..
*இதுவரை செய்த CSR என்ன?..

* இழப்பீடு வழங்கப்பட்ட பயனாளிகள் பட்டியல் எங்கே?..
*விபத்து ஏற்பட்டால் அதற்க்கான முதலுதவி உபகரணம் மற்றும் தீயணைப்பு வாகனம், மருத்துவ வாகனம், அவசர ஊர்தி ஆகியவை எங்கே?...

*எத்தனை வருடம் இந்த நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது, அதற்கான கால நிர்ணயம்? ...

இப்படி பல கேள்விகளுடன் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் வாயிலாக கேள்வி கேட்டும் இன்றுவரை பயனில்லை?!..

ஜனவரி 26 நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட கேள்விகளை தீர்மானமாக நிறைவேற்றி, ஒரு மாதத்திற்க்குள் அனைத்து நிறுவனங்களும் பதிலாளிக்கவில்லை எனில் அவர்களுக்கு ஊராட்சி வருடாந்திர வரி இரசீது கொடுக்ககூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ஆனால் அதற்க்கு பதிலும் இல்லை பலனுமில்லை?!...

இதே நிலை தொடர்ந்தால் விரைவில் ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமங்களும் மக்கள் வாழ தகுதியற்ற இடமாக மாறிவிடும்!...
இளைஞர்கள் ஒருங்கிணைந்து விழிப்பணர்வுடன் செயல்பட்டு இதனை தடுக்காவிடில் நம் தலைமுறைகளின் வாழ்க்கை கேள்விக்குறியே???!...

X-------------------------------X

வாலாந்தரவை வாசகர் பிரவீன் அவர்களின் ஃபேஸ்புக் பதிவிலிருந்து.

நன்றி: திரு. ப்ரவீன்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)