(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, March 14, 2018

பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடல் பகுதியில் பலத்த சுறாவளி காற்று வீசி வருவதையொட்டி பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு எண்  மூன்று நேற்று ஏற்றப்பட்டது.
 
இந்தியா இலங்கை கடல் பகுதிகளில் மன்னார் வளைகுடா கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டு பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. இதனையொட்டி  தமிழக,கேரளா ஆகிய கடலோரப்பகுதியில் மழையுடன் கூடிய  பலத்த சூறாவளி காற்று கடந்த மூன்று நாட்களாக வீசி வருகிறது.இதனால் மீனவர்களும் மீன்பிடிக்க கடலுக்கு கடந்த மூன்று நாட்களாக செல்லாமல் இருந்து வருகின்றனர்.இந்நிலையில் இந்த காற்று நேற்று மாலையில் வழுவடைந்ததையொட்டி மன்னார் வளைகுடா  ஆழ் கடலில் புயல் மையம் கொண்டுள்ளது.



இதனையொட்டி கன்னியாகுமாரி,ராமேசுவரம்,பாம்பன்,மண்டபம் ஆகிய கடலோரப் பகுதியில் காற்றி்ன் வேகம் 50 கி.மீ மேல் அதிகரித்து கடலில் ராட்ச அலை உருவாகியுள்ளது. இதனால் பாம்பன் துறை முகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 3 நேற்று மாலையில் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து  ராமேசுவரம்,பாம்பன்  கடல் கரைப்பகுதியில் வசித்து வரும் மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், அதுபோல கடலில் நிறுத்தப்பட்டுள்ள மீன்பிடி படகுகளை பாதுகாப்பாக கடலில் நங்கூரமிட்டு  நிறுத்தி கண்காணிக்க வேண்டும் எனவும் மீன்துறை அதிகாரிகள் மீனவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment