(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, December 10, 2018

108 சேவைக்கான டிரைவர், டெக்னீசியன் பணிக்கான தேர்வு நாளை (டிச-11) நடக்கிறது!!

No comments :
ஆம்புலன்ஸ் 108 சேவைக்கான டிரைவர், டெக்னீசியன் பணிக்கு இன்று பரமக்குடி அரசு மருத்துவமனையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ்
செல்வன் கமுதியில் தெரிவித்தார்.


அவர் கூறியதாவது:

மெடிக்கல் டெக்னீசியன் பணிக்கு இளங்கலை அறிவியல் படிப்பான தாவரவியல், விலங்கியல், மைக்ரோ பையாலஜி, பையோ- கெமிஸ்ட்ரி, அல்லது 'பிளஸ் 2' தேர்ச்சியுடன், 2 ஆண்டுகள் நர்சிங் அல்லது 3 ஆண்டு நர்சிங், அல்லது இளங்கலை நர்சிங் படித்திருக்க வேண்டும்.

19- 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

13,650 ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



ஆம்புலன்ஸ் டிரைவர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகு ரக வாகன லைசென்ஸ், மூன்றாண்டுகளுடன் 'பேஜ் லைசென்ஸ்' பெற்று, ஓராண்டு நிறைவு பெற்றிருக்கவேண்டும்.

24- 35 வயதிற்குள் தேவை.

13,100 ரூபாய் சம்பளம் வழங்கப்படும்.

கூடுதல் தகவலுக்கு 73977 24828, 73974 44156 அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம், என்றார்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment