முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, August 29, 2018

தனியார் கல்லூரியிடமிருந்து அசல் சான்றிதழ்களை ஒரே நாளில் பெற்றுத்தந்த ராமநாதபுர மாவட்ட கலெக்டர்!!

No comments :


அரசு கல்லூரியில் இடம் கிடைத்ததைத் தொடர்ந்து கீழக்கரை தனியார் பொறியியல் - கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து மாணவரின் அசல் கல்விச் சான்றிதழ்களை ராமநாதபுரம் ஆட்சியர் கொ.வீரராகவ ராவ், பெற்று செவ்வாய்க்கிழமை மாணவரிடம் ஒப்படைத்தார்.

ராமநாதபுரத்தை அடுத்த ரெகுநாதபுரம் பகுதி கும்பரம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் மு.பாரதிராஜா(17). இவர் தனது தந்தை முருகானந்தத்துடன் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியர் கொ.வீரராகவராவை சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. மெக்கானிக்கல் படிக்க ரூ.20ஆயிரம் பணமும், அசல் சான்றிதழ்களையும் கொடுத்திருந்தோம். இதன் பின்னர் ராமநாதபுரம் அரசு பொறியியல் கல்லூரியில் சேர இடம் கிடைத்து விட்டது. அதனால் அத்தொகையையும், அசல் சான்றிதழ்களையும் திருப்பித் தருமாறு கீழக்கரையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகத்திடம் பலமுறை கேட்டும் தரவில்லை. அவற்றைப் பெற்றுத் தருமாறு மனுவில் தெரிவித்திருந்தனர்.


மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர். ராமநாதபுரம் சார் ஆட்சியர் ஆர்.சுமனிடம் தனியார் கல்லூரி நிர்வாகத்திடமிருந்து உடனடியாக சான்றிதழ்களை பெற்றுத்தருமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து சார் ஆட்சியர் தனியார் கல்லூரி நிர்வாகத்திடம் பேசி ரூ.20 ஆயிரத்தையும், மாணவரின் அசல் சான்றிதழ்களையும் திங்கள்கிழமையே பெற்றுத் தந்தார்.

இதனைத் தொடர்ந்து மாணவர் எம்.பாரதிராஜாவும், அவரது தந்தையும் - செவ்வாய்க்கிழமை ஆட்சியரை சந்தித்து அசல் சான்றிதழையும், ரூ.20 ) ஆயிரத்தையும் பெற்றுக் கொண்டனர்.

ஒரே நாளில் கல்விச்சான்றிதழை பெற்றுத் தந்தற்கு மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவிற்கு மாணவர் நன்றி தெரிவித்தார்.


செய்தி; தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Sunday, August 26, 2018

வைகை நீர் ராமநாதபுரம் வந்தடைவதில் சிக்கல்!?

No comments :


ராமநாதபுரம் மாவட்ட எல்லையாக உள்ள பார்த்திபனுார் வைகைஆற்றின் குறுக்கே மதகு அணையில் கருவேல மரங்கள், நாணல்கள் அடர்ந்துள்ளது. இத்துடன் வறண்டு வரும் நிலத்தடி நீரால் பரமக்குடிமக்கள் வைகை நீரை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
பார்த்திபனுார் மதகு அணை ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்தை மையமாக வைத்து,1975ல் பார்த்திபனுார் மதகு அணை 25 ஷட்டர்களுடன் கட்டப்பட்டது.

வைகையில் தண்ணீர் வரும் காலங்களில் வலதுபிரதான கால்வாய் வழியாக, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 43.2 கி.மீ., துாரம் 30 பிரிவு கால்வாய்கள் மூலம் 154 கண்மாய்களுக்கு நீர் செல்லும். இதன் மூலம் 33 ஆயிரத்து196 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும்.

இடது பிரதான கால்வாய் மூலம் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்திற்கு,45 கி.மீ., துாரம் 28 பிரிவு கால்வாய்கள் மூலம் 87 கண்மாய்களுக்கு நீர் செல்லும். இதன் மூலம் 34 ஆயிரத்து 982 ஏக்கர் நிலங்கள் பயன் பெறும்.



வெள்ளப்போக்கி கால்வாய்கள் மூலம், பரமக்குடி, கமுதி,முதுகுளத்துார் தாலுகாவிற்கும், பரளை ஆற்றின் மூலமும் 50 க்கும் மேற்பட்டகண்மாய்கள் நிரப்பப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் வானம் பார்த்த பூமியாக உள்ளது. கடந்த நான்குஆண்டுகளாக மழையின்றி நீர் நிலைகள் காய்ந்துள்ளன. தற்போதுவைகைஅணையில் நீர் மட்டம் 68 அடியாக உள்ளது.

பரமக்குடி குடிநீர் தேவைக்கு தண்ணீர் வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையுடன் மக்கள் காத்திருக்கின்றனர். பரமக்குடியில் நிலத்தடி நீர் வைகை ஆற்றை ஒட்டிய பகுதியில் 150 அடியிலும், மற்ற பகுதியில் 250 முதல் 300 அடியையும் தாண்டி அதல பாதளத்திற்கு சென்று விட்டது. பொதுமக்கள் தங்களது வீடுகளில் 400 முதல் 500 அடிக்கும் மேல் ஆழ்குழாய் அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது. பல லட்சம் ரூபாய் செலவு செய்து மனஉளைச்சலுக்க ஆளாகியுள்ளனர்.

2017 டிச., 10 ல் பார்த்திபனுார் மதகுக்கு வந்த வைகை நீர் தொடர்ந்து பத்துநாட்கள் பரமக்குடி வழியாக ராமநாதபுரம் பெரிய கண்மாயை அடைந்தது. அப்போது காட்டாற்று வெள்ளமென ஆற்றின் இரண்டு ஓரங்களில் மட்டும்தண்ணீர் சென்றதால் பரமக்குடியின் நிலத்தடி நீரில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

தற்போது மழை பொழிவின்றி உள்ளதால், வைகையில் தண்ணீர் திறக்கப்படும்சூழல் உள்ளது. இதனால் ஆற்றில் கட்டப்பட்டுள்ள கமுதக்குடி, தெளிச்சாத்தநல்லுார், குணப்பனேந்தல், வல்லம் ஆகிய பகுதிகளில் உள்ள தடுப்பணைகளில் தண்ணீரை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்போது தான் பரமக்குடி, நயினார்கோவில், போகலுார் உள்ளிட்ட பகுதிகளில்நீர் மட்டம் உயர ஏதுவாகும். பரமக்குடி வியாபாரிகள் சங்கம், பல்வேறு அமைப்பினர், கட்சியினர், சமூக ஆர்வலர்கள், வைகை பாசன விவசாயிகள் என ராமநாதபுரம் மாவட்டத்திற்குதண்ணீர் வேண்டி கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.



வைகை ஆறு தொடங்கி, வலது, இடது பிரதான கால்வாய்கள், பரளை ஆறு என பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட அணைகள் தொடர்ந்து தண்ணீர் வராமல் உள்ளது. பொதுப்பணித்துறையினர் பராமரிக்காமல்விட்டுள்ளனர். ஆங்காங்கே சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்துள்ளதுடன், பிரிவு கால்வாய்க்கு தண்ணீர் செல்லும் வழியில் அடைப்புகள் உருவெடுத்துள்ளன. இதனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டுமா என்ற நிலையில், தண்ணீர் எதிர்த்து செல்ல முடியாமல் ஆங்காங்கே தடைபடும் சூழல் உள்ளது.


செய்தி: தினமலர்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுர மாவட்டத்தில் தொடரும் மணல் திருட்டு!!

No comments :


ராமேஸ்வரம் அருகே பாம்பன் குந்துகால் கடற்கரையில் இருந்து திருட்டுதனமாக மணல் அள்ளி வந்த இரு டிராக்டர் மற்றும் வெளியூரில் இருந்து கண்மாயில் உள்ள களிமண் ஏற்றி வந்த இரு டிப்பர் லாரியை ராமநாதபுரம் கனிமவளத்துறை அதிகாரிகள், பாம்பனில் மடக்கி பிடித்து விசாரித்தனர்.


(FILE PICTURE - SOURCE: GOOGLE)



இதில் கடற்கரை சவுடு மணல், களிமண் ஏற்றி வந்ததற்கான அனுமதியில்லாதது தெரியவந்ததும், அவர்கள் மீது கனிமவள அதிகாரிகள் வழக்கு பதிந்து, ராமேஸ்வரம் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Saturday, August 25, 2018

108 ஆம்புலன்ஸ் பணிக்கு ஆக-27ம் தேதி நேர் முகத்தேர்வு!!

No comments :


பரமக்குடி அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ஆக., 27அன்று 108 ஆம்புலன்ஸ் பணிக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளதாக, ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ் செல்வன் தெரிவித்தார்.



மருத்துவ உதவி யாளர்கள் பணிக்கு 19 வயதுக்கு மிகாமல் 30 வயதுக்குள்ளாகவும், ஓட்டுநர் பணிக்கு 24 வயதுக்கு மேல் 35 வயதுக்குள்இருக்கு வேண்டும். தகுதியான பட்டப்படிப்புகள் முடித்த சான்றிதழ் மற்றும் ஓட்டுநர் உரிமம், அனுபவம் தொடர்பான சான்றிதழ்களுடன் வரவேண்டும்.


மேலதிக விபரங்களுக்கு 73977 24828, 98403 65462 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

அரசு மருத்துவமனையை கண்டித்து ஆர்ப்பாட்டம்!!

No comments :


ராமநாதபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

அரண்மனை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா குழு நிர்வாகி என்.ராமமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் காசிநாததுரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.குருவேல், எம்.ராஜ்குமார், இ.கண்ணகி, தாலுகா செயலாளர் பி.செல்வராஜ், மாவட்டக்குழு என்.வெங்கடேஷ் பங்கேற்றனர்.



மருத்துவர்கள் காலை 7:30 முதல் பகல் 1:00 மணிவரை புற நோயாளிகள் பணியில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். மருத்துவர் கவனக்குறைவால் ஏற்படும் மரணங்களுக்கு சட்டப் பூர்வ நடவடிக்கை, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும், இரவு பணியில் கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

செய்தி: தினசரிகள்



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

திறந்த வெளி ”பாராக’ செயல்படுகிறது கீழக்கரை பஸ் ஸ்டாண்ட் பகுதி!!

No comments :
கீழக்கரை பஸ் ஸ்டாண்ட் அருகில் இரு டாஸ்மாக் கடைகள் செயல்படுவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் கீழக்கரை பஸ் ஸ்டாண்ட், அம்மா உணவகம் பின்புறமுள்ள மீன் மார்க்கெட் பகுதிகள் திறந்த வெளி பாராக செயல்படுகிறது.



அதிகாலை 4 மணிக்கே கும்பலாக வரும் குடிமகன்களால் பயணிகள் அச்சத்துடன் செல்கின்றனர். குடித்துவிட்டு உடைத்தெறியும் பாட்டில்கள் சிதறிக்கிடக்கின்றன.

திறந்தவெளியில் எவ்வித சங்கடமும் இன்றி குடிப்போரால் பயணிகள் முகம் சுளிக்கின்றனர்.


இதனை தடுக்க போலீசார் ரோந்து சுற்றிவர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்ட புதிய கலெக்டராக பதவி ஏற்றுக்கொண்டார் திரு. வீரராகவராவ்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக இருந்த திரு.நடராஜன் மாற்றப்பட்டு, புதிய கலெக்டராக வீரராகவராவ் நேற்று மாலை பதவி ஏற்றுக்கொண்டார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி பதவி பொறுப்புகளை ஒப்படைத்தார்.

அதைத்தொடர்ந்து புதிய கலெக்டர் வீரராகவராவ் நிருபர்களிடம் கூறியதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக அரசின் திட்டங்கள் முதல்–அமைச்சர் உத்தரவின்பேரில சிறப்பாக செயல்படுத்தப்படும். அனைத்து துறை அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து நகர் மற்றும் கிராம பகுதிகளின் வளர்ச்சி திட்டங்கள், குடிநீர் திட்டங்கள், திடக்கழிவு மேலாண்மை சாலை வசதி போன்ற அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்படும்.

தமிழகத்திலேயே மிக நீண்ட 237 கிலோ மீட்டர் நீள கடற்கரை, 42 ஆயிரத்து 500 மீனவ குடும்பங்கள் இந்த மாவட்டத்தில் உள்ளன. அவர்களுக்கான வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்படும். மாவட்டத்தின் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படும். பிரதமரின் தூய்மை பாரத இயக்கம் சிறப்பாக செயல்படுத்தப்படும். விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலைத்துறையினர் மூலம் தீர்வுகாணப்படும்.

மாவட்டத்தில் கல்வி சுகாதார பணிகள் விரைவுபடுத்தப்படும். இளைஞர்களுக்கான திறன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சிகள் தீவிரப்படுத்தப்படும்.

மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை பெரிய அளவில் இருப்பதாக தெரியவில்லை. தண்ணீரை வினியோகிக்கும் முறையில் குளறுபடிகள் காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த குறைகள் விரைவில் சரிசெய்யப்படும். வைகை அணையில் இருந்து தண்ணீரை பெற உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே மதுரை மாவட்டத்தில் பேஸ்புக், வாட்ஸ்–அப் மூலம் பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க செயலி உருவாக்கப்பட்டது. அதன்மூலம் பொது மக்கள் பயன்பெற்றனர்.


அதேபோல ராமநாதபுரம் மாவட்டத்திலும் உருவாக்கப்படும். மக்கள் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, அவற்றை உடனடியாக தீர்த்து வைக்கப்படும். மாவட்ட நிர்வாகத்தின் வளர்ச்சிதிட்டங்களுக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தரவேண்டும். இவ்வாறு கூறினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, திட்ட அலுவலர் ஹெட்சிலீமா அமலினி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் செல்லத்துரை, மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, உதவி அலுவலர் கயிலைசெல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக இருந்த திரு.நடராஜன் மாற்றப்பட்டு,  புதிய கலெக்டராக வீரராகவராவ் நேற்று மாலை பதவி ஏற்றுக்கொண்டார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி பதவி பொறுப்புகளை ஒப்படைத்தார்.

அதைத்தொடர்ந்து புதிய கலெக்டர் வீரராகவராவ் நிருபர்களிடம் கூறியதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக அரசின் திட்டங்கள் முதல்–அமைச்சர் உத்தரவின்பேரில சிறப்பாக செயல்படுத்தப்படும். அனைத்து துறை அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து நகர் மற்றும் கிராம பகுதிகளின் வளர்ச்சி திட்டங்கள், குடிநீர் திட்டங்கள், திடக்கழிவு மேலாண்மை சாலை வசதி போன்ற அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்படும்.

தமிழகத்திலேயே மிக நீண்ட 237 கிலோ மீட்டர் நீள கடற்கரை, 42 ஆயிரத்து 500 மீனவ குடும்பங்கள் இந்த மாவட்டத்தில் உள்ளன. அவர்களுக்கான வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்படும். மாவட்டத்தின் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படும். பிரதமரின் தூய்மை பாரத இயக்கம் சிறப்பாக செயல்படுத்தப்படும். விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலைத்துறையினர் மூலம் தீர்வுகாணப்படும்.

மாவட்டத்தில் கல்வி சுகாதார பணிகள் விரைவுபடுத்தப்படும். இளைஞர்களுக்கான திறன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சிகள் தீவிரப்படுத்தப்படும்.

மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை பெரிய அளவில் இருப்பதாக தெரியவில்லை. தண்ணீரை வினியோகிக்கும் முறையில் குளறுபடிகள் காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த குறைகள் விரைவில் சரிசெய்யப்படும். வைகை அணையில் இருந்து தண்ணீரை பெற உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே மதுரை மாவட்டத்தில் பேஸ்புக், வாட்ஸ்–அப் மூலம் பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க செயலி உருவாக்கப்பட்டது. அதன்மூலம் பொது மக்கள் பயன்பெற்றனர்.
அதேபோல ராமநாதபுரம் மாவட்டத்திலும் உருவாக்கப்படும். மக்கள் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, அவற்றை உடனடியாக தீர்த்து வைக்கப்படும். மாவட்ட நிர்வாகத்தின் வளர்ச்சிதிட்டங்களுக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தரவேண்டும். இவ்வாறு கூறினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, திட்ட அலுவலர் ஹெட்சிலீமா அமலினி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் செல்லத்துரை, மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, உதவி அலுவலர் கயிலைசெல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Thursday, August 23, 2018

ராமநாதபுரம் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டது!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 63 இடங்களில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்று கட்டித்தழுவி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

ராமநாதபுரம் மதுரை ரோட்டில் உள்ள ஈத்கா கோரி தோப்பு மைதானத்தில் நேற்று காலை 8:00 மணிக்கு சிறப்பு தொழுகை நடந்தது. ஜாமத்தார்கள் முன்னிலையில் ஏராளமான முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து தொழுகையில் பங்கேற்றனர். தொழுகை முடிந்தவுடன் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

மேலும் கேணிக்கரை, தேவிபட்டினம் உள்ளிட்ட 11 இடங்களில் சிறப்பு தொழுகை நடந்தது.

பரமக்குடியில் நகர் பகுதி, எமனேஸ்வரம், பார்த்திபனுார் உள்ளிட்ட 5 இடங்கள், கமுதி அபிராமத்தில் அலி அப்பா மைதானம், ராமேஸ்வரம் நகர், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம், உச்சிப்புளி உள்ளிட்ட 16 இடங்கள், கீழக்கரை, திருப்புல்லாணி, ஏர்வாடி தர்கா, வாலிநோக்கம், சாயல்குடி, உத்திரகோசமங்கை உட்பட 12 இடங்கள், திருவாடானை, தொண்டி, எஸ்.பி.பட்டினம்,திருப்பாலைக்குடி, ஆர்.எஸ்.மங்கலம் உட்பட 17 இடங்கள், முதுகுளத்துார் உட்பட மாவட்டத்தில் 63 இடங்களில் சிறப்பு தொழுகைகள் நடந்தன.


கீழக்கரை: கீழக்கரையில் பள்ளிவாசல்கள், திடல்களில் பக்ரீத் பெருநாள் சிறப்பு தொழுகை நடந்தது. கிழக்குத்தெரு அப்பா பள்ளி, குளங்கரைப்பள்ளி, மேலத்தெரு புதுப்பள்ளி, ஓடைக்கரைப்பள்ளி, பழைய குத்பா பள்ளி, ஜூம்மா பள்ளி, வடக்குத்தெரு, தெற்குத்தெரு பள்ளி, கடற்கரை பள்ளி ஆகிய இடங்களில் நடந்தது. பெண்கள் தொழுகை செய்ய தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.

பெரியபட்டினம்: அல்மஜ்ஜிதுல் பலா சிங்காரப்பூங்கா பள்ளி வாசலிலும், ஜலால் ஜமால் ஜும்மா பள்ளிகளிலும் ஏராளமானோர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

ஆர்.எஸ். மங்கலம்: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் அருகே ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடந்தது. தொடர்ந்து ஈத்கா மைதானத்தில் இருந்து ஊர்வலமாக சென்ற ஜமாத்தார்கள் ஜூம்மா பள்ளியில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

அதைத்தொடர்ந்து வீடுகளின் முன்பு குர்பானிக்காக ஆடுகள் பலியிடப்பட்டு ஏழைகளுக்கு வழங்கப்பட்டன.

தொண்டி: தொண்டியில் வெள்ளைமணல் தெருவில் உள்ள திடலில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகை நடந்தது.
ஏராளமானோர் கலந்து கொண்டனர். நம்புதாளை, மங்களக்குடி, எஸ்.பி.பட்டினம் போன்ற கிராமங்களிலும் சிறப்பு தொழுகை நடந்தது.


செய்தி: தினமலர்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Sunday, August 19, 2018

10 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் பள்ளிகளிலேயே இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு பதிவு செய்துகொள்ளலாம்!!

No comments :
10 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலேயே இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு பதிவு செய்துகொள்ளலாம் எனவும், இதற்காக வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வரத் தேவையில்லை எனவும் ராமநாதபுரம் ஆட்சியர் எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களது கல்வித் தகுதியினை தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாகவே கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் நேரடியாக இத்துறையின் இணையதளம் வாயிலாக பதிவு செய்யப்பட்டு அடையாள அட்டை வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வர வேண்டும் என்ற அவசியம் இல்லை. நேரில் வருவதால் மாணவர்களுக்கு பொருள் செலவு, கால விரயம், தேவையற்ற அலைச்சல் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல் போன்றவற்றை தவிர்க்கலாம்.


கடந்த 16 ஆம் தேதியிலிருந்து வரும் 30 ஆம் தேதி வரை 15 நாள்களுக்கு ஒரே பதிவு மூப்பில் அவரவர்கள் பயின்ற பள்ளியிலேயே இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணி நடைபெற்று வருகிறது.


சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களும் தங்களது கல்வித்தகுதியை வேலைவாய்ப்புத் துறையின் இணையதளத்திலேயே பதிவு செய்யலாம். அல்லது அவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகி பதிவு செய்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Friday, August 17, 2018

ராமநாதபுரத்தில் "நம் சுவர், நம்மால் சிலர்" திட்டம்!!

No comments :
ராமநாதபுரத்தில் உபயோகமற்ற பொருள்களை இலவசமாக வழங்கும் வகையிலான நம் சுவர், நம்மால் சிலர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

மதுரை-மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை அருகில் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் ஆர்.ஆனந்த் சார்பில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தாத பொருள்களை இங்கு கொண்டு வந்து வைக்கலாம். அவற்றை தேவைப்படுவோர் இலவசமாக எடுத்துச் செல்லலாம்.

இத்திட்டத்தை ராமநாதபுரம் டி.எஸ்.பி. எஸ்.நடராஜன் ஏழைகளுக்கு இலவசமாக சட்டைகள், சேலைகளை வழங்கி தொடக்கி வைத்தார்.


இது குறித்து மருத்துவர் ஆர்.ஆனந்த் கூறியது: வீட்டில் மீதமாகிப்போன உணவுப் பொருள்கள், குளிர் பானங்கள் உள்பட எதையும் இங்குள்ள குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விட்டு போய்விடலாம். அதை தேவைப்பட்டவர்கள் எடுத்து சாப்பிட்டுக் கொள்ளலாம். தேவையில்லாமல் இருக்கும் துணிமணிகளையும் இங்கு வைக்கலாம். அதை வேண்டுபவர்கள் எடுத்துக்கொள்ளலாம் என்றார்.

சிந்தையில் உதித்த திட்டத்தை செய்ல்படுத்திய நல்லவர்களுக்கு நம் முகவை முரசு சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரியப்படுத்திக்கொள்கிறோம்.


இது போல், மிதமிஞ்சிய பொருட்களை தர்மமாக வழங்கும் திட்டம் அனைத்து ஊர்களிலும் தொடங்கப்பட வேண்டும் என்பதே ஏழை எளிய மக்களின் எதிர்பார்பு!!

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Thursday, August 16, 2018

ராமநாதபுரத்தில் சுதந்திர தினவிழா; கலெக்டர் நடராஜன் தேசியக் கொடி ஏற்றினார்!!

No comments :
ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தினவிழா கோலாகலமாக நடைபெற்றது. கலெக்டர் நடராஜன் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

முன்னதாக அவரை மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரிபோலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா ஆகியோர் வரவேற்று அழைத்து வந்தனர். போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்ட கலெக்டர் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.



சிறப்பாக பணியாற்றிய கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைத்துரை உள்பட 28 காவல்துறை அலுவலர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வகுமார் உள்பட பல்வேறு அரசுத் துறைகளை சார்ந்த 64 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். மேலும், பல்வேறு அரசு நலத்திட்டங்களின் கீழ் 83 பேருக்கு ரூ. 1 கோடியே 3 லட்சத்து 83 ஆயிரத்து 300 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். ராமநாதபுரம் அருகே நயினார்கோவில் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நகை வழிப்பறி கும்பலை துணிச்சலுடன் விரட்டி மடக்கி பிடித்த கிராம மக்கள் 3 பேருக்கு கலெக்டர் நடராஜன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

கொடிநாள் வசூலில் சாதனைபடைத்த ராமநாத புரம் வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வகுமாருக்கு கவர்னரின் பதக்கம் வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சரக போலீஸ் டி.ஐ.ஜி. காமினி, மாவட்ட திட்ட இயக்குனர் ஹெட்சிலீமா அமாலினி, வருவாய் கோட்டாட்சியர் சுமன், பரமக்குடி சப்-கலெக்டர் விஷ்ணு சந்திரன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் செல்லத்துரை, முதன்மை கல்வி அலுவலர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Wednesday, August 15, 2018

ராமநாதபுரம் பழைய பஸ் ஸ்டாண்டில் அனுமதி பெறாமல் நிறுத்தப்படும் தனியார் பேருந்துகள்!!

No comments :


ராமநாதபுரம் பழைய பஸ் ஸ்டாண்டை முழுமையாக ஆக்கிரமித்து ஆம்னி பஸ்ஷெட்டாக பயன்படுத்துகின்றனர்.

ராமநாதபுரம் புது பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு வந்த பின் பழைய பஸ் ஸ்டாண்ட் பயன்பாடு இல்லாமல் போனது. ராமநாதபுரம் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்படும் உள்ளூர், வெளியூர் பஸ்களும்,அரண்மனையில் இருந்து கீழக்கரை மார்க்கமாக கீழக்கரை, ஏர்வாடி, சாயல்குடி, சிக்கல், திருப்புல்லாணி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் அரசு டவுன் பஸ்கள் பழைய பஸ்ஸ்டாண்டிற்குள் வந்து செல்கின்றன.

இதேபோல், ராமேஸ்வரம் மார்க்கத்தில் பெரியபட்டினம், ஆற்றாங்கரை, பனைக்குளம், அழகன்குளம், கடுக்காய்வலசை, உச்சிப்புளி, ரெகுநாதபுரம், பிரப்பன்வலசை, கல்கிணற்று வலசை, சீனியப்பா தர்கா உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் பஸ்களும்வந்து செல்கின்றன.
பெரும்பாலும் ரயிலில் வருவோர் பழைய பஸ்ஸ்டாண்டில் இருந்து எளிதில் தங்கள் ஊர்களுக்கு செல்ல முடியும். இதனால், அரசு டவுன் பஸ்கள் இங்கேயே நிறுத்தப்பட்டிருக்கும்.



ஆம்னி பஸ் ஆக்கிரமிப்பு:

சமீப காலமாக இங்கு ஆம்னி பஸ்களின் ஆக்கிரமிப்பு அதிகரித்ததால் அரசு பஸ் டிரைவர்கள் பஸ் ஸ்டாண்டிற்குள்நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அரசு பஸ் நிறுத்தும் டிராக்கில் ஆம்னி பஸ்களை வரிசையாக நிறுத்தி விடுகின்றனர். இதுகுறித்து கேட்கும், கண்டக்டர், டிரைவர்களிடம் தகராறு செய்கின்றனர்.

பகல் முழுவதும் ஆம்னி பஸ் ஷெட்டாகவும், இரவில் ஆம்னி பஸ் ஸ்டாண்டாகவும் செயல்படுகிறது. இதற்காக நகராட்சியில் எந்த அனுமதியும் பெறவில்லை. கட்டணமும் செலுத்துவது இல்லை.


இதுகுறித்து நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதியிடம் கேட்ட போது, ஏற்கனவே இதுகுறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக அங்கு அறிவிப்பு பலகை வைக்கப்படும். அதையும் மீறி நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும், என்றார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Tuesday, August 14, 2018

ராமநாதபுர வாகன நெரிசலுக்கு விமோசனம் எப்போது?!!

No comments :


ராமநாதபுரத்தில் பார்க்கிங் வசதி இல்லாமல் புதிய கடைகள் திறக்கப்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெருக்கடி அதிகமாகி கொண்டே செல்வதாக வாகன ஓட்டிகள் புலம்புகின்றனர். கடைகள், வணிக வளாகங்கள் துவங்கும்போது தேவையான பார்க்கிங் வசதி செய்யப்பட்டு உள்ளதா என ஆய்வு நடத்திய பின்புதான் நகராட்சி அனுமதியளிக்க வேண்டும். 


ஆனால் ராமநாதபுரத்தில் அக்ரகாரம் ரோடு, போஸ்ட் ஆபீஸ் தெரு, சாலைதெருக்களில் இதை ஆய்வு செய்யாமல் அதிகளவில் கடைகள் திறக்க அனுமதிப்பாக புகார் எழுந்துள்ளது. இதனால் கடைகளுக்கு வருபவர்கள் ரோட்டில்  பார்க்கிங் செய்கின்றனர். இதன் காரணமாக இந்த சாலைகளில் அதிகளவு போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. 

