Sunday, March 11, 2018
ராமநாதபுரம் அருகே தனியாருக்கு சொந்தமான குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எதிராக போராட்டம்!!
ராமநாதபுரம் அருகே பனைக்குளத்தில் உள்ள தனியாருக்கு
சொந்தமான குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேறும் கழிவுநீரால்
நீராதாரங்கள் விஷமாக மாறி வருவதாகவும், எனவே அந்நிறுவனத்தை மூட
வலியுறுத்தியும் கிராம மக்கள் இடியேறும் போராட்டத்தை சனிக்கி நடத்தினர்.
பனைக்குளத்தில் கிருஷ்ணாபுரம் பகுதியில் கடற்கரைக்கு
செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான கடல் நீரிலிருந்து குடிநீர் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்திலிருந்து
வெளியேறும் கழிவுநீரால் ரசாயனம் கலந்த நீராதாரங்கள் பாதிக்கப்பட்டு இக்கிராமத்தில்
வசிக்கும் பலரும் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்ருப்பதாகம், எனவே
அந் நிறுவத்தை முட வலியுறுத்தி இப்போராட்டத்தை நடத்தினர்.
அப்போது, அந்த தனியார் குடிநீர் சத்திகரிப்பு
நிறுவனம் இருக்கும் இடத்தை நோக்கி அவர்கள் புறப்பட்டனர். காவல்துறையினர்
வழிமறித்து தடுத்து நிறுத்தியதையடுத்து கடற்கரைச் சாலையில் அமர்ந்து அவர்கள்
மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அங்கு ராமநாதபுரம்
ஏ.டி.எஸ்.பி.எஸ்.வெள்ளத்துரை.டி.எஸ்.பி.க்கள் எஸ்.நடராஜ், பிரவீன்.உடோங்ரே, சதீஷ்குமார்
ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் மற்றும் வட்டாட்சியர் சண்முகசுந்தரம், துணை
வட்டாட்சியர் முருகவேல்,
கிராம நிர்வாக அலுவலர் பூபதி ஆகியோர் வந்தனர்.
பின்னர் காலல்து றை அதிகாரிகள் கேட்டுக் கொண்டதற்கினங்:
குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்தை விரைவில் மூடவில்லையெனில் வரும் சனிக்கிழமை
அடுத்த கட்டமாக மிகப் பெரிய அளவில் போராட்டத்தை நடத்தி வது என முடிவு செய்து
அனைவரும் கலைந்து சென்றனர்.
செய்தி:
திரு. தாஹீர், கீழை
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
தொடரும் கந்துவட்டி கொடுமை; எஸ்.பி அலுவலகத்தில் புகார்!!
ராமநாதபுரம் எம்.எஸ்.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன்
என்பவரின் மனைவி பானுப்பிரியா. இவர் தனது கணவர் தனசேகரன் மற்றும் பச்சிளங்குழந்தை
ஆகியோருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–
எனது கணவர் பஸ் நிலையம் பகுதியில் மதுக்கடை பார் நடத்தி
வந்த நிலையில் கோர்ட்டு உத்தரவின்படி மதுக்கடை மூடப்பட்டது. இதன்காரணமாக எனது
கணவர் சொந்த தொழில் செய்வதற்காக ராமநாதபுரம் ஓம்சக்தி நகர் பகுதியில் ஒருவரிடம்
வட்டிக்கு ரூ.18
லட்சம் கடன் வாங்கியிருந்தார்.
இந்த கடன் தொகையில் ரூ.13 லட்சம் வரை திருப்பி
கொடுத்துவிட்ட நிலையில் தற்போது அது வட்டியாக கணக்கில் வரவு வைத்துள்ளதாகவும், வட்டியும், அசலும்
சேர்ந்து ரூ.36
லட்சம் தர வேண்டும் என்று கூறி துன்புறுத்தி வருகிறார்.
மேலும், போலீஸ் உயர் அதிகாரிகள் மூலம் மிரட்டி வருகிறார். கந்து வட்டி கொடுமையில்
சிக்கி சித்ரவதை அடைந்து வரும் எங்களுக்கு யாரும் உதவ மறுக்கின்றனர்.
எனவே, எங்களை குடும்பத்துடன் கொலை செய்து இந்த
கொடுமையில் இருந்து விடுதலை அளியுங்கள். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு
ஓம்பிரகாஷ்மீனா இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)