முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, January 3, 2018

காவல்துறை வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

No comments :
மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல்படை, தீயணைப்போர், சிறைக்காவலர் போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன.

காவல்துறையில் 5 ஆயிரத்து 538 இடங்களும்,
சிறைத் துறையில் 340 இடங்களும்,
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையில் 216 இடங்களும்,
இது தவிர 46 பின்னடைவுப் பணியிடங்களும் உள்ளன.
மொத்தம் 6 ஆயிரத்து 140 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

இந்த பணிகளுக்கு 1-7-2017-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்து 24 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 1-7-1993 மற்றும் 1-7-1999 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.



10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 170 செ.மீ. உயரமும், 81 செ.மீ. மார்பளவும், 5 செ.மீ. விரியும் திறனும் பெற்றிருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் உடல்திறன் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் பணியில் சேர்க்கப்படுவார்கள். விளையாட்டு மற்றும் என்.சி.சி. சான்றிதழ் சிறப்பு தகுதியாக கருதப்படும்.

விருப்பம் உள்ளவர்கள் தேர்வுக் கட்டணம் ரூ.130 செலுத்தி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 27-1-2018-ந் தேதியாகும். தபால் நிலையம் வழியாக கட்டணம் செலுத்த 31-1-2018-ந் தேதி கடைசி நாளாகும்.
இதற்கான எழுத்துத் தேர்வு மார்ச், ஏப்ரல் மாதத்தில் நடத்த உத்தேசிக்கப் பட்டுள்ளது.

விரிவான விவரங்களை www.tnusrb.tn.gov.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ஔவையார் விருது பெற மகளிர் விண்ணப்பிக்கலாம்!!

No comments :


சமூக நலத்துறை மூலம் 2017-18ம் ஆண்டு உலக மகளிர் தினவிழாவில், பெண்கள் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்த மகளிருக்கு ஔவையார் விருது வழங்கப்பட உள்ளது.

இந்த விருதுக்கு ரொக்கப்பரிசுதங்கப்பதக்கம் முதல்வரால் வழங்கப்படும். விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்ட 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். சமூகநலன் சார்ந்த நடவடிக்கைபெண்குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைமொழிஇனம்பண்பாடுகலைஅறிவியல்நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும்.



விண்ணப்பதாரர் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக சேவை புரிந்த விவரத்தை ஒரு பக்க அளவில் தமிழ் (ம) ஆங்கிலத்தில் அனுப்ப வேண்டும்.

இதனுடன் விண்ணப்பதாரரின் முழு விவரம் அடங்கிய படிவத்தில் கடவுச்சீட்டு அளவில் புகைப்படம் ஆகியவற்றுடன் கூடிய கருத்துரு தமிழ் (ம) ஆங்கிலத்தில் வழங்கப்பட வேண்டும்.

விண்ணப்ப படிவத்தை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சமூகநல அலுவலகத்தில் பெற்று, ஜனவரி 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விபரங்களுக்கு 04567-230466 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

வார்டுகள் மறுவரையறையில் குளறுபடி; கலெக்டரிடம் புகார்!!

No comments :
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்காக சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த பட்டியல் 2011–ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பிரித்து வகைப்படுத்தப்பட்டு வார்டுகள் சீரமைக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் கீழக்கரை நகராட்சி பகுதியில் தயார் செய்யப்பட்டுள்ள மறுவரையறை பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக நகர் நல நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதன்படி கீழக்கரை மக்கள் ஊழியர் முஸ்லிம் சங்கம் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:


கீழக்கரை நகராட்சி தயாரிக்கப்பட்டுள்ள மறுவரையறை பட்டியல் முறையான ஆய்வு செய்யப்படாமல் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன.
கடந்த 2011–ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டிய இந்த பட்டியல் முறைப்படி தயாரிக்கப்படவில்லை. ஏனெனில், மறுவரையறை பட்டியலில் மக்கள் தொகை 38 ஆயிரத்து 355 என குறிப்பிடப்பட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால், நகரசபை நிர்வாகத்தில் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் கீழக்கரை நகரசபையில் 2011–ம் ஆண்டு மக்கள் தொகை 47 ஆயிரத்து 730 ஆகும்.

ஆனால், இந்த வித்தியாசத்தின் அடிப்படையில் வார்டுகளை வரைமுறைப்படுத்தப்படாமல் மேலோட்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால், சம்பந்தப்பட்ட வார்டுகளை சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, இந்த பட்டியலை நீக்கிவிட்டு முறையான ஆய்வு செய்து முழுமையான பட்டியல் தயார் செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)