Wednesday, November 7, 2018
வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!!
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பல ஆண்டுகளாக பதிவு செய்து
காத்திருக்கும் இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம், என
கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பது:
ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று பத்தாம் வகுப்பில்
தோல்வியுற்றவருக்கு மாதம் 200
ரூபாய்,
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 300 ரூபாய்,
பிளஸ் 2 தேர்ச்சிக்கு 400,
பட்டதாரிகளுக்கு 600 ரூபாய் வீதம்
மூன்றாண்டிற்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
தொகை நேரடியாக மனுதாரர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
வேலை வாய்ப்பு
அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல்
காத்திருப்பதோடு தொடர்ந்து பதிவை புதுப்பித்து இருக்க வேண்டும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும்,
மற்றவர்கள் 40 வயதுக்குள் இருப்பதோடு
குடும்ப ஆண்டு வருமானம் 50
ஆயிரத்திற்கு மிகாமல் இருக்கவேண்டும்.
தொலைதுாரக் கல்வி அல்லது அஞ்சல் வழி கல்வி கற்பவர்கள்
உதவித் தொகை பெறலாம். ஏற்கனவே உதவித்தொகை பெறுவோர் தொடர்ந்து மூன்றாண்டுகள் உதவித்
தொகை பெற்ற வங்கி கணக்கு புத்தக நகலுடன் சுயஉறுதி மொழி ஆவணத்தை பூர்த்தி செய்து
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒப்படைத்து தொடர்ந்து உதவித்தொகை பெறலாம்.
உறுதி மொழி ஆவணம் சமர்ப்பிக்காதவருக்கு உதவித்தொகை
நிறுத்தப்படும்.
பதிவு செய்து ஓராண்டு நிறைவு பெற்ற மாற்றுதிறனாளிகளுக்கு
பத்தாண்டுகள் வரை வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து
ஓராண்டுகள் நிறைவு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பத்தாம் வகுப்பும், அதற்கு கீழும் 600,
பிளஸ் 2 தேர்ச்சிக்கு 750,
பட்டதாரிகளுக்கு 1000 ரூபாய்
வழங்கப்படும்.
இவ்வாறு கூறியுள்ளார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment