Monday, January 15, 2018
ITI படித்தவர்களுக்கு வட இந்திய ரயில்வேயில் வேலை வாய்ப்பு!!
மத்திய அரசின் கீழ்
இயங்கும் ரயில்வே நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பை
தகுதியுடையோர் பயன்படுத்தி கொள்ளலாம்.
வட இந்திய ரயில்வே செல்லில் வட இந்திய ரயில்வேயின் வேலை
வாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வட இந்திய ரயில்வே செல்லில் வேலை
வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
ரயில்வேயின் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் விவரங்கள் :
அப்பிரண்டிஸ் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள்
எண்ணிக்கை மொத்தம் :3162
முக்கிய தேதிகள் : வட இந்திய ரயில்வேக்கு விண்ணப்பிக்க
ஆரம்ப தேதி டிசம்பர் 28,
2017 இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி தேதி ஜனவரி 27 ஜனவரி 2018
ரயில்வே பணியிடங்கள் நாடு முழுவதும் உள்ளன. வட இந்திய
ரயில்வே செல்லில் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில்
விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
கல்வித்தகுதி : ரயில்வேயில் பணிக்கு விண்ணப்பிக்க
அறிவிக்கப்பட்ட கல்வித்தகுதியாக பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புகள்
அதிகாரப்பூர்வ கல்வி நிறுவனத்தில் படித்து ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: வடக்கு ரயில்வேயில் பணிக்கு விண்ணப்பிக்க 15 முதல் 24
வயது வரையுள்ளோர் விண்ப்பிக்கலாம். எஸ்சிஎஸ்டி
பிரிவினர்க்கு 5
வருடம் வயது வரம்பில்
தளர்வு உண்டு ஒபிசி பிரிவினர்க்கு மூன்று வருடம் வயது
வரம்பு தளர்வும்,
எக்ஸ் சர்வீஸ் ஆட்களுக்கும்
மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கும் பத்து வருடம் வயது வரம்பு
தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது.
வட இந்திய ரயில்வே பணிக்கு ஆட்கள் டெஸ்டுகள் மூலமா தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
வட இந்திய ரயில்வே பணிக்கு ஆட்கள் டெஸ்டுகள் மூலமா தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும். எஸ்சிஎஸ்டி மற்றும் எக்ஸ் சர்வீஸ்மேன் மற்றும் பெண்களுக்கு
விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
ரயில்வேயில் வேலை வாய்ப்பு பெற அதிகாரப்பூர்வ இணைய தளத்தில்
http://www.rrcnr.org/Default.aspx கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை முழுவதுமாக படிக்கலாம்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
குழந்தைகள் காப்பகத்தில் பொங்கல் விழா கலெக்டர் பங்கேற்பு!!
ராமநாதபுரத்தில் உள்ள ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில்
நடைபெற்ற பொங்கல் விழாவில் கலெக்டர் முனைவர் நடராஜன் கலந்துகொண்டு கரும்பு மற்றும்
இனிப்புகளை வழங்கினார்.
ராமநாதபுரம் சமூகநலத்துறையின் கீழ் இயங்கி வரும் சத்தியா
அம்மையார் நினைவு ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
பொங்கல் விழாவில் மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் நேரில் சென்று ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் பண்டிகையில் பங்கேற்று,
ஆதரவற்ற குழந்தைகளுக்கு கரும்பு மற்றும் இனிப்புகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழர்களின் கலாச்சாரமானது இயற்கையோடு இணைந்த வாழ்க்கை
முறையினை அடிப்படையாக கொண்டதாகும். நம் முன்னோர்கள் அனைவரும் உழவுத்தொழிலை
பிரதானமாக கொண்டு வாழ்ந்தார்கள். அந்த வகையில் உழவுக்கு உறுதுணை புரியும் இயற்கையை
வணங்கி நன்றி சொல்லும் விதமாகவும், கால்நடைகளை
தொழுது நன்றி தெரிவிக்கும் விதமாகவும், சுற்றத்தாருடன் அன்பு
பாராட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையிலும் பொங்கல் பண்டிகை , மாட்டுப்பொங்கல், காணுப்பொங்கல் ஆகிய பண்டிகைகள்
கொண்டாடப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் தமிழர்களின் கலாச்சார திருவிழாவான பொங்கல்
பண்டிகையினை ஆதரவற்ற குழந்தைகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில்
இராமநாதபுரத்தில் சமூகநலத்துறையின் கீழ் இயங்கி வரும் சத்தியா அம்மையார் நினைவு
ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மேலும் காணும் பொங்கல் திருநாளான 16.01.218 அன்று
அரியமான் கடற்கரையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக சுற்றுலாப் பயணிகள் மற்றும்
பொதுமக்களை கவர்ந்திடும் வகையில் பல்வேறு கடல்நீர் சாகச விளையாட்டுப் போட்டிகள்
மற்றும் பொங்கல் கலைவிழா நிகழ்ச்சிகள் நடத்திட திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
பண்டிகை தினங்களை மாணவ,
மாணவியர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதைப் போல கல்வி கற்பதையும்
கொண்டாட்டமாக கருதி ஆர்வத்துடன் கல்வி கற்றிட வேண்டும். விஷன் 2022 திட்டத்தின் கீழ் நமது இராமநாதபுரம் மாவட்டத்தினை தமிழகத்தின் முன்னோடி
மாவட்டமாக திகழ செய்வதற்கு தேவையான
அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதனை இந்த நல்ல நாளில்
தெரிவித்துக் கொள்வதோடு அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்தினை தெரிவித்துக்
கொள்கிறேன். இவ்வாறு பேசினார்.
இவ்விழாவில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன் உள்பட அரசு அலுவலர்கள்,
குழந்;தைகள் கலந்து கொண்டனர்.
செய்தி: தினபூமி(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)