Tuesday, February 6, 2018
TAHDCO பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் தாட்கோ மூலம், ஆதி
திராவிடர்களுக்காக செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு
இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிலம் வாங்கும் திட்டம்(பெண்களுக்கானது),
நிலம் மேம்பாட்டு திட்டம்,
தொழில் முனைவோர் திட்டம்,
இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம்,
தாட்கோ தலைவர் விருப்புரிமை நிதி,
தொழில் தையல் கூட்டுறவுச் சங்கங்களுக்கு நிதியுதவி போன்ற
திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
அதில் விண்ணப்பதாரர் பற்றிய முழு விவரங்கள், புகைப்படம், இருப்பிடம், சாதி, வருமான
சான்றிதழ்கள்,
பட்டா சிட்டா(நிலம் வாங்குதல் மற்றும் நிலம் மேம்பாடு
திட்டம்), ரேஷன் கார்டு எண்,
ஆதார் எண், செல் எண், இமெயில் ஐடி, திட்டங்களின்
விவரங்கள் முதலியவற்றை பதிவு செய்ய வேண்டும்.
விண்ணப்பங்களை தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் அலுவலக
நேரத்தில் மட்டும் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமேஸ்வரம் கோயிலில் பூட்டை உடைத்து திருட்டு!!
ராமேஸ்வரம் மாரியம்மன் கோயிலில் பூட்டை உடைத்து அம்மனின்
தாலிச்சங்கிலி மற்றும் உண்டியல் பணத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார்
தேடி வருகின்றனர்.
ராமேஸ்வரம் மார்க்கெட் தெருவில் பூ மாரியம்மன் கோயில்
உள்ளது. இந்தக் கோயிலின் நுழைவாயில்
கதவின் பூட்டை நேற்று முன்தினம் மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்தனர். அம்மன்
கழுத்தில் இருந்த ஒன்றரைப் பவுன் தாலிச்சங்கிலியை திருடினர்.
மேலும், அங்கிருந்த உண்டியலையும் உடைத்து
அதிலிருந்த பணத்தைத் திருடி தப்பிவிட்டனர்.
அதிகாலையில் கோயில் கதவு உடைக்கப்பட்டுக் கிடந்தது குறித்து அப்பகுதி மக்கள் ராமேஸ்வரம் கோயில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதிகாலையில் கோயில் கதவு உடைக்கப்பட்டுக் கிடந்தது குறித்து அப்பகுதி மக்கள் ராமேஸ்வரம் கோயில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
கோயிலில் நகை, பணத்தை திருடிய நபரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)