முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, January 21, 2018

தமிழக அரசின் 'இருசக்கர வாகன திட்டம்; முழு விவரம்!!

No comments :
தமிழக அரசின் 'இருசக்கர வாகன திட்டம்': விண்ணப்பிக்க தகுதியுள்ள பெண்கள் யார்?- முழு விவரம்

தமிழக அரசு அறிவித்துள்ள அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் வாகனம் பெற விண்ணப்பிக்கும் தகுதியுள்ள பெண்கள் யார் என்பது குறித்து அரசு வெளியிட்டுள்ள குறிப்பு வருமாறு:

பயனாளிகளின் தகுதி:

கியர் இல்லாத அல்லது தானியங்கி கியருடன் கூடிய 125.சிசி எந்திரத் திறன் கொண்ட புதிய இரு சக்கர வாகனங்களுக்கு வாகன விலையில் ரூ.25000/- அல்லது 50% வாகன விலை இதனில் குறைவான தொகை பயனாளிக்கு அரசினால் வழங்கப்படும்..

இரு சக்கர வாகனம் ஜனவரி.01.2018க்குப் பின்னர் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்..

பயனாளிகளின் பணியாற்றும் தகுதி:

1.நிறுவனப் பணியிலுள்ள மற்றும் முறைசாரா பணியிலுள்ள பெண்கள்.

2. கடைகள் மற்றும் இதர நிறுவனங்களிலுள்ள பெண்கள்.

3.அரசு சார்பு நிறுவனம், தனியார் நிறுவனம், சமுதாய அமைப்புகள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள்.

4.பெண்; வங்கி ஒருங்கிணைப்பாளர் மற்றும் பெண் வங்கி வழி நடத்துநர்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார (பெண்); ஆர்வலர்கள்..



வயது வரம்பு வருமான வரம்பு மற்றும் இதர தகுதிகள்:

தமிழ்நாட்டை சார்ந்த 18 முதல் 40 வயது வரையுள்ள இருசக்கர வாகன உரிமம் பெற்றுள்ள பெண்கள், ஆண்டு வருமானம் ரூ.2,50,000/- க்கு மிகாமல் உள்ள பெண்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்படாத தொழிற்பிரிவுகளில் பணியாளராக பதிவு செய்தவர்கள், சுயதொழில் புரிவோர், சொந்தமாக சிறுவணிகம் செய்வோர், கடைகள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர், அரசு உதவி பெறும் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

கிராம வறுமை ஒழிப்பு சங்கம், மாவட்ட கற்றல் மையம் ஆகியவற்றில் தொகுப்பூதியம், தினக்கூலி, ஒப்பந்த ஊதியம் அடிப்படையில் பணி புரியும் மகளிர். வங்கி ஒருங்கிணைப்பாளர், சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆஷா பணியாளர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு 40 மிகாமல் இருக்க வேண்டும். ஆதரவற்ற பெண்கள், இளம் விதவைகள், மாற்றுத்திறனாளி மகளிர், 35 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத மகளிர், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மகளிர், திருநங்கைகளுக்கு முன்னுரிமை.

மனுக்கள் பெறும் தேதி ஜனவரி 22, 2018 முதல் பிப்ரவரி 05, 2018 வரை
ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்களிலும், மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களிலும் வழங்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட மனுக்கள் பிப்ரவரி 5, 2018 வரை சம்மந்தப்பட்ட அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளப்படும்..

கடன் வசதி
பயனாளிகள் தங்களுக்கு விருப்பமுள்ள 125.சிசி திறன் கொண்ட இரு சக்கர வாகனத்தினை சொந்த நிதியிலிருந்து அல்லது இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிலுள்ள வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் மூலம் கடன் வசதி பெற்றும் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்..
மனுவுடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
* பிறந்த தேதிக்கான சான்றிதழ்
* இருப்பிடச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, இருசக்கர வாகன உரிமம், ஆதார் அடையாள அட்டையின் நகல்
உரிய அலுவலரால் வழங்கப்பட்ட இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் - நகல்.
வேலை வழங்கும் அலுவலரால்/நிறுவனத்தால் வழங்கப்படும் வருமான சான்றிதழ் அல்லது சுய வருமானச் சான்றிதழ்.
நிறுவனத்தலைவர்/ சங்கங்கள் மூலம் ஊதியம் பெறுபவர்களின் ஊதியச் சான்றிதழ்.
ஆதார் அடையாள அட்டை.
எட்டாம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வி தகுதியுள்ளவர்களின் சான்றிதழ்கள்.
கடவுச்சீட்டு அளவுள்ள புகைபடம்.
சிறப்புத் தகுதி பெற விரும்புவோர் அதற்குரிய சான்றிதழ்.
சாதிச் சான்றிதழ் (தாழ்த்தப்பட்ட/பழங்குடியினர் )
உரிய அலுவலரால் வழங்கப்பட்ட மாற்றுதிறனாளி அடையாள அட்டை
இருசக்கர வாகனத்தின் விலைப்புள்ளி.



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரத்தில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்கட்டண விபரம்!!

No comments :


ராமநாதபுரத்தில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்கட்டணம் வருமாறு (பழைய கட்டணம் அடைப்பு குறிக்குள்) :

மதுரை ஒன் டூ ஒன் சர்வீஸ்-112(75),
மதுரை எக்ஸ்பிரஸ் பஸ்கள்-100(67),
திருச்சி-100(67),
தஞ்சாவூர்-172(114),
திருச்செந்துார்- 145(98),
கோவை-272(190),
சேலம்-306(210),
சிதம்பரம்-280(185),
செங்கோட்டை-195(132),
ராமேஸ்வரம்-47(32),
காரைக்குடி-85(56),
துாத்துக்குடி-104(70),
பட்டுக்கோட்டை-95(82).

டவுன் பஸ்களில்:
(ராமநாதபுரம் அரண்மனையில் இருந்து): ராமநாதபுரம் அரண்மனையில் இருந்து பழைய பஸ்ஸ்டாண்ட் வரை ரூ.6:00(5:00) கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

கலெக்டர் அலுவலகம்-8(6),
கீழக்கரை-15(10),
பெரியபட்டினம்-20(12),
ஏர்வாடி-20(12),
தேவிப்பட்டினம்-15(10),
ஆற்றாங்கரை-20(12),
அழகன்குளம்-20(10)


நன்றி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)