(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, March 12, 2018

ராமநாதபுரம் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளை நேரில் பார்வையிட்டார் கலெக்டர்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சிறு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்காக இரண்டாம் கட்டமாக சிறப்பு முகாம்கள் நடைபெற்றதை கலெக்டர் முனைவர் நடராஜன் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், தொருவழூர் கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சிறு குழந்தைகளின் நலனை பாதுகாத்திடும் விதமாக பொது சுகாதாரத்துறையின் மூலம் 28.01.2018 மற்றும் 11.03.2018 ஆகிய இரண்டு நாட்களில் மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தி, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிட திட்டமிடப்பட்டிருந்தது.


போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளுக்காக ஆயிரத்து 229 போலியோ சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 1,21,398 எண்ணிக்கையிலான 5-வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொத்தம் 4ஆயிரத்து 192 பணியாளர்கள் இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோல 27 சிறப்பு குழுக்கள் (பயணிகள் கூடும் இடத்தில்) மற்றும் 33 நடமாடும் குழுக்களாக அமைக்கப்பட்டு தற்காலிக குடியிருப்புகள் மற்றும் கோவில் திருவிழாக்கள், பேருந்து மற்றும் இரயில் நிலையங்கள், கல்யாண நிகழ்ச்சிகள், இலங்கை அகதிகள் முகாம் ஆகிய இடங்களில் உள்ள குழந்தைகளுக்கும்; அலுவலர்கள் நேரடியாக சென்று போலியோ சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.   

இதனை தொடர்ந்து  மாவட்ட முழுவதும் இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், தொருவழூர் கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளை கலெக்டர் முனைவர் நடராஜன் நேரில் சென்று பார்வையிட்டார். இந்நிகழ்வின் போது சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநர் மரு.குமரகுருபரன் உடனிருந்தார்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment