முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, December 24, 2017

கீழக்கரை சாலையில் வழிந்தோடும் சாக்கடை, அதிகாரிகள் கவனிப்பார்களா?!!

No comments :

கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் குறிப்பாக வடக்குத்தெரு பகுதி 19ம் மற்றும் 20ம் வார்டுகளில் கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் தெருக்களில் நிறைந்து பாதசாரிகளுக்கு சிரமத்தை கொடுத்துள்ளது.


இதைப்பற்றி அப்பகுதியைச்சார்ந்த திரு.நசுருதீன் கூறுகையில்:

இந்த கால்வாய் அடைப்பைப்பற்றி பலமுறை நகராட்சியில் புகார் செய்தும் நடவடிக்கையில்லை. தேங்கும் கழிவுநீர் அருகிலுள்ள பெண்கள் தொழுகைப்பள்ளிக்குள் வழிகிறது



(வீடியோ பதிவு)



தொழுகைக்கு வருபவர்களும், பள்ளிக்கு செல்லும் மாணவர்களும், அவ்வழி செல்லும் பாதசாரிகளும் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். இதன் காரணமாக நோய் பரவும் அபாயமும் இருக்கிறது.


சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்க எடுக்க வேண்டும் என்பதே எங்கள் பகுதி மக்களின் கோர்க்கை என்று கூறினார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் போதுமான இருக்கை வசதி இல்லாததால் பயணிகள் அவதி!!

No comments :
ராமநாதபுரம் பழைய பஸ் ஸ்டாண்டில் போதுமான இருக்கை வசதி இல்லாததால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

ராமநாதபுரம் நகரில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.  தினமும் 500க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.  நகர பஸ்களில் சுமார் 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் தினமும் வந்து செல்கின்றனர். 

இதனால் பஸ்களில் கூட்டம் எப்போதும் நிரம்பி வழிகிறது. ராமநாதபுரம் பழைய பஸ் ஸ்டாண்டில் தற்போது டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. 

அங்கு பயணிகள் வசதிக்காகப் போதுமான இருக்கை வசதிகள் இல்லை. இதனால் பயணிகள் உட்காருவதற்கு இடம் இல்லாமல் தரையில் உட்கார வேண்டியுள்ளது.  இதனால் கூட்ட நேரங்களில் பஸ்சிற்காக காத்து நிற்கும் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  


நகராட்சி நிர்வாகத்தினர் பயணிகளின் நலன் கருதி விரைவில் இருக்கை வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)