Sunday, December 9, 2018
கீழக்கரையில் நாளை(டிச.10) 'டிராய்' குறை கேட்பு முகாம்!!
மத்திய அரசின் 'டிராய்' என்ற தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் குறை கேட்பு முகாம் கீழக்கரையில் நாளை(டிச.10) நடக்கிறது.
கீழக்கரை உசைனீயா மகாலில் நடக்கும் முகாமில், அன்றாடம் பயன்படுத்தும் தொலைத்தொடர்பு சாதனங்களில் உள்ள குறைகளை
வாய்மொழியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் தெரிவிக்கலாம்.
ஏர்டெல், ஜியோ, வோடபோன், ஐடியா, பி.எஸ்.என்.எல்., உள்ளிட்ட அனைத்து கம்பெனி நெட்ஒர்க்கிலும் உள்ள குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். கீழக்கரை அனைத்து ஜமாத்தார்கள், சமூக நல அமைப்புகள், பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்பாடுகளை கீழக்கரை நுகர்வோர் சங்கம், மக்கள் டீம் அமைப்பினர் செய்து வருகின்றனர்.
செய்தி: கீழை தாஹீர்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment