Tuesday, March 13, 2018
ராமநாதபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாளர்கள் பற்றாக்குறை!!
ராமநாதபுரம் அரசு மாவட்ட தலைமை
மருத்துவமனையில் தொழில் நுட்ப பணியாளர்கள் இன்றி தவித்து வருகின்றனர். நோயாளிகள்
பல மணி நேரம் காத்திருக்கும் அவல நிலை உள்ளது.
ராமநாதபுரம் அரசு மாவட்ட தலைமை
மருத்துவமனையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள்,
500க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் அவசர சிகிச்சை பிரிவு , எலும்பு முறிவு பிரிவு, இதய நோய் பிரிவு, குழந்தைகள் பிரிவு, பிரசவம், அறுவை
சிகிச்சைப்பிரிவு, சித்த மருத்துவ பிரிவு, பிசியோதெரபி பிரிவு, பல் மருத்துவ பிரிவு, காது மூக்கு தொண்டை பிரிவு, அனைத்து வகையான சிறப்பு
பிரிவுகள் இயங்கி வருகிறது. 70 க்கும் மேற்பட்ட
மருத்துவர்கள் பணியில் உள்ளனர்.
நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யப்படும்
மருந்து, மாத்திரை வழங்கும் இடத்தில் போதுமான
பணியாளர்கள் இல்லாததால், நோயாளிகள் நீண்ட வரிசையில்
காத்திருக்கும் நிலை உள்ளது.
இங்குள்ள பார்மசிஸ்ட்கள், மாற்றுப்பணியாக திருவாடானை, ராமேஸ்வரத்திற்கும்
அனுப்பப்படுகின்றனர்.
பிரேத பரிசோதனை பணிக்காக ஒருவர்
சென்றுவிடுகிறார். இதில் தினசரி 2 முதல் 3 பார்மசிஸ்ட்கள் மட்டுமே பணியில் உள்ளனர். பரிசோதனை கூடத்தில் போதுமான
பணியாளர்கள் இல்லாததால், பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன்
தெரிந்து கொள்ள முடிவதில்லை.
இந்த முடிவுகளுக்காக நோயாளிகள்
காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. வாகனங்களை முறைப்படுத்தாமல், கண்ட இடங்களில்
நிறுத்துவதால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. அவரசர சிகிச்சைக்கு செல்லும்
வாகனங்கள் திரும்ப கூட முடியாமல் தவிக்கின்றனர்.
இது போன்ற பிரச்னைகளால் நோயாளிகள்
தவித்து வருகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து முறைப்படுத்த வேண்டும்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment