(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, May 23, 2018

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு; விண்ணப்பிக்க கடைசி நாள் ஜுன் -6!!

No comments :

உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள ஜூனியர் ஆபரேட்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் ஜூன் 16 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: ஜூனியர் ஆபரேட்டர்-58 (23 இடங்கள் தமிழகம், புதுச்சேரி)

வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 முதல் 26க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.



தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் இரண்டு ஆண்டு ஐடிஐ., படிப்பை எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், எலக்ட்ரீசியன், மெஷினிஸ்ட், பிட்டர் போன்ற ஏதாவது ஒரு டிரேடு பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் ஸ்கில் புரொபீசியன்சி தேர்வு மூலமாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 150. ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கும் தேதி: 26.05.2018 ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.06.2018

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 15 ஜூலை 2018

விண்ணப்பிக்கும் முறை:


இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய




இந்த லிங்கை கிளிக் செய்து இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து தெரிந்துகொள்ளவும்.



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment