(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, December 4, 2018

இந்திய விமானப்படைக்கு ஆள்சேர்ப்பு - கலெக்டெர்!!

No comments :
இந்திய விமானப்படைக்கு ஆள்சேர்ப்பு வருகிற 9–ந்தேதி முதல் 14–ந்தேதி வரை நெல்லை அண்ணா அரங்கத்தில் குரூப் ஒய் பிரிவில் ஏர்மேன் பணிக்கான ஆள்சேர்ப்பு நடைபெற உள்ளது.
இதற்கு 10–ம் வகுப்பு, பிளஸ்–2 அல்லது அதற்கு இணையான தகுதியும் 50 சதவீதம் மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு 14.7.1998 – 26.6.2002 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.
மேலும் 7 பாஸ்போர்ட்டு அளவு புகைப்படம், விணணப்பதாரர் பெயர், புகைப்படம் எடுத்த தேதி ஆகியவற்றை குறிப்பிட வேண்டும் மற்றும் தாசில்தாரிடம் இருந்து இருப்பிடச்சான்று பெற்றிருக்க வேண்டும்.



இதில் கலந்துகொள்ளும் இளைஞர்கள் எழுத்து தேர்வுக்கு தேவையான எழுதுபொருட்களை எடுத்துச்செல்ல வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களை சேர்ந்தவர்கள் வயது, தகுதியின் அடிப்படையில் இந்திய விமானப்படைக்கு சேர்வதற்கு இந்த ஆள்சேர்ப்பு திரளணியில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

மேலும் விவரங்களை ராமநாதபுரம் முன்னாள் படைவீரர் நல இணை இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment