Wednesday, January 3, 2018
காவல்துறை வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல்படை, தீயணைப்போர், சிறைக்காவலர் போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன.
காவல்துறையில் 5 ஆயிரத்து 538 இடங்களும்,
காவல்துறையில் 5 ஆயிரத்து 538 இடங்களும்,
சிறைத் துறையில் 340 இடங்களும்,
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையில் 216
இடங்களும்,
இது தவிர 46 பின்னடைவுப்
பணியிடங்களும் உள்ளன.
மொத்தம் 6 ஆயிரத்து 140 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
இந்த பணிகளுக்கு 1-7-2017-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்து 24 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 1-7-1993 மற்றும் 1-7-1999 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 170 செ.மீ. உயரமும், 81 செ.மீ. மார்பளவும், 5 செ.மீ. விரியும் திறனும் பெற்றிருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் உடல்திறன் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் பணியில் சேர்க்கப்படுவார்கள். விளையாட்டு மற்றும் என்.சி.சி. சான்றிதழ் சிறப்பு தகுதியாக கருதப்படும்.
விருப்பம் உள்ளவர்கள் தேர்வுக் கட்டணம் ரூ.130 செலுத்தி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள் 27-1-2018-ந் தேதியாகும். தபால் நிலையம் வழியாக கட்டணம் செலுத்த 31-1-2018-ந் தேதி கடைசி நாளாகும்.
இதற்கான எழுத்துத் தேர்வு மார்ச், ஏப்ரல் மாதத்தில் நடத்த உத்தேசிக்கப் பட்டுள்ளது.
விரிவான விவரங்களை www.tnusrb.tn.gov.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment