(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, October 28, 2018

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3.20லட்சம் மோசடி!!

No comments :
ராமநாதபுரத்தில் பெண்ணுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3.20லட்சம் மோசடி செய்த பெண் மீது போலீஸார் சனிக் கிழமை வழக்குப்பதிவு செய்தனர்.

ராமநாதபுரம் அண்ணா சாலையில் உள்ளஜவுளிக்கடை ஒன்றில் பணி செய்து வந்தவர், சுந்தர்ராஜன் மகள் சுதா(32).இவரிடம் ராமநாதபுரம் அண்ணாநகரில் வசித்து வரும் கோபிநாத்தின் மனைவி காளீஸ்வரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவுப் பாதுகாப்பு பிரிவில் பணி செய்து வருவதாகக்கூறி அரசு வேலை வாங்கித் தருவதாக சுதாவிடம் ரூ.3.25லட்சத்தை பெற்றுக்கொண்டு திருப்பித் தராமல் இருந்து வந்தாராம்.



கடந்த 18.11.2017 ஆம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பாக சுதா ராமநாதபுரம் மாவட்டக் குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் காளீஸ்வரி மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகவுள்ள காளீஸ்வரியைத் தேடி வருகின்றனர்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment