முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, March 18, 2018

துபாயில் இந்திய மக்களின் குறை தீர்க்கும் சிறப்பு நிகழ்ச்சி!!

No comments :
துபாயில் இந்திய தொழிலாளர் வள மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையம் இந்திய தூதரகம் மற்றும் துணை தூதரகத்தின் ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது.

இந்த மையம் துபாயின் ஜுமைரா லேக் டவர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 3 மணி முதல் 6 மணி வரை இந்திய மக்களின் குறை தீர்க்கும் சிறப்பு நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் பிரச்சனைகள், குடும்ப விவகாரம் தொடர்பான பிரச்சனைகள், கிரிடிட் கார்டு உள்ளிட்ட பிரச்சனைகள், ஆதார் அட்டை விளக்கம், வாட் வரி தொடர்பான சந்தேகங்கள் உள்ளிட்டவைகளுக்கு இலவச ஆலோசனை வழங்கப்படும்.
இதில் பங்கேற்க விரும்புவோர் 800 46342 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.


இந்த வாய்ப்பை அமீரகத்தில் வசித்து வரும் இந்தியர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்டத்தில் தாசில்தார்களை அதிரடியாக பணியிட மாற்றம்!!

2 comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் தாசில்தார்களை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து கலெக்டர் நடராஜன் உத்தரவிட்டுள்ளார். இதன்படி பரமக்குடி நத்தம் நிலவரி திட்டம் தனி தாசில்தார் அமலோற்பவ ஜெயராணி பரமக்குடி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றி வந்த முத்து லெட்சுமி கடலாடி தாசில்தராகவும்அந்த இடத்தில் பணியாற்றி வந்த ராஜேஸ்வரி கீழக்கரை தாசில்தாராகவும்அங்கு பணியாற்றி வந்த கணேசன் திருவாடானை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுஉள்ளனர்.

திருவாடானையில் பணியாற்றி வந்த காளிமுத்தன் மாவட்ட வழங்கல் அலுவலக பறக்கும்படை தனிதாசில்தாராகவும்பரமசிவன் பரமக்குடி தாசில்தாராகவும்அங்கு பணியாற்றி வந்த ஜெயமணி பரமக்குடி சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும்சுகுமாறன் ராமநாதபுரம் டாஸ்மாக் சில்லறை விற்பனை உதவி மேலாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.




ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு தனி தாசில்தார் சிக்கந்தர் பபிதா பரமக்குடி நத்தம் நிலவரித்திட்ட தனி தாசில்தாராகவும், மாவட்ட துணை ஆய்வுக்குழு அலுவலர் லெட்சுமணன் ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு தனி தாசில்தாராகவும், உப்பூர் அனல்மின் நிலைய முன்னாள் தனி தாசில்தார் மீனாட்சி முதுகுளத்தூர் தாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய கோபால் கடலாடி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், அந்த இடத்தில் பணியாற்றிய சிவகுமார் ராமநாதபுரம் தாசில்தாராகவும், ராமநாதபுரம் தாசில்தாராக பணியாற்றி வந்த சண்முகசுந்தரம் கலெக்டர் அலுவலக பொது மேலாளராகவும், நித்தியானந்தம் மாவட்ட வழங்கல் அலுவலக நேர்முக உதவியாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

ராமநாதபுரம் குடிமைப்பொருள் வழங்கல் தனி தாசில்தார் கலைமதி புதிதாக தோற்று விக்கப்பட்டுள்ள ராமநாதபுரம் நத்தம் நிலவரித்திட்ட தனி தாசில்தாராகவும், முதுகுளத்தூர் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் செல்வராஜ் பரமக்குடி நில எடுப்பு தனி தாசில்தாராகவும், ராமநாதபும் நில எடுப்பு முன்னாள் தனி தாசில்தார் சந்திரன் ராமேசுவரம் தாசில்தாராகவும், ஆர்.எஸ்.மங்கலம் நில எடுப்பு முன்னாள் தனி தாசில்தார் காமாட்சி ராமநாதபுரம் குடிமைப்பொருள் வழங்கல் தனி தாசில்தாராகவும், மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலக தலைமை உதவியாளர் சுரேஷ்குமார் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலக துணை ஆய்வுக்குழு அலுவலராகவும், முதுகுளத்தூர் மண்டல துணை தாசில்தார் மரகதமேரி முதுகுளத்தூர் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தாராகவும் இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்ட வழங்கல் அலுவலக பறக்கும்படை தனித்துணை தாசில்தார் பாலசரவணன் உப்பூர் அனல்மின் நிலைய நிலஎடுப்பு தனி தாசில்தாராகவும், அங்கு பணியாற்றி வந்த கல்யாண குமார் ராமநாதபுரம் தேர்தல் பிரிவு தனி தாசில்தாராகவும், திருவாடானை மண்டல துணை தாசில்தார் சாந்தி ராமநாதபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)