முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, December 7, 2017

துபாயில் டிச 9-10 தேதிகளில் இந்திய கல்வி பொருட்காட்சி!!

No comments :
துபாயில் டிச 9-10 தேதிகளில் இந்திய கல்வி பொருட்காட்சி!!




(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் பாதாள சாக்கடை கழிவுகளை அகற்றுவதில் மெத்தனம்!!

No comments :

ராமநாதபுரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் அந்தந்தப்பகுதிகளில் அடைப்பு ஏற்பட்டால் சுத்தம் செய்வதற்காக மேன் ஹோல் அமைக்கப்பட்டுள்ளன.
அனைத்து வீடுகளில் இருந்து கழிவு நீர் குழாய்கள் அமைக்கப்பட்டு, ரோடுகளின் நடுவில் பள்ளங்கள் அமைக்கப்பட்டு, அதில் நிரப்பப்படுகிறது. இதில் நிரம்பும் கழிவு நீர் மோட்டார் இயந்திரங்கள் மூலம் உறிஞ்சப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் பல இடங்களில் அனைத்து கழிவு நீர்களையும் உறிஞ்சும்,
குதிரைத்திறன் அதிகம் உள்ள பம்பு செட் மோட்டார் இயந்திரம் பயன்
படுத்தப்பட வேண்டும்.



திறன் குறைந்த பம்பு செட் மோட்டார்கள் பயன்படுத்துவதால், பல இடங்களில் மேன் ேஹால்களில் உள்ள கழிவு நீர் உறிஞ்சப்படுவதில்லை. இதில் நிறையும் கழிவு நீர் பயன்படுத்தப்படும் வீடுகளில், கழிவு நீர் செல்வதற்காக வைக்கப்பட்ட குழாய்கள் மூலம் மீண்டும் திரும்ப வந்து குளம் போல் தேங்கி விடுகிறது. இதில் கழிவு நீர் செல்ல முடியாமல் பல இடங்களில் மேன் ஹோல்களில் இருந்து கழிவு நீர் வெளியேறி ஆறுகளைப்போல் தெருக்களில் ஓடுகிறது.

இது குறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனப்போக்கில் உள்ளனர். இதனால் அப்பகுதிகளில் சுகாதாரக்கேடு ஏற்பட்டு, நோய் பரவும் அபாயம் உள்ளது.

அதிகாரிகள் பாதாள சாக்கடை கழிவுகளை அகற்றுவதில் உள்ள பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

சமூக, மத நல்லிணக்கத்திற்கான விருது பெற விண்ணப்பிக்கலாம் -கலெக்டர்!!

No comments :

சமூக, மத நல்லிணக்கத்திற்காக வழங்கப்படும் கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம், என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜாதி மோதல்கள், கலவரங்களின் போது துரிதமாக செயல்பட்டு மாற்று ஜாதியினரின் உயிர், உடமைகளை பாதுகாத்தும், உயிரை பணயம் வைத்து மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள், அதற்கான ஆதாரங்களுடன் இந்த விருது பெற விண்ணப்பிக்கலாம்.



ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று இந்த விருது வழங்கப்படுகிறது. அவரவர் செய்த செயல்களின் அடிப்படையில்
கிரேடு 1 நிலைக்கு2 லட்சம் ரூபாய் மற்றும் சான்றிதழ்,
இரண்டாம் நிலைக்கு 1 லட்சம் ரூபாய் மற்றும் சான்றிதழ்,
மூன்றாம் நிலைக்கு 50 ஆயிரம் ரூபாய் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.


விருது பெற தகுதியானவர்கள், டிச.,15க்குள் மாவட்ட விளையாட்டு அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும், என கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)