(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, August 15, 2018

ராமநாதபுரம் பழைய பஸ் ஸ்டாண்டில் அனுமதி பெறாமல் நிறுத்தப்படும் தனியார் பேருந்துகள்!!

No comments :


ராமநாதபுரம் பழைய பஸ் ஸ்டாண்டை முழுமையாக ஆக்கிரமித்து ஆம்னி பஸ்ஷெட்டாக பயன்படுத்துகின்றனர்.

ராமநாதபுரம் புது பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு வந்த பின் பழைய பஸ் ஸ்டாண்ட் பயன்பாடு இல்லாமல் போனது. ராமநாதபுரம் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்படும் உள்ளூர், வெளியூர் பஸ்களும்,அரண்மனையில் இருந்து கீழக்கரை மார்க்கமாக கீழக்கரை, ஏர்வாடி, சாயல்குடி, சிக்கல், திருப்புல்லாணி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் அரசு டவுன் பஸ்கள் பழைய பஸ்ஸ்டாண்டிற்குள் வந்து செல்கின்றன.

இதேபோல், ராமேஸ்வரம் மார்க்கத்தில் பெரியபட்டினம், ஆற்றாங்கரை, பனைக்குளம், அழகன்குளம், கடுக்காய்வலசை, உச்சிப்புளி, ரெகுநாதபுரம், பிரப்பன்வலசை, கல்கிணற்று வலசை, சீனியப்பா தர்கா உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் பஸ்களும்வந்து செல்கின்றன.
பெரும்பாலும் ரயிலில் வருவோர் பழைய பஸ்ஸ்டாண்டில் இருந்து எளிதில் தங்கள் ஊர்களுக்கு செல்ல முடியும். இதனால், அரசு டவுன் பஸ்கள் இங்கேயே நிறுத்தப்பட்டிருக்கும்.



ஆம்னி பஸ் ஆக்கிரமிப்பு:

சமீப காலமாக இங்கு ஆம்னி பஸ்களின் ஆக்கிரமிப்பு அதிகரித்ததால் அரசு பஸ் டிரைவர்கள் பஸ் ஸ்டாண்டிற்குள்நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அரசு பஸ் நிறுத்தும் டிராக்கில் ஆம்னி பஸ்களை வரிசையாக நிறுத்தி விடுகின்றனர். இதுகுறித்து கேட்கும், கண்டக்டர், டிரைவர்களிடம் தகராறு செய்கின்றனர்.

பகல் முழுவதும் ஆம்னி பஸ் ஷெட்டாகவும், இரவில் ஆம்னி பஸ் ஸ்டாண்டாகவும் செயல்படுகிறது. இதற்காக நகராட்சியில் எந்த அனுமதியும் பெறவில்லை. கட்டணமும் செலுத்துவது இல்லை.


இதுகுறித்து நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதியிடம் கேட்ட போது, ஏற்கனவே இதுகுறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக அங்கு அறிவிப்பு பலகை வைக்கப்படும். அதையும் மீறி நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும், என்றார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment