முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, February 28, 2018

தமிழ்நாடு சிமெண்ட் கார்பரேசனில் வேலை வாய்ப்பு அறிவிப்பு!!

No comments :


தமிழ்நாடு சிமெண்ட் கார்பரேசனில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை மொத்தம் 9 ஆகும்.

பணிவிவரங்கள்:

மேனேஜர் மார்கெட்டிங் 1 பணியிடம்
டெப்புட்டி மேனேஜெர் மார்கெட்டிங்
3 பணியிடம்
அஸிஸ்டெண்ட் மேனேஜெர் மார்கெட்டிங்
3 பணியிடம்

மேனேஜெர் பினான்ஸ் 1 பணியிடம்
டெபுட்டி மேனேஜெர் பினான்ஸ்
1 பணியிடம்

சம்பளத் தொகை:
மேனேஜெர் மார்கெட்டிங் - ரூபாய்
61,900 டெப்புட்டி மேனேஜர் மார்கெட்டிங் - ரூபாய் 59,300 மேனேஜர் பினான்ஸ் - ரூபாய் 61,900 டெப்புட்டி மேனேஜெர் - 59,300


தமிழ்நாடு சிமெண்ட் கார்பரேசனில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்க வயது வரம்பு மேனேஜெர் மார்கெட்டிங் - 45 வயது டெப்புட்டி மேனேஜெர் மார்கெட்டிங்- 40 வயது அஸிஸ்டெண்ட் மேனேஜர் மார்கெட்டிங்க 35 வயது மேனேஜர் பினான்ஸ்- 45 வயது

மேலாண்மை துறை பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனுபவங்கள். மேனேஜெர் மார்கெட்டிங் 15 டெப்புட்டி மேனேஜர் மார்கெட்டிங் 10 அஸிஸ்டெண்ட் மேனேஜெர் மார்கெட்டிங் 7 பணியிடங்கள் மேனேஜெர் பினான்ஸ் 5 பணியிடங்கள் டெப்புட்டி மேனேஜர் பினான்ஸ் 2 பணியிடங்கள்

 

கல்வித் தகுதி: கல்வித் தகுதியாக எம்பிஏ மார்கெட்டிங், சிஏ பைனல், சிஎம்ஏ பைனல் போன்ற படிப்பை அதிகாரப்பூர்வ நிறுவனத்தில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இண்டர்வியூ மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


தமிழ்நாடு சிமெண்ட் கார்பரேசனில் வேலை வாய்ப்பு பெற கீழ் காணும் லிங்கை சொடுக்கவும்.

http://tancem.com/wp-content/uploads/2018/02/HRMS-41.pdf


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பிளக்ஸ் போர்டுகள் ஆக்கிரமிப்பு!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் பிளக்ஸ் போர்டுகள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதால் விபத்து அபாயம் நிலவி வருகிறது. ராமநாதபுரத்துக்கு அரசியல் கட்சி முக்கிய தலைவர்கள் வரும்போது கட்சி நிர்வாகிகள் கொடிகள்விளம்பர பிளக்ஸ் போர்டுகளை வரவேற்று புதிய பஸ் ஸ்டாண்டுபழைய பஸ் ஸ்டாண்டுபாரதி நகர் பகுதியில் வைக்க தொடங்கினர். தற்போது ரோமன் சர்ச்சாலை தெருகேணிக்கரை என அந்த பட்டியல் நீண்டு வருகிறது. ராமநாதபுரம் நகர் பகுதியை சேர்ந்த பள்ளிகல்லூரிகளின் பிளக்ஸ்போர்டுகள் நகரின் பல இடங்களில் வைக்கப்பட்டு வருகிறது. 

இதுதவிர தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள கல்யாண மகாலில் திருமணம் என்றால் கேட்கவே வேண்டாம். சாலையை மறைத்து திருமண விளம்பர பிளக்ஸ்போர்டுகள் வைக்கப்படுகின்றன. ஏற்கனவே இரவு நேரத்தில் சாலை விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது சாலையோரத்தில் பிளக்ஸ்போர்டுகளும் அதிகரித்து வருவதால் வாகன ஓட்டுநர்கள் விழிபிதுங்கி உள்ளனர். சாலைதெரு பகுதியில் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்படுவதால் சிறிய வாகனங்கள் வருவது தெரியாமல் வாகன ஓட்டுநர்கள் சிரமம் அடைகின்றனர். 




பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன் போக்குவரத்து போலீசார் நகரில் உள்ள விளம்பர போர்டுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வாகன ஓட்டுநர்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர். மாவட்டத்தில் முக்கிய இடங்களில் பொதுமக்களுக்கு தேவையான நல்ல விசயங்களை தெரிவிக்கும் வழிகாட்டு பலகை இருக்கிறதோ இல்லையோ பொதுமக்களை தங்களின் பொருட்களை வாங்க தூண்டும் விளம்பர பலகைகள் இல்லாத இடமில்லை என்ற நிலை உருவாகி விட்டது. ஏற்கனவே பிளக்ஸ் போர்டுகளின் ஆபத்தை உணர்ந்து தமிழக அரசு 2003ல் பல சட்ட விதிகளை வகுத்துள்ளது. 

இருப்பினும் இந்த விதிகளை யாரும் பின்பற்றுவது கிடையாது. பெரிய அளவிலான போர்டுகள் சாலைகளை மறைக்கும் விதமாக நிறுவனங்கள் வைத்து விடுகின்றன. விளம்பர பலகை வைப்பதற்கு முன் போலீஸ் அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. அந்த விதிமுறையும் பின்பற்றப்படுவது கிடையாது. பெரிய வர்த்தக நிறுவனங்கள் உயர் அதிகாரிகளை வளைத்து இஷ்டம் போல் விளம்பர பலகைகளை வைத்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். இதில் பெரும்பாலான விளம்பர போர்டுகள் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், நகரில் நினைத்த இடங்களில் எவ்வித அனுமதியின்றி பிளக்ஸ்போர்டுகள் வைக்கப்படுகின்றன. பலவித கலர்களில் வைக்கப்படும் இந்த போர்டுகளை பார்த்துக்கொண்டு பலர் வாகனங்களை இயக்குவதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து போலீசார் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த பிளக்ஸ் போர்டுகளை வரைமுறைபடுத்தி தேவையான விசேஷங்களுக்கு மட்டும் அனுமதியுடன் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.


செய்தி: தினகரன்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

நாளை தொடங்குகிறது பிளஸ் 2 தேர்வுகள், ராமநாதபுரம் மாவட்டத்தில் 15,862 மாணவர்கள் எழுதுகின்றனர்!!

No comments :
பிளஸ் 2 தேர்வு நாளை தொடங்க உள்ள நிலையில் தேர்வு மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பள்ளி கல்வித்துறையின் மூலம் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நாளை (மார்ச் 1) பிளஸ் 2 தேர்வு தொடங்க உள்ளது.



ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் 54 தேர்வு மையங்களும், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி, தடையில்லா மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்வில் முறைகேடுகளை தடுக்க முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் 86 நபர்கள் கொண்ட கண்காணிப்பு படை அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்கள் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட உள்ளது. தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள்கள் சேகரிக்கப்பட்டு விடைத்தாள் சேகரிப்பு மையத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


நாளை தொடங்கும் பொதுதேர்வு வரும் ஏப்.6ம் தேதி வரை நடக்க உள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Tuesday, February 27, 2018

துபாயில் வரும் மார்ச் 2ம் தேதி, இரத்த தான முகாம்!!

No comments :
துபாயில் வரும் மார்ச் 2ம் தேதி, இரத்த தான முகாம்!!



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Thursday, February 22, 2018

துபாய் இந்திய துணை தூதரகத்தில் தொழிலாளர்களது குறைதீர் நிகழ்ச்சி!!

No comments :

துபாய் இந்திய துணை தூதரகத்தில் தொழிலாளர்களது குறைகளை தீர்க்க உதவும் சிறப்பு நிகழ்ச்சி துபாய் இந்திய துணை தூதரகத்தில் ஓபன் ஹவுஸ்எனப்படும் தொழிலாளர்களது குறைகளை தீர்க்க உதவும் சிறப்பு நிகழ்ச்சி கடந்த ஜனவரி 26-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை மதியம் 3 மணி முதல் 5 மணி வரை நடக்கிறது.

இரண்டாவது குறை தீர்க்கும் கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை 23.02.2018 நடக்க இருக்கிறது.



இந்த கூட்டத்தில் தூதரக அதிகாரிகளை நேரடியாக சந்தித்து தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

விசா காலம் முடிந்தும் தங்கியிருப்பவர்கள், சான்றிதழ் அட்டஸ்டேசன் கொடுத்தும் இன்னும் வராமல் இருப்பது, பாஸ்போர்ட் விண்ணப்பித்தும் கிடைக்காமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளையும் புகார் மனுவாக கொடுக்கலாம்.

எனவே இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தகவல்: முதுவை ஹிதாயத், துபாய்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்ட த்தில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கினார் நடிகர் கமல்ஹாசன்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நடிகர் கமல்ஹாசன் தனது நாளை நமதே’ அரசியல் பயணத்தை நேற்று தொடங்கினார்.

இதற்காகநேற்றுமுன்தினம் இரவே ராமேசுவரம் வந்த அவர் நேற்று காலை 7.40 மணிக்குமுன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வீட்டுக்குச் சென்றார். அவரை அப்துல்கலாமின் அண்ணன் முகமது முத்துமீரான் லெப்பை மரைக்காயர்அப்துல் கலாமின் அண்ணன் மகன் ஜெயினுலாபுதீன்பேரன்கள் சேக்தாவூதுசேக் சலீம்அண்ணன் மகள் நசீமா மரைக்காயர்நிஜாமுதீன் மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர். கமல்ஹாசனுக்கு அப்துல்கலாம் போட்டோ பரிசாக அளிக்கப்பட்டது.

தொடர்ந்து வீட்டின் முதல் மாடிக்குச்சென்று அப்துல் கலாம் அருங்காட்சியகத்தை கமல்ஹாசன் பார்வையிட்டார்.

அங்குமக்கள் பிரதிநிதிகள் எப்படி செயல்படவேண்டும் என்பதை விளக்கும் வகையிலும்பாரத மக்களே நாம் எங்கிருக்கிறோம் என்ற தலைப்பிலும் இடம்பெற்று இருந்த கருத்துக்களை கமல்ஹாசன் உற்றுநோக்கி கவனித்து வாசித்தார்.




பின்பு அவர், அப்துல்கலாம் படித்த மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு புறப்பட்டார். ஆனால் அங்கு செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதுகுறித்து அறிந்த கமல்ஹாசன், பள்ளிக்கூடத்தின் எதிரே காரை நிறுத்தச்சொல்லி சிறிது நேரம் அங்கு நின்றபடி பார்வையிட்டு சென்றார்.

இதையடுத்து காலை 9.25 மணிக்கு மீனவர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி ராமேசுவரம் கணேஷ் மகாலில் நடந்தது.

அதில் கலந்து கொண்ட கமல்ஹாசன் பேசியதாவது:-

மீனவர்களின் சுக, துக்கங்களை பத்திரிகைகளை படித்து அறிந்து கொள்வதைவிட நேரில் வந்து அறிந்து கொள்ளவே ஆர்வம். மீனவர்களுக்கு வெவ்வேறு அரசுகள் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு அதை நிறைவேற்றாமல் உள்ளன. மீனவர்கள் பிரச்சினை வரும்போது அதைப்பற்றி பேசாமல் திசை திருப்புவதற்காக வேறு பிரச்சினை பேசப்படுகிறது. இது வாடிக்கையாகி விட்டது. அரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உள்ளது.

உரிமைக்காக போராடும் போது தடியடி நடத்துவது தான் தற்போது நடந்து வருகிறது. உரிமைக்காக போராடுபவர்கள் மீது தடியடி நடத்தக் கூடாது. அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பது தான் ஒரு அரசின் கடமை. மீனவர்களை பொறுத்தவரையில் சர்வதேச பிரச்சினையும் உள்ளது. எனவே அதனை சாதுர்யமாக கையாள வேண்டும். இன்று மாலை புதிய கட்சி தொடங்க உள்ளேன். அதற்கு நீங்கள் அனைவரும் வரவேண்டும். கடமைப்பட்டவர்கள் கட்டாயம் வரவேண்டும். உங்களின் நிலையை அறிய மற்றொரு நாளில் கண்டிப்பாக சந்தித்துப் பேசுவேன்.

இவ்வாறு அவர் பேசி விட்டு புறப்பட்டார்.

அவர் சிறிது நேரமே பேசி விட்டுக் கிளம்பியதால், அங்கு மனுக்களுடன் காத்திருந்த மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

பின்பு கமல்ஹாசன் ஹயாத் ஓட்டலுக்குச்சென்றார். அஙகு நிருபர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்கு கமல்ஹாசன் நிருபர்களிடம் பேசியதாவது:-

கட்சிக்கு ஆள்சேர்ப்பதற்காக நான் ராமேசுவரம் வரவில்லை. மீனவர்களுடன் சேர்வதற்கே ராமேசுவரம் வந்துள்ளேன். மீனவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஊடகத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் இருந்தீர்கள். அதனால் அங்கு அவர்களிடம் பேசமுடியவில்லை. அப்துல்கலாம் எனக்கு மிகவும் முக்கியமானவர். அவருடைய வீட்டிற்கு சென்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் அரசியல் எதுவும் இல்லை. அவருடைய உணர்வு, நாட்டுப்பற்று என்னை மிகவும் கவர்ந்தது.

என்னுடைய பாடத்தின் ஒருபகுதி அவருடைய வாழ்க்கை. அவர் படித்த பள்ளிக்கு செல்லவேண்டும் என்று நினைத்தேன். அதிலும் அரசியல் கிடையாது. ஆனால் தடை போட்டார்கள். அவர்களால் நான் பள்ளிக்குச் செல்வதைத் தான் தடை செய்யமுடியும், நான் பாடம் படிப்பதை தடுக்க முடியாது. அந்த பாடம் தொடரும். எனது படத்தில் வரும் தடைகளை வென்றே சரித்திரம் படைப்பேன்என்ற வரிகளை போல படிப்பேன்.

ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு என்னை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், “நான் உங்களின் ரசிகன், உங்களை விரைவில் சந்திப்பேன், கொள்கைகளை பற்றி நீங்கள் கவலைப்படுவதைவிட, மக்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பதை பட்டியல் போடுங்கள், அதுவே உங்கள் கொள்கையாகிவிடும். இனிமேல் இப்படித்தான், இசங்கள் எல்லாம் சரியாக வராதுஎன்றார். எனது மனதில் இருப்பதை எல்லாம் அவர் பிரதிபலித்தார்.

அவர் எனக்கு மிகவும் பிடித்த தலைவர். இசங்கள் என்றால் கம்யூனிசம் என்று சொல்லவில்லை. மக்களுக்கு என்ன தேவையோ அதை நாம் கொடுக்கவேண்டும். சினிமாவும், அரசியலும் மக்கள் தொடர்பான விஷயம் தான். ஆனால் சினிமாவைவிட பொறுப்பும், பெருமையும் அரசியலில் அதிகம்.

சினிமா என்பது ஒரு பண்டமாற்று முறை. என் திறமை, அது பணமாக கைமாறி இருக்கிறது. ஆனால் அரசியலில் எனது திறமை , பணம் அனைத்தும் உங்களுக்குத் தான். இதுவரை தமிழக ரசிகர்களின் உள்ளத்தில் வாழ்ந்துவந்தேன். இனி அவர்களது இல்லத்தில் வாழ ஆசைப்படுகிறேன். அப்துல்கலாம் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்காத நான் அரசியல் ஆதாயத்துக்காக தற்போது அவருடைய இல்லத்துக்கு வந்ததாக கூறுகிறீர்கள். நான் இறுதி ஊர்வலங்களில் பங்கேற்பது இல்லை. ஜனநாயக நாட்டில் குற்றங்கள் சுமத்த அனைவருக்கும் உரிமை உள்ளது. இன்று நான் அரசியல் கட்சி அறிவிப்பதற்கு முக்கிய காரணம் பிப்ரவரி 21-ந்தேதி பன்னாட்டுத் தாய்மொழி நாள்.

50
ஆண்டுகளுக்குமுன் நான் பார்த்த ராமநாதபுரம் மாவட்டம் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் அதுபோதாது. உலகநாயகனாக நான் இங்கு வரவில்லை. நம்மவராகத் தான் வந்திருக்கிறேன். களப்பணி ஆற்றிவிட்டுத்தான் அரசியலுக்கு வரவேண்டும் என்பது இல்லை. நல்ல எண்ணமும், மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற ஆசையும் இருந்தாலே போதுமானது.

இவ்வாறு அவர் கூறி னார்.பின்னர் அவர், அப்துல் கலாம் நினைவிடத்துக்குச் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அங்கு, அப்துல்கலாம் சிலையையும், நினைவிடம் முழுவதையும் சுற்றிப்பார்த்த பின் ராமநாதபுரம் புறப்பட்டார். 


ெய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Monday, February 19, 2018

சென்னையில் வரும் பிப்- 24ம் தேதி இலவச வேலைவாய்ப்பு முகாம்!!

No comments :
அன்னம்மாள் இன்ஸ்ட்யூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் சார்பில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இலவச வேலைவாய்ப்பு முகாம் வரும் 24ம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. 


இதில், உலக புகழ்பெற்ற சொகுசு கப்பல் நிறுவனங்கள், 5 ஸ்டார், 3 ஸ்டார் ஹோட்டல்கள் பங்கேற்கின்றன. இந்த முகாமில் 8, 10, 12ம் வகுப்பு மற்றும் அனைத்து துறை டிப்ளமோ, பட்டதாரி படித்தவர்களும், படித்து கொண்டிருப்பவர்களும் மற்றும் இறுதியாண்டு மாணவர்கள் பங்கேற்கலாம். 

கிச்சன், ஹவுஸ் கீப்பிங், ப்ரன்ட் ஆப்ஸ், எச்.ஆர்.அக்கவுன்ட்ஸ், பொறியாளர், சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங், பார்ஸ் மற்றும் பப்ஸ், பர்ச்சேஸ், செக்யூரிட்டி, கிளீனிங், டிரைவர், பிளம்பிங், எலக்ட்ரீசியன் போன்ற துறைகளில் வேலை வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன. 

முகாமில் பங்குபெறுவோர் குறைந்தபட்சம் 10 பையோ டேட்டா கொண்டு வர வேண்டும்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

கீழக்கரை புதிய தாலுகா அலுவலக கட்டிட பணி துவக்கம்!!

No comments :
கீழக்கரையை தனி தாலுகாவாக அரசு அறிவித்து 14.3.2015 முதல் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் ஒரு பகுதியிலும், மலேரியா மருத்துவமனையில் ஒரு பகுதியிலும் தாலுகா அலுவலகம் தனித்தனியாக வெவ்வேறு இடத்தில் செயல்பட்டு வருகிறது. 

இந்த தாலுகா அலுவலகத்தில் போதுமான இடவசதியில்லாமல் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். 



புதிய தாலுகா அலுவலகம் கட்டுவதற்கு ரூ.2 கோடியே 56 லட்சம் ஒதுக்கீடு செய்து ஒன்றரை வருடம் ஆகியும் பணிகள் துவங்கவில்லை என்றும் விரைந்து கட்டுமான பணியை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோர்க்கையை தொடர்ந்து புதிய தாலுகா அலுவலகம் கட்டுவதற்கு பணி தொடங்குவதற்கு அமைச்சர் மணிகண்டன் அடிக்கல் நாட்டி கட்டிட பணியை தொடங்கி வைத்தார். 

இதில் கலெக்டர் நடராஜன், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

மண்டபம் முகாம் ரயில் நிலையத்தில் டிக்கெட் தட்டுப்பாடு; பயணிகள் அவதி!!

No comments :

மண்டபம் முகாம் ரயில் நிலையத்திலிருந்து மதுரை வழித்தடத்திற்கு டிக்கெட் கிடைக்காததால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ராமேஸ்வரம்மதுரை இடையே காலைநண்பகல்மாலை என வேளைகளில் பயணிகள் ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது. மீட்டர்கேஜ் பாதையாக இருந்தபோது மண்டபம் முகாம் சிறிய அளவிலான ரயில் நிலையமாக இருந்தது. அகல ரயில் பாதைக்காக பழைய ரயில் நிலையம் உடைக்கப்பட்டு புதிய ரயில்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

மண்டபம் முகாம் பகுதியில் மத்தியமாநில அரசு அலுவலகங்கள்பள்ளிகள்மருத்துவமனைகள்இலங்கை அகதிகளுக்கான சப்.கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்கள் உள்ளதால் தினமும் நூற்றுக்கனக்கான பயணிகள் இங்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் மண்டபம் முகாம் ரயில் நிலையத்தில் இருந்து மதுரை வழித்தடத்தில் ராமநாதபுரம்சத்திரக்குடிபரமக்குடிதிருப்புவனம்மதுரை செல்வதற்கு டிக்கெட் கிடைப்பதில்லை. இதனால் மண்டபம் முகாமிலிருந்து பரமக்குடி செல்வதற்கு மானாமதுரை டிக்கெட் எடுத்து பரமக்குடி உள்ளிட்ட சம்மந்தப்பட்ட ரயில்நிலையத்தில் இறங்க வேண்டிய உள்ளது. இதேபோல் மதுரைக்கு டிக்கெட் இல்லாததால் மானாமதுரைக்கு எடுத்தபிறகு அங்கு இறங்கி பயணிகள் மீண்டும் மதுரைக்கு டிக்கெட் வாங்க வேண்டியுள்ளது. 




சம்மந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகள் பயணிகளின் தேவையை கருதி உடனடியாக நடவடிக்கை எடுத்து மதுரை வழித்தடத்தில் உள்ள அனைத்து இடங்களுக்கும் டிக்கெட் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்று அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து மண்டபம் கேம்பை சத்தியேந்திரன் கூறுகையில், மண்டபம் முகாமிலிருந்து ராமநாதபுரம் செல்வதற்கு கூட மானாமதுரை டிக்கெட் எடுக்க வேண்டியுள்ளது. மதுரை செல்வதாக இருந்தால் மானாமதுரை வரையே டிக்கெட் கிடைக்கிறது. அதன்பிறகு மானாமதுரையில் இருந்து மதுரை செல்ல டிக்கெட் எடுக்க கவுன்டருக்கு சென்று திரும்புவதற்குள் ரயில் புறப்பட்டு விடுகிறது. தற்போது பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பலர் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர். இந்நிலையில் போக வேண்டிய இடத்திற்கு டிக்கெட் எடுக்காமல் செல்லாத இடத்திற்கு கூடுதல் விலை கொடுத்து டிக்கெட் எடுக்க வேண்டியுள்ள நிலை உள்ளதால் கடும் சிரமம் அடைந்து வருகிறோம் என்று கூறினார்.

மண்டபம் ரயில்நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, இதுகுறித்து ஏற்கனவே புகார் வந்தது. ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தெரியபடுத்தியுள்ளோம். உயர் அதிகாரிகள்தான் விரைவில் முடிவு செய்து விரைவில் அனைத்து இடங்களுக்கும் டிக்கெட் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
அதிகாரிகள் கவனிப்பார்களா?

மண்டபம் கேம்பை அடுத்து எந்தவொரு ரயில்நிலையத்திலும் ரயில் அதிக நேரம் நிற்பது கிடையாது. மதுரை செல்லும் பயணிகள் உயரமான பிளாட்பாரம் காரணமாக ராமநாதபுரத்திலோ, பரமக்குடியிலோ அல்லது மானாமதுரையிலோ ரயிலை விட்டு இறங்கி டிக்கெட் எடுக்க முடியாத நிலையில் உள்ளனர். வயதான பயணிகளாக இருந்தால் வண்டியிலிருந்து இறங்கி டிக்கெட் கவுண்டருக்கு சென்று மீண்டும் அதே பெட்டியில் ஏறுவது என்பது சிரமமான ஒன்று. சம்மந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகள் பயணிகளின் நலன் கருதி விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செய்தி: தினகரன்


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் அம்மா பூங்காவை சீரமைக்க கோரிக்கை!!

No comments :
ராமநாதபுரம் நகராட்சியை ஒட்டிய பட்டணம்காத்தான் ஊராட்சி பகுதியில் அமைக்கப்பட்ட அம்மா பூங்கா பராமரிப்பின்றி உருக்குலைந்து வருவதால், இதனை சீரமைக்க வேண்டும், என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகப் பகுதியில் சாக்கடை நீர் தேங்கும் இடமாக இருந்ததை, முந்தைய கலெக்டர் நந்தகுமார் முயற்சியால் பூங்காவாக மாற்றப்பட்டது.
அன்வர்ராஜா எம்.பி., நிதி, ஊரக வளர்ச்சி முகமை நிதி உள்ளிட்ட பல்வேறு நிதிகளை பயன்படுத்தி இதுவரை பூங்கா சீரமைப்பிற்காக 1.60 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டுள்ளது.

இந்த பூங்காவின் உள்பகுதியை சுற்றிலும் நடைபயிற்சி செய்வதற்காக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. பூங்கா நடுவில்
சமீபத்தில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது. மேலும், உள்பகுதியில் ஊஞ்சல், சறுக்குகள், பொம்மைகள் உள்ளிட்ட ஏராளமான சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
பூங்காவின் கிழக்கு பகுதி தெற்கு மூலையில் உடற்பயிற்சி செய்வதற்கான உபகரணங்கள் அமைக்கப்பட்டன.

இவை சேதமடைந்த நிலையில், இரண்டுமுறை சரி செய்யப்பட்டது. தரமற்ற பணியால் தற்போது, மூன்றாவது முறையாக உடற்பயிற்சி சாதனங்கள் சேதம் அடைந்துள்ளன.

இந்த பூங்காவிற்குள் தான் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவிற்காக பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு நடந்தது.
அப்போது, இங்கு வந்த கூட்டத்தால் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் நன்றாக வளர்ந்திருந்த பல மரங்கள் அழிக்கப்பட்டன. மேலும், பூங்கா முழுவதும், கரடு முரடாக, பந்தல் குழிகள் தோண்டப்பட்டது கூட இன்னும் அப்படியே விடப்பட்டுள்ளது.

இங்குள்ள ஊஞ்சல்கள், சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் முழுமையாக சேதமடைந்த நிலையில், தற்போது வெறும் காட்சிப் பொருளாகத்தான் பூங்கா உள்ளது.

மொத்தத்தில் பூங்கா தற்போது, பயனற்ற நிலைக்கு மாறிவிட்டது. நகர மக்களின் ஒரு பொழுது போக்கு இடமான அம்மா பூங்காவை சீரமைக்க வேண்டும்என்பதே மக்களின் விருப்பம்.

செய்தி: தினமலர்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Sunday, February 18, 2018

பிப்-24-ந்தேதி குழந்தைகளுக்கு வைட்டமின்- ஏ திரவம் வழங்கும் முகாம் – கலெக்டர்!!

No comments :

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் 6 மாதம் முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின்- ஏ திரவம் வழங்குவது தொடர்பான கூட்டம் மற்றும் தேசிய குடல்புழு நாள் பற்றிய கண்காணிப்புக்குழு ஆலோசனை கூட்டம் கலெக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 24-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் மாதம் முதல் வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது.
இந்த வைட்டமின்-ஏ சத்து குறைபாட்டினால் குழந்தைகளுக்கு கண்பார்வை குறைபாடுமாலைக்கண் நோய்தோல் நோய் மற்றும் வயிற்றுப்புண் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதை தடுக்க வைட்டமின் திரவம் வழங்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் லட்சத்து 11 ஆயிரத்து 417 குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது.



இந்த பணி நாளை முதல் அனைத்து துணை சுகாதார மையத்திலும், அதனை தொடர்ந்து நாளைமறுநாள் (செவ்வாய்க்கிழமை) முதல் 24-ந்தேதி வரை அங்கன்வாடி மையங்களிலும் கொடுக்கப்பட உள்ளது.

பொதுமக்கள் இந்த முகாமில் தங்களது குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்கி பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, பரமக்குடி சப்-கலெக்டர் விஷ்ணுசந்திரன், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் முல்லைக்கொடி, துணை இயக்குனர் ரவிச்சந்திரன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் குமரகுருபரன் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Saturday, February 17, 2018

டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ்!!

No comments :

கடந்த 5 நாட்களாக நடந்து வந்த டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது. டெண்டர் விடுவதில் மாற்றம் செய்வதாக எண்ணெய் நிறுவனங்கள் அளித்த உறுதி மொழியை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் இன்று நடைபெற்ற தென்மண்டல் லாரி உரிமையாளர்கள் கூட்டத்தில் எண்ணெய் நிறுவனங்களின் உறுதி மொழியை ஏற்று, போராட்டத்தைத் திரும்பப் பெறுவது என்ற முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.


எரிவாயு எடுத்துச் செல்ல மண்டல வாரியாக ஒப்பந்தம் கோருவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5 நாட்களாக டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், இன்று போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. " மாநில அளவில் டெண்டர், லாரிகளுக்கு வாடகை நிர்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், கடந்த 12ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதில், தென்மண்டலத்தைச் சேர்ந்த 4,500 எல்பிஜி டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. வேலை நிறுத்தத்தால் தினசரி 13 ஆயிரம் டன் எரிவாயு எடுத்துச் செல்லும் பணிகள் பாதிக்கப்பட்டன. எரிவாயு எடுத்துச் செல்லும் பணி நின்றதால், 15 லட்சம் சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பும் பணியும் பாதிக்கப்பட்டது.

டேங்கர் லாரிகளின் வேலை நிறுத்தம் நீடித்திருந்தால் தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் அபாயம் இருந்தது.
  

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Wednesday, February 14, 2018

ராமநாதபுரம் அருகே பேருந்து விபத்துக்குள்ளானது; 5 பேர் காயம்!!

No comments :
ராமநாதபுரம் அருகே லாந்தை காலனியில் அரசுப் பேருந்தும், தனியார் பேருந்தும் செவ்வாய்க்கிழமை நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் தனியார் பேருந்தில் பயணம் செய்த 5 பேர் காயம் அடைந்தனர். 

ராமநாதபுரத்திலிருந்து பரமக்குடி நோக்கி தனியார் பேருந்து ஒன்று செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தது. லாந்தை கிராமப்பகுதியில் சென்றபோது எதிரே வந்த அரசுப்பேருந்து, தனியார் பேருந்து மீது மோதியது. 

இதில் தனியார் பேருந்தில் பயணம் செய்த பரமக்குடி பெரும்பச்சேரியை சேர்ந்த சுப்பிரமணி மனைவி ஈஸ்வரி (40), கடம்போடை கிராமம் மாதவன் மகள் கார்த்திகா (18), ஆலங்குளம் ராமு மகன் வேலுமணி (61), திருப்பத்தூர் தாவூத்கான் மகன் ஆரோன் அல் ரசீது (37) ஆகியோர் பலத்த காயம் அடைந்து ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 

சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் நகர் போலீஸார் வழக்குப்பதிந்து அரசுப் பேருந்து ஓட்டுநரான மதுரையை சேர்ந்த குமரனிடம் விசாரணை நடந்தி வருகின்றனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரத்தில் ரயில் மறியல் போராட்டத்திற்கு முயன்றதா 65 பேர் கைது!!

No comments :
ரயில்வேத்துறையை தனியார் மயமாக்குவதைக் கண்டித்து ராமநாதபுரத்தில் ரயில் மறியல் போராட்டத்திற்கு முயன்றதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த 65 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர். 

ரயில்வேத்துறையை தனியார்மயமாக்குவது, பணி ஓய்வு பெற்றவர்களை ரயில்வேத்துறையில் நியமிக்க எடுக்கும் நடவடிக்கைகளைக் கண்டித்தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ரயில் மறியல் முயற்சி நடைபெற்றது. 

திருச்சியிலிருந்து ராமேசுவரம் செல்லும் பயணிகள் ரயில் ராமநாதபுரம் ரயில் நிலையத்துக்கு வந்தபோது ரயில் நிலையம் முன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆதிரெத்தினம் தலைமையில் சாலை மறியல் செய்ய முயன்றனர். அப்போது அங்கு டி.எஸ்.பி எஸ். நடராஜ் தலைமையில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீஸார் 65 பேரை கைது செய்தனர். 

சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் பஜார் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Tuesday, February 13, 2018

ராமநாதபுர மாவட்டம், ஏர்வாடி அரசு பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது!!

No comments :
ராமநாதபுர மாவட்டம், ஏர்வாடி அரசு பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டது



விருதை அமைச்சர் திரு. செங்கோட்டையன் வழங்க தலைமை ஆசிரியை திருமதி.தமிழரசி பெற்றுக்கொண்டார்.

செய்தி: திரு. தாஹீர், கீழை



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் முன் சாலை மறியல்; 65 பேர் கைது!!

No comments :


ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் உட்பட 65 பேர் கைது செய்யப்பட்டனர்.



சாலை மறியலுக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் வி.காசிநாததுரை தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.குருவேல், இ.கண்ணகி, முத்துராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதில் பேருந்துப் பயணக் கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் முன் மறியலில் ஈடுபட்ட கட்சியை சேர்ந்த 8 பெண்கள் உட்பட 65 பேர் கைது செய்யப்பட்டனர்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Sunday, February 11, 2018

ராமநாதபுரம் மாவட்டத்தில் 39,606 பேர் இன்று குரூப் 4 தேர்வு எழுதுகின்றனர்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் 39 ஆயிரத்து 906 பேர் இன்று, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு எழுதுகின்றனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப் 4 தேர்வு இன்று(பிப்.11) நடக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 157 தேர்வு மையங்களில் 39,906 பேர் எழுதுகின்றனர்.



இதையடுத்து, முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் நடராஜன் தலைமையில் கூட்ட அரங்கில் நடந்தது.கலெக்டர் நடராஜன் பேசுகையில், தேர்வில் முறைகேடு ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில், தாலுகாவிற்கு ஒரு குழு வீதம் எட்டு பறக்கும் படை குழுக்களும், 37 நிறுத்தும் படை குழுக்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். தேர்வு மையங்களுக்கு செல்ல போதுமான பஸ்கள் இயக்கப்படும், என்றார்.

மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, ராமநாதபுரம் கோட்டாட்சியர் பேபி, முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)