Saturday, May 26, 2018
ராமநாதபுரத்தில் மே 29 ம் தேதி குறை தீர் கூட்டம்!!
ராமநாதபுரத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும்
வாரிசுதாரர்கள் குறை தீர்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை (மே 29) நடக்கிறது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில்
ஆட்சியர் எஸ்.நடராஜன் தலைமையில் அன்றைய தினம் பிற்பகல் 3 மணியளவில்
இக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் சம்பந்தப்பட்டவர்கள் தங்களது குறைகளையும், கோரிக்கைகளையும்
மனுவாக எழுதி ஆட்சியரிடம் கொடுத்து தீர்வு பெறலாம் என ஆட்சியர் அலுவலகம்
வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Wednesday, May 23, 2018
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு; விண்ணப்பிக்க கடைசி நாள் ஜுன் -6!!
உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில்
கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள ஜூனியர் ஆபரேட்டர்
பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும்
ஜூன் 16 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஜூனியர் ஆபரேட்டர்-58 (23 இடங்கள் தமிழகம், புதுச்சேரி)
பணி: ஜூனியர் ஆபரேட்டர்-58 (23 இடங்கள் தமிழகம், புதுச்சேரி)
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 முதல்
26க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி
பிரிவினருக்கு 3
ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் இரண்டு ஆண்டு
ஐடிஐ., படிப்பை எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக், இன்ஸ்ட்ரூமென்ட்
மெக்கானிக்,
எலக்ட்ரீசியன், மெஷினிஸ்ட், பிட்டர்
போன்ற ஏதாவது ஒரு டிரேடு பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க
தகுதியானவர்கள்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் ஸ்கில்
புரொபீசியன்சி தேர்வு மூலமாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 150. ஆன்லைனில்
விண்ணப்பம் தொடங்கும் தேதி: 26.05.2018 ஆன்லைனில்
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.06.2018
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 15 ஜூலை 2018
விண்ணப்பிக்கும் முறை:
இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தின் மூலம் ஆன்லைனில்
விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
இந்த லிங்கை கிளிக் செய்து இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள
அறிவிப்பை படித்து தெரிந்துகொள்ளவும்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Monday, May 21, 2018
தமிழக அரசின் "நீட்ஸ்' திட்டத்தில் ரூ.5 கோடி வரை கடனுதவி - கலெக்டர்!!
தமிழக அரசின் "நீட்ஸ்' திட்டத்தில்
முதல் தலைமுறை தொழில் முனைவோர் தொழில் தொடங்க ரூ.5 கோடி வரை
வங்கிக் கடனுதவி வழங்கப்படும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன்
தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பு:
தமிழக அரசு சார்பில் படித்த வேலைவாய்ப்பற்ற முதல் தலைமுறை
தொழில் முனைவோர் தொழில் துவங்கிட நீட்ஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழக அரசால் 25
சதவிகித மானியத்துடன் மாவட்டத் தொழில் மையம் மூலம்
இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் நடப்பாண்டில், ராமநாதபுரம்
மாவட்டத்துக்கு ரூ.190
லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்படி கடன்பெற பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, ஐ.டி.ஐ.
ஆகிய ஏதேனும் ஒரு கல்வித்தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பொதுப்பிரிவினர் வயது 21 முதல் 35 வயது வரையும்,
மற்ற சிறப்புப்பிரிவினர் 21 வயது
முதல் 45 வயது வரையும் இருக்க வேண்டும்.
வருமான உச்சவரம்பு எதுவும் இல்லை.
இத்திட்டத்தில் ரூ.10 லட்சத்திற்கு மேல் 5 கோடி
வரையுள்ள உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களுக்கு மட்டும் வங்கிகளின் மூலம் கடனுதவி
அளிக்கப்படுகிறது. அதிக பட்ச மானியத் தொகையாக ரூ.25 லட்சம்
வரை வழங்கப்படும். மேலும் தவணை தவறாது கடனை திருப்பி செலுத்துவோருக்கு 3 சதவிகித
வட்டி மானியமும்,
3 மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.
இத்திட்டத்தின் மூலம் கடன் பெறுவதற்கு தொழில் முனைவோருக்கு கட்டாய பயிற்சி 15 நாள்களாக குறைக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்வலை பின்னுதல், முந்திரி
பதப்படுத்துதல்,
கடல்சார் உணவுப்பொருட்கள் பதப்படுத்துதல், சிறுதானியங்கள்
மூலம் உலர்ந்த மாவுப்பொருட்களை தயார் செய்தல், தேங்காய் எண்ணெய் தயார்
செய்யும் தொழிற்சாலைகள் தொடங்குதல், ஏற்றுமதி தரம் வாய்ந்த தென்னை
நாரைப் பயன்படுத்தி மெத்தைகள் தயார் செய்தல், கூலிங் ஆஸ்பெஸ்டாஸ் சீட்
தயார் செய்தல்,
கனரக வாகனங்கள் பழுதுபார்த்தல், வீல்
அலைன்மென்ட்,
தரை ஓடுகள் தயாரிப்பு. உணவகங்கள், மருத்துவமனைகள்
போன்ற தொழில்கள் தொடங்கிட அதிகமான அளவில் வாய்ப்புள்ளது.
மேலும் விபரங்களுக்கு
பொதுமேலாளர்,
மாவட்டத் தொழில் மையம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
ராமநாதபுரம்
என்ற முகவரியில் தொடர்பு கொண்டு விபரங்களைப் பெற்று
பயன்பெறுமாறு ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி; தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Sunday, May 20, 2018
ப்ளஸ் 2 படித்தவர்கலூக்கு தஞ்சாவூரில் இந்திய விமானப்படை தேர்வு முகாம்!!
இந்திய விமானப்படையில் ஏர்மேன் பணிக்கு ஆள்கள் தேர்வு செய்யும் முகாம் வருகிற
ஜூன் மாதம் 2ஆவது வாரத்தில் தஞ்சாவூரில் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் வெளியிட்ட
செய்திக்குறிப்பு:
இந்திய விமானப்படையில் ஏர்மேன் பணிக்கான தேர்வு முகாமில் 3.1.1998முதல் 2.1.2002 வரை பிறந்த ஆண்கள் மட்டும்
கலந்துகொள்ளலாம்.
வயது வரம்பு சலுகை ஏதும் கிடையாது.
கல்வித் தகுதியாக பிளஸ் 2 வகுப்பில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உயிரியலை ஒரு பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும்.
மேலும், ஆங்கிலத்தில் 50 சதவீத
மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
அடிப்படை ஊதியம் ரூ. 21ஆயிரத்து 700 மற்றும்
இதர படிகள் வழங்கப்படும். பயிற்சிக் காலத்தில் ரூ. 14 ஆயிரம்
வரை உதவித்தொகை வழங்கப்படும். உடல் தகுதித் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வின்
அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
இம்முகாமில் கலந்துகொள்ள முன்னரே விண்ணப்பிக்கத் தேவையில்லை.
மேலும் விவரங்களுக்கு http://indianairforce.nic.in/ என்ற இணைய தள
முகவரியை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என செய்திக்குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
ப்ளஸ் 2 தேர்வில் மாநிலத்தில் 4–வது இடம் பிடித்தது ராமநாதபுரம் மாவட்டம்!!
தமிழகத்தில் பிளஸ்–2 தேர்வுகள் கடந்த மார்ச் 1–ந்தேதி
தொடங்கி ஏப்ரல் 13–ந்தேதி வரை நடைபெற்றன. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 139 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 7,030 மாணவர்களும், 8,125 மாணவிகளுமாக மொத்தம் 15,155
மாணவ–மாணவிகள் பிளஸ்–2 தேர்வு எழுதினர்.
இதனை தொடர்ந்து நேற்று தமிழகம் முழுவதும் பிளஸ்–2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
இந்த முடிவுகளின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் 6,630 மாணவர்களும்,
7,901 மாணவிகளுமாக 14,531 பேர் தேர்ச்சி
பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக தேர்ச்சி சதவீத அடிப்படையில் மாணவர்களின் ஒட்டு மொத்த
தேர்ச்சி 94.31
சதவீதம், மாணவிகளின் ஒட்டு மொத்த தேர்ச்சி 97.24 சதவீதம் என ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் 95.88 ஆகும்.
மாநில அளவில் இந்த சதவீதத்தில் அடிப்படையில் ராமநாதபுரம்
மாவட்டம் 4–வது இடம் பிடித்துள்ளது.
கடந்த ஆண்டு 96.77 சதவீதம் பேர் தேர்ச்சி
பெற்று மாநில அளவில் 2–வது இடம் பிடித்து சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டை விட
இந்த ஆண்டு 0.89
சதவீதம் தேர்ச்சி குறைவாகும். மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில்
100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகள் வரிசையில் ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் 3 அரசு
மேல்நிலைப்பள்ளிகள்,
19 மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 22 மேல்நிலைப்பள்ளிகளும்,
பரமக்குடி கல்வி மாவட்டத்தில் 10 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 4 அரசு உதவி பெறும்
மேல்நிலைப்பள்ளிகள்,
8 மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் என 22 மேல்நிலைப்பள்ளிகளும் என மொத்தம் 44 மேல்நிலைப்பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நடராஜன்
தெரிவித்தார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், மாவட்ட
கல்வி அலுவலர்கள் பிரேம்,
அண்ணாமலை ஆகியோர் உடன் இருந்தனர்.
இதுகுறித்து கலெக்டர் நடராஜன் கூறியதாவது:–
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் சிறிய அளவில்
குறைந்துள்ளது. இதனை அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மருத்துவ
படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளதால் இந்த ஆண்டு பயிற்சி பெற்ற
ஆசிரியர்களை இதற்கென நியமித்தும், தேவையான பயிற்சி புத்தகங்களை மாவட்ட
நிர்வாகத்தின் சார்பில் வரவழைத்தும் ஆரம்பம் முதலே பயிற்சி அளிக்க ஏற்பாடு
செய்யப்பட்டுஉள்ளது.
இந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து அதிகம் பேர்
மருத்துவ கல்விக்கு செல்ல வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
செய்தி: தினத்தந்தி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Tuesday, May 15, 2018
108 ஆம்புலன்ஸ் சேவைக்கான வேலை வாய்ப்பு முகாம்!!
108
ஆம்புலன்ஸ் சேவைக்கான அவசர கால மருத்துவ உதவியாளர்கள்
மற்றும் ஓட்டுனர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் காரைக்குடி கண்ணதாசன்
மணிமண்டபத்தில் வரும் 19-ல் நடக்கிறது.
ஓட்டுனருக்கு 10-ம் வகுப்பில் தேர்ச்சி, 23 வயதுக்கு மேல் 35-க்கு கீழ்,
உயரம் 162.5 செ.மீ., இலகு
ரக ஓட்டுனர் உரிமம் 3
ஆண்டு மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் ஓராண்டு நிறைவு
பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம் ரூ.11,360.
மருத்துவ உதவியாளருக்கு ஆண், பெண் இருவருக்கும்
பி.எஸ்சி. நர்சிங் அல்லது ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.பார்ம்., டி.எம்.எல்.டி., (பிளஸ் 2-வுக்கு பிறகு 2
ஆண்டு படித்திருக்க வேண்டும்)
அல்லது
பி.எஸ்.சி., தாவரவியல், விலங்கியல், பயோ
கெமிஸ்ட்ரி,
மைக்ரோ பயாலஜி படித்திருக்க வேண்டும்.
20
வயதுக்கு மேலும் 30-வயதுக்கு கீழும் இருக்க
வேண்டும். மாத சம்பளம் ரூ.11,860.
விபரங்களுக்கு 87544 39554, 73977 24828 என்ற
எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
நேர்முக தேர்வுக்கு வரும்போது அசல் சான்றிதழ், ஓட்டுனர்
உரிமம் கொண்டு வர வேண்டும்.
செய்தி: திரு. தாஹீர், கீழை
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Sunday, May 13, 2018
இராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னையா? புகார் செய்ய பகுதி வாரியாக வாரியாக தொலைபேசி எண்கள்!!
இராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னை தொடர்பான
புகார்களை தெரிவிக்க உள்ளாட்சி அலுவலகம் வாரியாக தொலைபேசி எண்கள்
அறிவிக்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் கலெக்டர் கூறியிருப்பது:
மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க கடந்த ஆண்டு 1153 பணிகளுக்கு 1295
கோடி ரூபாய் ஒதுக்கிடு செய்யப்பட்டது. நடப்பு ஆண்டில்
இதுவரை 195
பணிகளுக்கு 1138 கோடி ருபாய்க்கு
நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காவிரி குடிநீர் திட்டத்தில் தினமும் 4 எம்.எல்.டி, தண்ணீர்
சப்ளை செய்ய வேண்டிய நிலையில், வறட்சியால் ஆற்றுப்படுகையில் நீர்மட்டம்
குறைந்ததால்,
தற்போது 30 எம்.எல்.டி, மட்டுமே
கிடைக்கிறது.
தற்போது, குடிநீர் பற்றாக்குறை, விநியோகம்
தடைபடுதல்,
முறைகேடான இணைப்புகள், தேவைப்படும் புதிய குடிநீர்
திட்டம் குறித்து தெரிவிக்கவும், மாவட்ட அளவில் உதவி இயக்குனர்
ஊராட்சிகள் அலுவலகத்திலும் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சிகள், ஆகியவற்றில் பொதுமக்கள் புகார் செய்ய கணினி தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
தொலைபேசி எண்கள் விபரங்கள் கீழ்கண்டவாறு
மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க 1800 425 7040 என்ற கட்டணமில்லா நம்பரையம், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்)
அலுவலகத்திற்கு 04567-230490 மற்றும் 91598 22298 என்ற
அலைபேசியிலும் தொடர்புகொள்ளலாம்.
ஊராட்சி ஒன்றியங்கள்:
ராமநாதபுரம் 04567-220404,
திருப்புல்லாணி 04567-25411,
மண்டபம் 04567-259234,
ஆர்.எஸ்.மங்கலம் 04581-251226,
திருவாடானை 04567-254228,
பரமக்குடி 04564-226706.
நயினார்கோயில் 04564- 266229,
போகலுார் 04564-262226,
முதுகுளத்துார் 04576-222230,
கமுதி 04576-223 228
கடலாடி 04576-266528.
நகராட்சிகள்:
ராமநாதபுரம் 04567-220445
ராமேஸ்வரம் 04573-221264,
கீழக்கரை 04567-241317
பரமக்குடி 04564-226742
பேரூராட்சிகள்:
கமுதி 04576-223364
முதுகுளத்துார் 04576-222247,
அபிராமம் 04576- 265645
சாயல்குடி 04576-244293,
தொண்டி 04561-253290,
ஆர்.எஸ்.மங்கலம் 04561-251551,
மண்டபம் 04573-241593.
தகவல்: திரு. தாஹீர், கீழை
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமநாதபுரத்தில் மருத்துவகல்லூரி - அமைச்சர் மணிகண்டன் தகவல்!!
ராமேசுவரம் கோவில் கிழக்கு வாசலில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் கோடை கால உணவு மற்றும் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் வெயில் காலமாக உள்ளதால் மெல்லிய தளர்ந்த பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்,வெயிலில் செல்லும் போது குடை, தொப்பி, காலணிகளை பயன் படுத்த வேண்டும், உணவு புகார் குறித்து சுற்றுலா பயணிகள், பொது மக்கள் 94440-42322 என்ற செல்போன் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்பதை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் நடராஜன்,மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஜெகதீசன்சந்திரபோஸ் ஆகியோர் பேசினர்.
அமைச்சர் மணிகண்டன் நடமாடும் உணவு பொருள் பாதுகாப்பு குறித்த கண்காட்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து உணவுபாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்களை சுற்றுலா பயணிகள், கடைக்காரர்களிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் கே.கே.அர்ச்சுனன், நகரசபை முன்னாள் துணை தலைவர் குணசேகரன், மாவட்ட விவசாய அணி செயலாளர் வீரபத்திரன், ராமநாதபுரம் தொகுதி கழக முன்னாள் செயலாளர் தஞ்சி சுரேஷ், கட்சி நிர்வாகிகள் அயோத்தி, மகேந்திரன்,முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் மணிகண்டன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அமைச்சர் மணிகண்டன் நடமாடும் உணவு பொருள் பாதுகாப்பு குறித்த கண்காட்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து உணவுபாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்களை சுற்றுலா பயணிகள், கடைக்காரர்களிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் கே.கே.அர்ச்சுனன், நகரசபை முன்னாள் துணை தலைவர் குணசேகரன், மாவட்ட விவசாய அணி செயலாளர் வீரபத்திரன், ராமநாதபுரம் தொகுதி கழக முன்னாள் செயலாளர் தஞ்சி சுரேஷ், கட்சி நிர்வாகிகள் அயோத்தி, மகேந்திரன்,முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் மணிகண்டன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ராமேசுவரம் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு தேவையான பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை செய்ய மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து வருகிறது. ராமநாதபுரம் சட்மன்ற தொகுதிக்குஉட்பட்ட பகுதியாக உள்ளதால் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறேன். மத்திய அரசின் சுதேஷ்தர்ஷன் திட்டத்தின் கீழ் ரூ. 15 கோடி நிதி ராமேசுவரத்தின் பல்வேறு வளர்ச்சி திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுஉள்ளது. இதில் புயலால் அழிந்து போன தனுஷ்கோடி கட்டிடங்கள் உள்ள பகுதி ரூ.4கோடியே 30 லட்சம் நிதியில் பழமை மாறாமல் புனரமைக்கப்பட உள்ளது.
குந்துகால் கடற்கரையில் ரூ.4 கோடி 50 லட்சத்தில் ஒளி-ஒலி காட்சிக் கூடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ராமேசுவரத்தில் ரூ. 5 கோடி நிதியில் கடற்கரையில் பூங்கா, நடைபாதை, மின் விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளும் நடைபெற்று வருகின்றன. சுற்றுலா பயணிகளின் வசதிக்காக குந்துகால் கடற்கரையில் இருந்து பாம்பனுக்கு பை-பாஸ்சாலை அமைக்கப்பட உள்ளது.கலப்படம் உள்ள உணவு பொருட்களை தயார் செய்யும் ஓட்டல்கள் உணவுபாதுகாப்புதுறையின் மூலம் சீல் வைக்கப்படும்.
ராமேசுவரம் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் தீர்த்தமாட வரும் பக்தர் ஒருவருக்கு ரூ.25 கட்டணமே அரசால் நிர்ணயிக்கப்பட்டுஉள்ளது. ஆனால் 22 தீர்த்த கிணறுகளில் தீர்த்தமாட வரும் பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்து வருவதாக தொடர்ந்து புகார் வருகிறது. அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே தீர்த்தம் யாத்திரை பணியாளர்கள் கண்டிப்பாக வாங்க வேண்டும். கூடுதல் கட்டணங்கள் வாங்கினால் யாத்திரை பணியாளர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளேன்.
இதற்காக மாவட்ட கலெக்டர் தலைமையில் தீவு வளர்ச்சி திட்டகுழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இனிமேல் இது போன்ற புகார் வராத அளிவிற்கு யாத்திரை பணியாளர்கள் நடந்து கொள்ள வேண்டும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துமனை அமைய உள்ளது. ராமநாதபுரத்திற்கு மருத்துவ கல்லூரி கட்டாயம் வரும். மருத்துவ கல்லூரி அமைக்க முழு முயற்சி எடுத்து வருகிறேன். மேலும் ராமேசுவரம் தீவு பகுதியில் உள்ள மாணவ-மாணவிகளின் வசதிக்காக மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பெயரில் தங்கச்சிமடம் பேய்க்கரும்பு பகுதியில் அரசுகலைக்கல்லூரி ஒன்றும் அமைய உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
செய்தி: தினத்தந்தி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Saturday, May 12, 2018
ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க 101 இடங்களில் உப்புநீரை குடிநீராக்கும் நிலையங்கள் – கலெக்டர்!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை இல்லாமல்
கடும் வறட்சி ஏற்பட்டு நிலத்தடி நீர் ஆதாரங்கள் எல்லாம் வறண்டு போய்விட்டன. காவிரி
கூட்டுக்குடிநீர் திட்டம் இதுநாள் வரை கைகொடுத்து வந்த நிலையில் தற்போது அந்த
நீரின் அளவும் படிப்படியாக குறைந்து பாதி நிலைக்கு வந்துவிட்டது. வரும்
கோடைகாலத்தில் ஏற்படும் வறட்சியை சமாளிக்கும் வகையில் இந்த காவிரி நீராவது
தொடர்ந்து வருமா என்ற சந்தேகம் ஏற்பட்டுஉள்ளது.
இதன்காரணமாக மாவட்ட நிர்வாகம் வறட்சியால் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை
சமாளிக்கும் வகையில் நிலத்தடி நீர் ஆதாரம் இல்லாத உப்புநீராக உள்ள பகுதிகளில்
மாற்று ஏற்பாடாக உப்புநீரை குடிநீராக்கும் நிலையங்கள் அமைக்க முடிவு செய்துள்ளது.
அரசின் நிதி உதவியுடன் உப்புநீரை குடிநீராக்கும் 50 நிலையங்களும், மாவட்ட நிர்வாகத்தின் நிதியின்
கீழ் 30 நிலையங்களும், இந்திய எண்ணெய் எரிவாயு
கழகத்தின் சார்பில் 15 நிலையங்களும், டாடா நிறுவனத்தின் சார்பில் 4 நிலையங்களும், தனியார் தொண்டு நிறுவனத்தின்
சார்பில் 2 நிலையங்களும்
என மாவட்டத்தில் 101 இடங்களில்
உப்புநீரை குடிநீராக்கும் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இந்த நிலையங்கள் ஒவ்வொன்றும் ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட
உள்ளன.
இதுதவிர மாவட்டம் முழுவதும் கோடைகால வறட்சியை சமாளிக்கும் வகையில் குடிநீர்
திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இதன்படி
ரூ.11 கோடியே 76 லட்சம் மதிப்பில் 395 பணிகள் செயல்படுத்தப்பட்டு
வருகின்றன.
121 புதிய
கிணறுகள் உள்பட இதுவரை 150-க்கும்
மேற்பட்ட பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. மீதம் உள்ள பணிகளை இந்த மாத இறுதிக்குள்
முடித்து கோடை வறட்சியை சமாளிக்க முழு அளவில் தயாராக இருக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுஉள்ளது.
மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் சுகாதார வளாகங்கள் அனைத்திலும் முழு
பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் பழுதடைந்த வளாகங்களை மராமத்து செய்து குடிநீர்
உள்ளிட்ட அனைத்து வசதிகளை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களிலும் குடிநீர், கழிப்பறை, மின்வசதி செய்து கோடை
விடுமுறைக்குள் பூர்த்தி செய்ய உத்தரவிடப்பட்டுஉள்ளது. இந்த தகவலை ராமநாதபுரம்
மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்தார். அப்போது ஊராட்சிகள் உதவி இயக்குனர்
செல்லத்துரை உடன் இருந்தார்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
மக்கள் வாழ தகுதியற்ற இடமாக மாறிவருகிறதா ராமநாதபுர மாவட்ட கிராமங்கள்?!!
GAIL
நிறுவனம் வாலாந்தரவை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில்
மேலும் சில கியஸ் பைப்புகளை பதிக்க தாசில்தார் தலைமையில் மக்களிடம் கலந்தாய்வு
என்று அறிவிப்பு செய்யாமல்,
குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் தகவல்களை தெரிவித்து காவல்துறை பாதுகாப்புடன் கலந்தாய்வு நடத்த முயற்சி செய்தது.
யாருக்கும் தெரியாமல் திருட்டுதனமாக நடத்த முயற்சி எதற்காக?!..யாரை திருப்தி படுத்த?!..யாரை ஏமாற்ற?!..
கூட்டத்தை நடத்தவிடாது மக்கள் அனைவருக்கும் தெரியபடுத்தி
அனைத்து நிறுவன மேலாளர்களையும் வரவைத்து மீண்டும் ஒருநாள் நடத்த சொல்லி கூட்டத்தை
கலைத்துவிட்டாச்சு.
வாலாந்தரவை சமுதாயகூடத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தை பற்றி
வாலாந்தரவை மக்களுக்கே தெரியவில்லை, ஏற்கனவே 20 வருடங்களாக சிலரின் சுயலாபத்திற்க்காக ONGC,GAIL,RK PLANT மற்றும்
EB ஆகியவை ஊருக்குள் நடத்த அனுமதி வழங்கிவிட்டனர் , Industrial சட்டத்தின்படி
மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளில் இருந்து 15 Km அப்பால்
தான் நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்கவேண்டும். ஆனால் எந்தவித சட்ட விதிகளை
பின்பற்றாமல் அனுமதி வழங்கியுள்ளனர்.
மேலும் இந்த நிறுவனங்கள் அனுமதியின்றி 5,4,3,2 என்று ஆழ்துளைக் கிணறு அமைத்துள்ளனர், ஆதலால் இந்தப்பகுதிகளில்
கிணறுகளில் கூட தண்ணீர் இல்லாது தண்ணீர் பிரச்சனை தலையாய பிரச்சனையாக
உருவாகியுள்ளது. இதுவரை ஊராட்சியில் CSR - Corporate Social Responsibility கீழ் எந்தவித திட்டங்களும் பெரிதாக செயல்படுத்தவில்லை, உள்ளூர்
மக்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கவில்லை, தொடர்ந்து இந்த
நிறுவனங்களிலிருந்து வெளிவரும் இரைச்சல்களால் வீடுகளில் அதிர்வுகள் ஏற்படுகின்றது.
மேலும் ஊராட்சிகளில் தற்போது கேன்சர் நோய் தாக்கம் அதிகமாக
உள்ளது. ஏற்கனவே நிலம் கையகப்படுத்திய நில உரிமையாளர்களுக்கு இன்னும் இழப்பீடு
தொகை வழங்கப்படவில்லை ,
இந்த நிலையில் மேலும் இடங்களை கையகப்படுத்த முனைகிறது
கெயில் நிறுவனம்.
ஒரு சிலரின் சுயநலத்திற்க்காக ஒட்டுமொத்த ஊராட்சி
கிராமங்களும் அழிவை நோக்கி!...
*இந்த நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்தது யார்?..
*அப்போது போட்ட ஒப்பந்தம் எங்கே?...
*இந்த நிறுவனங்கள் வருடந்தோறும் கட்டும் பஞ்சாயத்து வரி எவ்வளவு?...
*எத்தனை ஆழ்துளைக் கிணறுக்கு அனுமதி கொடுக்கபட்டது?..
*இதுவரை செய்த CSR
என்ன?..
*
இழப்பீடு வழங்கப்பட்ட பயனாளிகள் பட்டியல் எங்கே?..
*விபத்து ஏற்பட்டால் அதற்க்கான முதலுதவி உபகரணம் மற்றும் தீயணைப்பு வாகனம், மருத்துவ
வாகனம், அவசர ஊர்தி ஆகியவை எங்கே?...
*எத்தனை வருடம் இந்த நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது, அதற்கான
கால நிர்ணயம்?
...
இப்படி பல கேள்விகளுடன் தகவல் பெறும் உரிமை சட்டத்தின்
வாயிலாக கேள்வி கேட்டும் இன்றுவரை பயனில்லை?!..
ஜனவரி 26 நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில்
மேற்குறிப்பிட்ட கேள்விகளை தீர்மானமாக நிறைவேற்றி, ஒரு மாதத்திற்க்குள்
அனைத்து நிறுவனங்களும் பதிலாளிக்கவில்லை எனில் அவர்களுக்கு ஊராட்சி வருடாந்திர வரி
இரசீது கொடுக்ககூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ஆனால் அதற்க்கு பதிலும்
இல்லை பலனுமில்லை?!...
இதே நிலை தொடர்ந்தால் விரைவில் ஊராட்சியில் உள்ள அனைத்து
கிராமங்களும் மக்கள் வாழ தகுதியற்ற இடமாக மாறிவிடும்!...
இளைஞர்கள் ஒருங்கிணைந்து விழிப்பணர்வுடன் செயல்பட்டு இதனை
தடுக்காவிடில் நம் தலைமுறைகளின் வாழ்க்கை கேள்விக்குறியே???!...
X-------------------------------X
வாலாந்தரவை வாசகர் பிரவீன் அவர்களின் ஃபேஸ்புக்
பதிவிலிருந்து.
நன்றி: திரு. ப்ரவீன்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Tuesday, May 8, 2018
ராமநாதபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டம்; பயனாளிகளுக்கு உதவிகள் வழ்ங்கினார் கலெக்டர்!!
ராமநாதபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்
கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.
அதனைத் தொடர்ந்து, பல்வேறு நலத்திட்டங்களின்
கீழ் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், அம்மனுக்களை ஆய்வு செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் மதுரை மத்திய சிறைக் கட்டுப்பாட்டில் உள்ள திருவாடானை கிளைச் சிறையில் முதல்நிலைக் காவலராக பணிபுரிந்து வந்த எம்.மாரி என்பவர் உடல்நலக் குறைவின் காரணமாக உயிரிழந்தமைக்காக அவருடைய குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரண உதவித்தொகையாக ரூ.3 லட்சத்திற்கான காசோலையினையும்,
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக வேலையில்லா படித்த
இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் மொத்த கடன் தொகையில் 5சதவீதம்
அரசு மானியமாக 5
பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.36ஆயிரத்து 230 மதிப்பிலான கடன் உதவித் தொகையும், பாரத பிரதமரின்
வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் மொத்த கடன் தொகையில் 5சதவீதம்
அரசு மானியமாக 1
பயனாளிக்கு ரூ.50ஆயிரம் மதிப்பிலான கடன்
உதவித் தொகையும்,
2 பயனாளிகளுக்கு தலா ரூ.3ஆயிரத்து 460 என மொத்தம் ரூ.7ஆயிரத்து
220 மதிப்பிலான நவீன ஒளிரும் மடக்கு குச்சி மற்றும் ப்ரெய்லி கடிகாரம் ஆக மொத்தம்
ரூ.3லட்சத்து 93ஆயிரத்து 450
மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில் சமூக பாதுகாப்பு தனித்துணை திட்ட ஆட்சியர்
காளிமுத்து,
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேல் உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள்
கலந்து கொண்டனர்.
செய்தி: தினபூமி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)