Tuesday, March 6, 2018
ராமேசுவரம் கோயில் அருகே மதுபாட்டில்கள் பறிமுதல், ஒருவர் கைது!!
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் அருகே சங்கு கடையில்
மறைத்து வைத்து விற்கப்பட்ட150 மதுபாட்டில்களை போலீஸார்
திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். தமிழக
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ராமேசுவரம் வருகையையொட்டி, கோயிலை
சுற்றுவட்டாரப் பகுதியில் காவல்துறையினர், உளவுத்துறையினர்
கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, கிழக்கு கோபுரம் அருகே உள்ள சங்கு
கடைக்கு அதிகளவில் இளைஞர்கள் சென்றதை போலீஸார் கண்டறிந்தனர்.
இதையடுத்து அருகில் சென்று பார்த்தபோது, அங்கு
சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார்
அங்கிருந்த 150
மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, கடையின்
உரிமையாளர் அன்புராஜை கைது செய்தனர்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment