Thursday, March 22, 2018
தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வு; ராமநாதபுரம் சுரேஷ் அகாதெமியில் இலவச உடற்தகுதித் தேர்வு!!
தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழும
பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு, ராமநாதபுரம் சுரேஷ்
அகாதெமியில் இலவச உடற்தகுதித் தேர்வு நடத்தப்பட இருப்பதாக அதன் நிறுவனர் சுகேஷ்
சாமுவேல் புதன்கிழமை தெரிவித்தார்.
ராமநாதபுரம் புளிக்காரத்தெருவில் செயல்பட்டு வரும் சுரேஷ்
அகாதெமியில் வெள்ளிக்கிழமை (மார்ச் 23), தமிழ்நாடு சீருடைப்
பணியாளர்களுக்கான உடற்தகுதி தேர்வை இலவசமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சீருடைப் பணியில் 6,140 காலிப்பணியிடங்கள்
நிரப்பப்படவுள்ளன. எனவே,
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இந்த
இலவச உடற்தகுதித் தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு 7550352916 மற்றும்
7550352917
என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
செய்தி:
திரு. தாஹீர், கீழை
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment