Monday, December 10, 2018
கீழக்கரை இந்தியன் வங்கி இடமாற்றம், புதிய அலுவலக திறப்புவிழாவில் ஏராளமானோர் பங்கேற்பு!!
தபால் அலுவலக சாலையில் மாடி பகுதியில் செயல்பட்டு வந்த இந்தியன் வங்கி தற்போது கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் இருக்கும் சித்தி விநாயகர் கோவில் எதிர்புறம் இம்பாலா சுல்தான் காம்ப்ளக்சில் மாற்றப்பட்டு புதிய அலுவலகம் இன்று திறக்கப்பட்டது.
இஸ்லாமிய பைத்துல் மால் செயலாளர் அப்துல் மலீக் திறந்து
வைத்தார்.வங்கியின் பாதுகாப்பு பெட்டக அறையை காம்ப்ளக்ஸ் உரிமையாளர் இம்பாலா
சுல்தான் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், கீழக்கரை DSP, கீழக்கரை ரோட்டரி சங்கத்தினர், அ.தி.மு.க
பிரமுகர் இம்பாலா உசைன் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
வங்கியின் மேலாளர்கள் மற்றும் ஊழியர்கள் விழா
ஏற்பாட்டினை செய்திருந்தனர்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment