Saturday, February 17, 2018
டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ்!!
கடந்த 5 நாட்களாக நடந்து வந்த டேங்கர் லாரி
உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது. டெண்டர் விடுவதில் மாற்றம்
செய்வதாக எண்ணெய் நிறுவனங்கள் அளித்த உறுதி மொழியை ஏற்று இந்த முடிவு
எடுக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் இன்று நடைபெற்ற தென்மண்டல் லாரி உரிமையாளர்கள்
கூட்டத்தில் எண்ணெய் நிறுவனங்களின் உறுதி மொழியை ஏற்று, போராட்டத்தைத்
திரும்பப் பெறுவது என்ற முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.
எரிவாயு எடுத்துச் செல்ல மண்டல வாரியாக ஒப்பந்தம் கோருவது
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5 நாட்களாக டேங்கர் லாரிகள்
வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், இன்று போராட்டம்
திரும்பப் பெறப்பட்டுள்ளது. " மாநில அளவில் டெண்டர், லாரிகளுக்கு
வாடகை நிர்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி
உரிமையாளர்கள் சங்கத்தினர்,
கடந்த 12ம் தேதி முதல் வேலை நிறுத்தப்
போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதில், தென்மண்டலத்தைச் சேர்ந்த 4,500 எல்பிஜி டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. வேலை நிறுத்தத்தால்
தினசரி 13 ஆயிரம் டன் எரிவாயு எடுத்துச் செல்லும் பணிகள் பாதிக்கப்பட்டன. எரிவாயு
எடுத்துச் செல்லும் பணி நின்றதால், 15 லட்சம்
சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பும் பணியும் பாதிக்கப்பட்டது.
டேங்கர் லாரிகளின் வேலை நிறுத்தம் நீடித்திருந்தால் தமிழகம்
உட்பட 4 மாநிலங்களில் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் அபாயம்
இருந்தது.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment