(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Friday, August 17, 2018

ராமநாதபுரத்தில் "நம் சுவர், நம்மால் சிலர்" திட்டம்!!

No comments :
ராமநாதபுரத்தில் உபயோகமற்ற பொருள்களை இலவசமாக வழங்கும் வகையிலான நம் சுவர், நம்மால் சிலர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

மதுரை-மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை அருகில் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் ஆர்.ஆனந்த் சார்பில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தாத பொருள்களை இங்கு கொண்டு வந்து வைக்கலாம். அவற்றை தேவைப்படுவோர் இலவசமாக எடுத்துச் செல்லலாம்.

இத்திட்டத்தை ராமநாதபுரம் டி.எஸ்.பி. எஸ்.நடராஜன் ஏழைகளுக்கு இலவசமாக சட்டைகள், சேலைகளை வழங்கி தொடக்கி வைத்தார்.


இது குறித்து மருத்துவர் ஆர்.ஆனந்த் கூறியது: வீட்டில் மீதமாகிப்போன உணவுப் பொருள்கள், குளிர் பானங்கள் உள்பட எதையும் இங்குள்ள குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விட்டு போய்விடலாம். அதை தேவைப்பட்டவர்கள் எடுத்து சாப்பிட்டுக் கொள்ளலாம். தேவையில்லாமல் இருக்கும் துணிமணிகளையும் இங்கு வைக்கலாம். அதை வேண்டுபவர்கள் எடுத்துக்கொள்ளலாம் என்றார்.

சிந்தையில் உதித்த திட்டத்தை செய்ல்படுத்திய நல்லவர்களுக்கு நம் முகவை முரசு சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரியப்படுத்திக்கொள்கிறோம்.


இது போல், மிதமிஞ்சிய பொருட்களை தர்மமாக வழங்கும் திட்டம் அனைத்து ஊர்களிலும் தொடங்கப்பட வேண்டும் என்பதே ஏழை எளிய மக்களின் எதிர்பார்பு!!

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment