Thursday, March 22, 2018
ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை!!
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருவாடானை தாலுகா செயலாளர் குருசாமி தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் பெரிய கண்மாயை அளவை செய்து சர்வே கற்கள் ஊன்ற முடிவெடுத்திருப்பது இப்பகுதி மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது.
இந்த கண்மாயின் அளவை சர்வே செய்யும் போது 1967-ம் ஆண்டுக்கு முன்பு உள்ள அரசு ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளின் அடிப்படையில் சர்வே செய்ய வேண்டும். மேலும் கண்மாயில் நீர் பிடிப்பு பகுதி வரை பட்டா வழங்கப்பட்டுஉள்ளது. இதனால் பலர் பண்ணை குட்டைகள், ஊருணிகள் வெட்டி கண்மாய்க்குள் தண்ணீர் வராத அளவில் செய்துள்ளனர். எனவே கண்மாய்க்கு தண்ணீர் வரும் கால்வாய்களை அடைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ள அனைத்து பட்டாவையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஆக்கிரமிப்பு களை அகற்றவேண்டும்.
மேலும் இந்த கண்மாய்க்கு தண்ணீர் வரத்து வரும் 4 கால்வாய்களில் தற்போது 2 கால்வாய்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. இதில் சூரியன்கோட்டை கால்வாய், சருகணி மணிமுத்தாறு கால்வாய் ஆகிய 2 கால்வாய்களும் ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டுள்ளது. எனவே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு முன்பு போல் தண்ணீர் வரத்து வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment