Monday, April 9, 2018
ராமநாதபுரத்தில் ஏப்.11-ம் தேதி கல்விக்கடன் வழங்கும் முகாம் - கலெக்டர்!!
உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஏப்.11-ம் தேதி கல்விக்கடன் வழங்கும் முகாம் ராமநாதபுரத்தில் நடைபெற இருப்பதாக மாவட்ட
ஆட்சியர் எஸ்.நடராஜன் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ராமநாதபுரம் புனித அந்திரேயா மகளிர் மேல்நிலைப் பள்ளியில்
ஏப்.11-ம் தேதி காலை 9.30
மணிக்கு ஆட்சியர் எஸ்.நடராஜன் தலைமையில் வங்கியாளர்கள்
கலந்து கொள்ளும் கல்விக்கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இம்முகாமில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதி, உயர்கல்வி
பயிலவுள்ள மாணவ,
மாணவியர்களுக்கு கல்விக்கடன் சார்பான ஆலோசனைகளை
வங்கியாளர்கள் வழங்கவுள்ளனர்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment