(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, January 27, 2018

ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் காட்சிப்பொருளாக ஆட்டோமேடிக் டிக்கெட் இயந்திரம்!!

No comments :
  
ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் பயன்பாடு இல்லாமல் ஆட்டோமேடிக் டிக்கெட் இயந்திரம் உள்ளதால் பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். ராமநாதபுரத்தை சுற்றிலும் அதிக கிராமங்கள் உள்ள நிலையில்ரயில் கட்டணமும் பஸ் கட்டணத்தை விட குறைவாக இருப்பதால் மதுரை-ராமேஸ்வரம்திருச்சி-ராமேஸ்வரம் பாசேஞ்சர் ரயில்களில் செல்ல ஏராளமான பயணிகள் தினந்தோறும் ரயில் நிலையம் வருகின்றனர். ரயில் நிலையத்தில் ஏற்கனவே பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் தற்போது கூட்டமான நேரங்களில் தானியங்கி முறையில் இயங்கும் ஆட்டோமேடிக் டிக்கெட் வென்டரிங் இயந்திரம் பயனில்லாமல் வெறும் காட்சி பொருளாக பிளாட்பாரத்தில் உள்ளது. 

இந்த இயந்திரத்தை இயக்க ஏடிஎம் கார்டு போல ஸ்மார்ட்கார்டு வேண்டும். அதை தனியாக ரயில்வேயில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள வேண்டும். அதன் பின்பு தேவைக்கேற்ப அதில் பணத்தை செலுத்தி அந்த கார்டை நாம் பயன்படுத்தி கொள்ளலாம். ரயிலில் நாம் செல்லும் இடத்தை மானிட்டரில் தேர்வு செய்தால் தனியாக டிக்கெட் வந்து விடும்.




இந்த இயந்திரத்தை பயன்படுத்த தெரியாதவர்களுக்கு விளக்கம் அளித்து டிக்கெட் எடுத்து கொடுப்பதற்காக ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி உள்ளிட்ட ரயில்நிலையங்களில் ரயில்வே பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். தற்போது ராமேஸ்வரம், பரமக்குடியில் இந்த இயந்திரம் முறையாக இயங்கி வருகிறது. ராமநாதபுரத்தில் இதற்கென அமர்த்தப்பட்ட பணியாளர்கள் பணிக்கு வருவது கிடையாது. இந்த இயந்திரம் குறித்த விழிப்புணர்வும் யாருக்கும் இல்லை. இதனால் கூட்ட நேரங்களிலும் பயணிகள் வழக்கம்போல் டிக்கெட்டை எடுக்க வரிசையிலேயே  நிற்க வேண்டியுள்ளது. 

ரயில்வே அதிகாரிகள் வரும் காலங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க இந்த இயந்திரத்தின் பயன்பாட்டை பயணிகளிடம் தெரிவித்து அதை இயக்க பணியாளர்களை அமர்த்தினால் கூட்ட நெரிசலை தவிர்க்கலாம் என் பயணிகள் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.


சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனிப்பார்களா?

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment