முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, March 5, 2018

மத்திய அரசின் மூலம் கல்வி உதவித்தொகை பெற கல்வி நிலையங்கள் பதிவு செய்ய கடைசி நாள் மார்ச் 31!!

No comments :
தமிழ்நாட்டில் உள்ள அரசுஅரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் முதல் 12-ம் வகுப்புவாழ்க்கை தொழிற்கல்விஐ.டி.ஐ.ஐ.டி.சி.பாலிடெக்னிக்பட்டயப்படிப்புகள்இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள்பொறியியல் மற்றும் மருத்துவம்எம்.பில்ஆராய்ச்சி படிப்பு ஆகியவற்றை படிக்கும் கிறிஸ்தவர்இஸ்லாமியர்புத்த மதத்தினர்சிக்கீயர்ஜைன் மற்றும் பார்சி மதத்தைச் சார்ந்த சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு பள்ளி படிப்புபள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் தேசிய கல்வி உதவித்தொகை இணையம் https://scholarships.gov.in/ வாயிலாக மத்திய அரசின் மூலம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற அனைத்து கல்வி நிலையங்களும் மேற்காணும் இணையதளத்தில் பதிவு செய்திருப்பது அவசியமாகும். எனவேஇந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுஅரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களும் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் பதிவு செய்துள்ளதையும்பயனீட்டாளர் குறியீடு பெறப்பட்டுள்ளதையும் உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. உரிய எண் மற்றும் கல்வி நிலையத்தின் பெயர் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பின் அந்த விவரத்தினை உரிய ஆவணங்களுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகி தெரிவிக்க வேண்டும்.





எண் பெறாத கல்வி நிலையங்கள் மத்திய அரசின் http://aishe.nic.in/aishe/home என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து பெறலாம். பள்ளிகளை பொறுத்தவரை உரிய எண்ணிற்கு முதன்மை கல்வி அலுவலரை அணுகுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இணையதளத்தில் கல்வி நிலையத்தினை பதிவு செய்வது தொடர்பாக கல்வி நிலைய முதல்வர், தலைமையாசிரியர், டீன் கோரிக்கை கடிதம் , தலைமையாசிரியர், முதல்வர், டீன் பெயர், மொபைல் எண், கல்வி நிலையத்தின் முழு முகவரி, மற்றும் வேறு இதர விவரங்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலரை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும்.

கல்வி நிலையங்களை தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் பதிவு செய்வதற்கு வருகிற 31-ந்தேதி கடைசி நாளாகும். இணைய தளத்தில் பதிவு செய்துள்ள கல்வி நிலையங்கள் மட்டுமே 2018-19-ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் பயன்பெற இயலும்.


மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்தார். 

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரத்தில் நடந்த அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி

No comments :
ராமநாதபுரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தமிழக அரசின் மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், அமைச்சர் மணிகண்டன் கலந்துகொண்டு வேலைக்கு செல்லும் மகளிருக்கு மானியவிலையில் அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் இருசக்கர வாகனங்களை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெண்களின் நலனை பாதுகாக்கும் வகையில் எண்ணற்ற மகளிர் நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். அந்த வகையில் 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நேரத்தில் பணிபுரியும் ஏழை மகளிர் பயன்பெறும் வகையில் அம்மா இரு சக்கர வாகன திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார். அதன் அடிப்படையில்தமிழ்நாடு அரசின் மூலம் இத்திட்டம் தொடங்கப்பட்டு உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்பட்டு வருகிறது.



ராமநாதபுரம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் இந்த ஆண்டில் ஊரக பகுதிகளுக்கு 1,340 வாகனங்களும், நகர்புற பகுதிகளுக்கு 580 வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின்கீழ் தற்போது முதல்கட்டமாக 100 பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்பட்டு உள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறையின் மூலம் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், அரசு கேபிள் நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் பெறப்பட்டு குறைந்த கட்டணத்தில் தரமான முறையில் அதிக டி.வி. சேனல்களை பார்த்து மகிழ்திடும் வகையில் அரசு கேபிள் செட்டாப்பாக்ஸ் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம், திருப்புல்லாணி, மண்டபம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 39 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்தந்த கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் ரூ.20 கோடி மதிப்பில் முதற்கட்டமாக வைபை, கணினி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பு அறைகள் நடத்த திட்டமிடப்பட்டுஉள்ளது. சொன்ன வாக்குறுதியை இந்த அரசு நிறைவேற்றி வருகிறது. சிலர் இந்த அரசை கொச்சை படுத்தி வருகின்றனர். பதவி வெறியில் இந்த அரசை குறை கூறி கலைக்க நினைக்கின்றனர். ஜெயலலிதா இருக்கும் போது ஒருவர்கூட வாயை திறந்து பேசியது இல்லை. இவ்வாறு அவர் பேசினார். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சுமன், திட்ட அலுவலர் குருநாதன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஜெயஜோதி உள்பட அரசு அலுவலர்கள், மகளிர் கலந்து கொண்டனர். 

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)