Thursday, December 28, 2017
துவங்கியது ராமநாதரம் பொருட்காட்சி, ஏராளமானோர் கண்டுகளிப்பு!!
ராமநாதபுரத்தில் குழந்தைகள், பெரியவர்களை
மகிழ்விக்கும் வகையில் பொருட்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு,
பொங்கல் பண்டிகையொட்டி ராமநாதபுரத்தில் முதன் முறையாக ராட்சத கழுகு
பொருட்காட்சி ரயில்வே கேட் அருகே தொண்டியப்பா எஸ்டேட் பகுதியில் கடந்த 24ம் தேதி முதல் நடந்து வருகிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் வகையில் ஜுராசிக் பார்க், நீர் சறுக்கு, செயற்கை அருவி, படகு சவாரி, உள்ளிட்ட பல விளையாட்டுகள் உள்ளன.
இதுதவிர 3டி ஜாலங்கள், அதிவேக பைக் சாகசம், திகிலூட்டும் பேய் வீடு, எலக்ட்ரிக் பெண்மணி என பொழுதுபோக்கிற்கு அனைத்து அம்சங்களும் உள்ளன. புதுமையான மேஜிக் ஷோ நிகழ்ச்சியும் நடந்து வருகிறது. சிறப்பு உணவு வகைகளும் தயாரிக்கப்படுகின்றன.
பொருட்காட்சிக்கு வருபவர்களுக்கு மெஹந்தி, வண்ண மீன்கள், ஸ்டேசனரி, முகமுடி உள்ளிட்ட பொருட்களில் ஏதேனும் ஒன்று இலவசமாக வழங்கப்படுகிறது. மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை பொருட்காட்சி நடைபெறும். வரும் ஜன. 28 வரை இந்த பொருட்காட்சி நடைபெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள், குழந்தைகள் பொருட்காட்சியை ரசித்து வருகின்றனர்.
செய்தி: தினகரன்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
திருஉத்திரகோசமங்கை கோவில் திருவிழாவை முன்னிட்டு 02.01.2018 அன்று உள்ளூர் விடுமுறை!!
ராமநாதபுரம் மாவட்டம்,
கீழக்கரை வட்டம், திருஉத்திரகோசமங்கை
கிராமத்தில் உள்ள அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம்
திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு 02.01.2018 அன்று செவ்வாய்;கிழமை ஒருநாள் மட்டும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு
‘உள்ளுர் விடுமுறை” ஆகவும்;, அதனை ஈடு செய்யும் பொருட்டு வரும் 20.01.2018 அன்று
சனிக்கிழமை பணிநாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும்
20.01.2018 அன்று வழக்கம்போல் இயங்கும்.
இந்த உள்ளுர்; விடுமுறை நாள் செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், 02.01.2018 செவ்வாய்;கிழமை அன்று ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கருவூலம், சார்நிலை கருவூலங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் அரசு பாதுகாப்பிற்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.
மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர்.நடராஜன் தெரிவித்துள்ளார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமநாதபுரம் மாவட்ட வார்டு மறுவரையறை பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்!!
ராமநாதபுரம் மாவட்டத்தில், உள்ளாட்சி
தேர்தலுக்கான வார்டு மறுவரையறை பட்டியலை கலெக்டர் நடராஜன் வெளியிட்டார்.
உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம், அக்.,2016ல் முடிவடைந்த நிலையில், செப்.,ல் தேர்தல்
அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்தல் நடத்த இருந்த நிலையில், உள்ளாட்சி
வார்டு எல்லைகளை மறு வரையறை செய்தபின்,தேர்தல் நடத்த வேண்டும், என்றஉயர்நீதிமன்ற
உத்தரவால் தேர்தல்ரத்து செய்யப்பட்டது.
தமிழ்நாடு மறுவரையறை ஆணைய ஒழுங்குமுறைகளின் படி 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு, ஏற்கனவே உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள வார்டு எண்ணிக்கையில் மாற்றங்களின்றி, சராசரி மக்கள் தொகையை கணக்கில் கொண்டு வார்டு எல்லைகள் மறு வரையறை செய்யப்பட்டது.
அதன்படி, மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையில், கிராம
ஊராட்சி வார்டுகள் எண்ணிக்கையில் 25 சதவீதம் கூடுதலாகவோ, அல்லது
குறைவாகவோ இருக்கலாம். ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி
வார்டுகளுக்கு 10
சதவீதம் கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கலாம்.
அதன்படி, மாவட்டத்தில் 3,075 கிராம ஊராட்சி வார்டுகளும், 170 ஊராட்சி ஒன்றிய வார்டுகளும், 17 மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கான மறுவரையறைபட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் நடராஜன் பட்டியலை வெளியிட்டார்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)