சாலைகளை கடந்து செல்ல அதிக நேரம் ஆகிறது. எனவே புதிதாக திறக்கப்படும் நிறுவனங்கள் பார்க்கிங் வசதி செய்துள்ளனவா என ஆய்வு செய்த பின்பே அனுமதியளிக்க வேண்டும்; இதுவரை முறையாக  பார்க்கிங் வசதி செய்யாத கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 

பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும் என,
  நகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


செய்தி: திரு. தாஹீர், கீழை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

TNPSC குரூப்-2; 1,199 பணியிடங்களுக்கான அறிவிப்பு!!

No comments :

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-2 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

மொத்தம் 1,199 பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளது. இது எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் நிரப்பப்படும் பணியிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பணியிடங்களுக்கு வி்ண்ணப்பிக்க விரும்புபவர்கள் 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். சில பணிகளுக்கு 40 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு பின்பற்றப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.




விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கலாம். 9-9-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். செப்டம்பர் 11-ந் தேதிக்குள் கட்டணம் செலுத்தலாம்.

இதற்கான முதல்நிலை எழுத்து தேர்வு நவம்பர் 11-ந் தேதி நடைபெறும். அந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு முதன்மை தேர்வும், அதில் வெற்றி பெறுபவர்களுக்கு நேர்முக தேர்வும் நடத்தப்படும். அனைத்திலும் தேர்ச்சி பெறுபவர்கள் பணி நியமனம் பெறலாம்.

இது பற்றிய விரிவான விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம். 

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்; அதிகாரிகள் அலட்சியம்!!

No comments :
முதுகுளத்தூர்-சாயல்குடி புதிய சாலையின் நடுவில் செல்லும் காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதனை சரி செய்யாமல் குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர்கள், நெடுஞ்சாலை  பொறியாளர்கள் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக்கொண்டு அலட்சியப்படுத்தி வருவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சாயல்குடி-தஞ்சாவூர் மாநில நெடுஞ்சாலை செல்லும் கடலாடி-முதுகுளத்தூர் சாலையோரம் காவிரி கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாய் செல்கிறது. 

கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளி பேருந்து நிறுத்தம், மின்வாரிய பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் காவிரி குழாய் இடம் மாறி செல்கிறது. சாலையின் குறுக்கே குழாய் இருப்பதால், போக்குவரத்து செல்ல செல்ல புதிய சாலை நாசமடைந்து, குழாயும் சேதமடைந்து விட்டது. இதனால் குழாயிலிருந்து குடிநீர் வெளியேறி சாலையோரம் பெருகி வருகிறது. 

நாள் ஒன்றுக்கு பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாக ஓடுகிறது. இதனால் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இச்சாலையின் வழியே வாலிநோக்கம் அரசு உப்பளத்திலிருந்து உப்புகளை ஏற்றி அதிக பாரத்துடன் லாரிகள் வருவதால், உடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் சிக்கி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. சக்கரம் சிக்கிவிடும் அபாயத்தில், பேருந்துகளை இச்சாலையில் இயக்க முடியாமல் ஓட்டுனர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இருசக்கர வாகனத்தில் வருவோர் பள்ளம் தெரியாமல் விழுந்து காயங்களுடன் செல்கின்றனர்.

கடந்த ஒரு மாதமாக இந்த அவலநிலை நீடிப்பது குறித்து, பொதுமக்கள் காவிரி கூட்டுக்குடிநீர் உதவிபொறியாளர், மாநில நெடுஞ்சாலைதுறை உதவிபொறியாளருக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் கூறுகின்றனர்.
 

பொதுமக்கள் கூறுகையில், ‘‘இரண்டு உதவி பொறியாளர்களும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். ஆனால் பிரச்சனையை போக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மக்கள்தான் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே கடலாடி-முதுகுளத்தூர் புதிய சாலையில் உடைந்து ஓடும் காவிரி குடிநீர் குழாயை சரிசெய்து, சாலையை சீரமைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி: தினமலர்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)