Tuesday, February 6, 2018
TAHDCO பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் தாட்கோ மூலம், ஆதி
திராவிடர்களுக்காக செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு
இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிலம் வாங்கும் திட்டம்(பெண்களுக்கானது),
நிலம் மேம்பாட்டு திட்டம்,
தொழில் முனைவோர் திட்டம்,
இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம்,
தாட்கோ தலைவர் விருப்புரிமை நிதி,
தொழில் தையல் கூட்டுறவுச் சங்கங்களுக்கு நிதியுதவி போன்ற
திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
அதில் விண்ணப்பதாரர் பற்றிய முழு விவரங்கள், புகைப்படம், இருப்பிடம், சாதி, வருமான
சான்றிதழ்கள்,
பட்டா சிட்டா(நிலம் வாங்குதல் மற்றும் நிலம் மேம்பாடு
திட்டம்), ரேஷன் கார்டு எண்,
ஆதார் எண், செல் எண், இமெயில் ஐடி, திட்டங்களின்
விவரங்கள் முதலியவற்றை பதிவு செய்ய வேண்டும்.
விண்ணப்பங்களை தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் அலுவலக
நேரத்தில் மட்டும் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment