(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, January 31, 2018

ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை - போலீஸ்!!

No comments :
ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் போலீசார் அறிவிப்பை டூவீலர் ஓட்டுநர்கள் கண்டுகொள்ளாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மதுரை, ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராமநாதபுரத்தில் ஒரு லட்சத்திற்கும் மேலான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மாவட்டத்தில் பொதுமக்களின் நலன் கருதி புதிய, பழைய பஸ் ஸ்டாண்டுகள் உள்ளது. தினமும் 300க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. நகர பஸ்களில் சுமார் 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் தினமும் வந்து செல்கின்றனர்.

தினந்தோறும் வெளியிடங்களுக்கு செல்லும் பொதுமக்கள் ராமநாதபுரத்தின் மத்திய பகுதியில் இயங்கி வரும் பஸ் ஸ்டாண்டிற்கு அதிகளவில் வருவதால் காலை, மாலை நேரங்களில் கூட்டம் நெரிசல் உள்ளது. அரசு, தனியார் பஸ்களிலும் பயணிகள் கூட்டம் எப்போதும் நிரம்பி வழிகிறது. போக்குவரத்தை சரி செய்ய போலீசார் புதிய சட்ட முறைகளை கொண்டு வந்தாலும் பொதுமக்கள் அதை உணர்ந்து கொள்வது கிடையாது.

ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் வெளியேறும் பகுதி, பஸ்களை நிறுத்தும் டிராக் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் டூவிலர் வாக னங்களை நிறுத்தக் கூடாது என அறிவிப்பு செய்துள்ளனர்.

இதை கண்டுகொள்ளாமல் பஸ் ஸ்டாண்டிற்குள் டூவீலரில் வரும் வாகன ஓட்டுநர்கள் அங்கேயே நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் தினந்தோறும் அப்பகுதியில் பஸ்களை நிறுத்த முடியாமல் பஸ் டிரைவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். ஏற்கனவே நெரிசலாக உள்ள பகுதியில் தொடர்ந்து வாகனங்களை நிறுத்துவதால் ஏற்படும் பிரச்னைகளை பொதுமக்கள் உணர்ந்து தங்கள் வாகனங்களை பஸ் ஸ்டாண்டின் வெளியிடங்களில் நிறுத்த முயற்சி செய்ய வேண்டும்.

போக்குவரத்து போலீசாரிடம் கேட்டபோது, போலீசார் பற்றாக்குறை காரணமாக குறைந்த அளவு போலீசாரே  தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இந்நிலையில் முறையான அறிவிப்பு இருந்தும் பலர் பஸ் ஸ்டாண்டின் உள்ளே வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.

பஸ் ஸ்டாண்டில் உள்ளே நிறுத்தப்படும் வாகன ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.


மக்கள் ஒத்துழைப்பும், போலீசாரின் தொடர் கண்காணிப்பும் நிரப்பமாக இருந்தால் கண்டிப்பாக இந்த போகுவரத்து நெரிசலை கட்டுப்படுத்தலாம்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment