முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, March 22, 2018

தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வு; ராமநாதபுரம் சுரேஷ் அகாதெமியில் இலவச உடற்தகுதித் தேர்வு!!

No comments :
தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழும பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு, ராமநாதபுரம் சுரேஷ் அகாதெமியில் இலவச உடற்தகுதித் தேர்வு நடத்தப்பட இருப்பதாக அதன் நிறுவனர் சுகேஷ் சாமுவேல் புதன்கிழமை தெரிவித்தார்.

ராமநாதபுரம் புளிக்காரத்தெருவில் செயல்பட்டு வரும் சுரேஷ் அகாதெமியில் வெள்ளிக்கிழமை (மார்ச் 23), தமிழ்நாடு சீருடைப் பணியாளர்களுக்கான உடற்தகுதி தேர்வை இலவசமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


சீருடைப் பணியில் 6,140 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. எனவே, இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இந்த இலவச உடற்தகுதித் தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு 7550352916 மற்றும் 7550352917 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

செய்தி: திரு. தாஹீர், கீழை



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் புதிய கலெக்டர் அலுவலகத்தில் துர்நாற்றம் வீசும் கழிப்பறைகள்!!

No comments :
ராமநாதபுரம் புதிய கலெக்டர் அலுவலகத்தில் தரமற்ற பணிகளால் கழிப்பறைகள் சேதமடைந்தும், செப்டிக் டேங்க் நிறைந்து வெளியேறுவதால் துர்நாற்றம் வீசுகிறது.  பணியாளர்கள் அடிப்பபடை தேவைகளுக்கு திண்டாடும் நிலைதான் உள்ளது.

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 11 கோடி ரூபாயில் புதிய ஒருங்கிணைந்த அலுவலக கட்டடம், கட்டப்பட்டு 2016 பிப்.2 ல் அப்போதைய தமிழக முதல்வர் ஜெ., 27.2.2016ல் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். ஆனாலும், 2017 இறுதி வரை இந்த கட்டடத்தின் பணிகள் நிறைவடையவில்லை.

கட்டடப்பணிகளை செய்த பொதுப்பணித்துறையினர் இப்பணிகளில் சுணக்கம் காட்டினர். மின் சாதனங்கள் பொருத்த வேண்டும். மேஜை, நாற்காலிகள், அறைகலன்கள் பொருத்த வேண்டும், எனக்கூறி அவ்வப்போது வேலை செய்து வந்தனர். 2018 துவக்கத்தில்தான் பெரும்பாலான அலுவலகங்கள் புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டன.
மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம் கடந்த வாரம் தான் இங்கே மாற்றப்பட்டது. இருந்தாலும், இன்னும் சில வேலைகள் நடந்துகொண்டே இருக்கிறது.

இந்த நிலையில், அலுவலகங்கள் செயல்படத் துவங்கி நான்கு மாதங்கள் கூட ஆகவில்லை. அதற்குள் கழிப்பறைகள் பல சேதமடைந்துவிட்டன. கதவுகள் உடைந்துள்ளன. முதல் தளம், இரண்டாம் தளம் கழிப்பறைகளில் இருந்து கட்டடத்தில் தண்ணீர் கசிவு ஏற்படுகிறது. அந்த தண்ணீர் கீழ் அறையில் வேலை பார்க்கும் அதிகாரிகள் மேல்
  விழுகிறது.
மேலும், கட்டடத்தில் புழக்கத்திற்கு தேவையான தண்ணீர் வசதி செய்யப்படவில்லை. இதனால் கழிப்பறைகள் துர்நாற்றம் வீசுகிறது. குடிநீர் தேவைக்கு காவிரி குடிநீர் இணைப்பும் இல்லை. இங்குள்ள நிலத்தடி நீர் உவர்ப்பாக இருப்பதால் பயன்படுத்த முடியவில்லை. கலெக்டர் அலுவலகம் வரும் மக்களுக்கும், பணியாளர்களுக்கு குடிநீர் வசதிகள் இல்லை.


பின் பகுதியில் உள்ள செப்டிக் டேங்க் நிறைந்து வெளியேறியதால் குளம் போல் தேங்கி நோய்பரப்பி வருகிறது. பொதுப்பணித்துறை கட்டடப்பிரிவின் தரமற்ற கட்டுமானப்பணியால் விரைவில் கட்டடம் உறுதித் தன்மை இழக்கும் அபாயம் உள்ளதாக வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தெரிவிததனர்.


செய்தி: தினமலர்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது மாற்றப்பட கள்ள நோட்டுக்கள்!!

No comments :
மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டு ரூ.500 மற்றும் ரூ.1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள 500,1000 ரூபாயை கொடுத்துவிட்டு புதிய ரூபாய் நோட்கள் பெற்றுக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டது. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை முந்திக்கொண்டு மாற்றி வந்தனர்.

இதனால் வங்கிகளில் கூட்டம் அலைமோதியது. இவ்வாறு ராமநாதபுரத்தில் பாரத ஸ்டேட் வங்கியில் பொதுமக்கள் கொடுத்த 500,1000 ரூபாய் நோட்டுகள் சென்னை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்டது. இந்த ரூபாய் நோட்டு களை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சோதனையிட்டபோது அதில் சில ரூபாய் நோட்டுகள் கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்தது.




ராமநாதபுரம் பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து அனுப்பிய 1000 ரூபாய் நோட்டு களில் 5 கள்ளநோட்டு என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் ரவீந்திரன் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனாவிடம் புகார் செய்தார். போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

பொதுமக்களிடம் புழக்கத்தில் இருந்து வந்த கள்ளநோட்டு கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது புதிய நோட்டுக்களாக மாற்றப்பட்டதா அல்லது திட்டமிட்டே கள்ளநோட்டுகளை நல்ல நோட்டுகளாக சமூக விரோதிகள் மாற்றினார்களா என்பது தெரியவில்லை. இந்த நோட்டுகளை மாற்றி ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது என்பதாலும், நோட்டுகளை மாற்றியவர்கள் குறித்து எந்த விவரங்களும் இல்லாததாலும் இந்த செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது தெரியாமல் உள்ளது. 

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை!!

No comments :
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருவாடானை தாலுகா செயலாளர் குருசாமி தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசும்மாவட்ட நிர்வாகமும் பெரிய கண்மாயை அளவை செய்து சர்வே கற்கள் ஊன்ற முடிவெடுத்திருப்பது இப்பகுதி மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது.

இந்த கண்மாயின் அளவை சர்வே செய்யும் போது 1967-ம் ஆண்டுக்கு முன்பு உள்ள அரசு ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளின் அடிப்படையில் சர்வே செய்ய வேண்டும். மேலும் கண்மாயில் நீர் பிடிப்பு பகுதி வரை பட்டா வழங்கப்பட்டுஉள்ளது. இதனால் பலர் பண்ணை குட்டைகள்ஊருணிகள் வெட்டி கண்மாய்க்குள் தண்ணீர் வராத அளவில் செய்துள்ளனர். எனவே கண்மாய்க்கு தண்ணீர் வரும் கால்வாய்களை அடைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ள அனைத்து பட்டாவையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஆக்கிரமிப்பு களை அகற்றவேண்டும்.




மேலும் இந்த கண்மாய்க்கு தண்ணீர் வரத்து வரும் 4 கால்வாய்களில் தற்போது 2 கால்வாய்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. இதில் சூரியன்கோட்டை கால்வாய், சருகணி மணிமுத்தாறு கால்வாய் ஆகிய 2 கால்வாய்களும் ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டுள்ளது. எனவே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு முன்பு போல் தண்ணீர் வரத்து வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)