(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, May 2, 2018

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்ஃபு வாரிய சொத்துகளை மீட்க நடவடிக்கை - எம்.பி. அன்வர் ராஜா!!

No comments :

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான வக்ஃபு வாரியம் சொத்துகளை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என, அன்வர்ராஜா எம்.பி. செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

வக்ஃபு வாரியத்தின் புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் அன்வர்ராஜாவை, அவரது இல்லத்தில் அதிமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், முஸ்லிம் பிரமுகர்கள் உள்பட பலரும் சந்தித்து பாராட்டுக்களை தெரிவித்தனர்.

பின்னர், அவர் கூறியதாவது:
வக்ஃபு வாரியத்தின் தலைவர் பதவி கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் காலியாகவே இருக்க வந்தது. இப்பதவிக்கு தற்போது ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டு-ளேன். வக்ஃபு வாரியத்தின் பல கோடி ரூபாய் சொத்துகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.


திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டும் அண்மையில் ரூ. 20 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துகள் கண்டறியப்பட்டுள்ளன.
பள்ளிவாசல்களில் பெரும்பாலானவை வக்பு வாரியத்தில் இணைக்கப்படாமல், தனித்தனியாக இயங்குவதையும் ஆய்வு செய்து அவற்றையும் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல், எந்தெந்த பள்ளிவாசல்கள் வக்ஃபு வாரியத்தில் உள்ளன எனவும் கணக்கெடுத்து வருகிறோம். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சொத்துகளை முதலில் கணக்கெடுத்து, பின்னர் அவற்றை வக்ஃபு வாரியத்துடன் இணைக்க தேவையான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம்.

நாட்டிலேயே மதுரையில் மட்டுமே வக்ஃபு வாரியத்தின் கட்டுப்பாட்டில் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. விரைவில் அங்கு பாலிடெக்னிக்கும், கலை அரங்கமும் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல், தமிழகத்தில் விரைவில் ஒரு மருத்துவக் கல்லுாரி தொடங்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்காக, பல்வேறு கல்வி நிறுவனங்களை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வக்ஃபு வாரியத்தில் உள்ள 300-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்பவும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சொத்துகளை மீட்கும் வகையில், மாவட்ட அளவில் குழுக்களும் அமைக்கப்படும்.

என்று தன் உரையில் குறிப்பிட்டார்.

மக்களைவை உறுப்பினரின் சிந்தனைகள் செயல் வடிவம் பெறுமா? எண்ணங்கள் நிறைவேறுமா? மக்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

வாழ்த்துக்களுடன் முகவை முரசு!!




(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment