Wednesday, December 6, 2017
ராமநாதபுரத்தில் ஓர் புதிய உதயம் ”அல் பாரி ”; இஸ்லாமிய புத்தக மற்றும் ஆடை நிலையம்!!
ராமநாதபுரத்தில் ஓர் புதிய உதயம் ”அல் பாரி ”; இஸ்லாமிய புத்தக மற்றும் ஆடை நிலையம்!!
தொடர்புக்கு: 9944950588 / albaaribooks@gmail.com
உரிமையாளர்: திரு. செய்யது ஜவாத்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமநாதபுரம் மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்படுமா நோய் பரப்பும் கொசுக்கள்!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் புயல்
அறிவிப்பால் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ராமநாதபுரம் நகர்
பகுதியில் தாழ்வான பல இடங்களில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. மழைநீரில் கொசுக்களின்
பெருக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
அரசு மருத்துவமனைகளில் தினந்தோறும் 100க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதவிர தனியார் மருத்துவமனைகளிலும் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
மாவட்ட சுகாதார துறையில் பணியாற்றும் ஊழியர்
பற்றாக்குறையினால் நகர்,
கிராமப் பகுதிகளில் கொசு மருந்து தெளிக்கும் பணியில் மந்தம்
ஏற்பட்டு வருகிறது.
மாவட்ட சுகாதார துறையினர் கொசு ஒழிக்க உரிய நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
காரைக்குடியில் சூரியன் எப்எம் நடத்தும் வர்ணஜாலம் ஓவியப் போட்டி!!
காரைக்குடியில் சூரியன் எப்எம் நடத்தும் மாபெரும் வர்ணஜாலம்
ஓவியப் போட்டி வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதில் பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.
சன் குழுமத்தின் ஓர் அங்கமான சூரியன் எப்எம் மதுரை மக்களின்
மனம் கவரும் வகையில் நிகழ்ச்சிகளையும் பாடல்களையும் வழங்கி வருகிறது. அத்துடன்
மக்களைத் தேடிச் சென்று பல போட்டிகளையும், நிகழ்ச்சிகளையும் நடத்தி
நேயர்களுக்குப் பரிசுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், நமது
காரைக்குடியில் முதல் முறையாக சூரியன் எப்எம் சார்பில் மாபெரும் வர்ணஜாலம் ஓவியப்
போட்டி நடைபெற உள்ளது. வரும் சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு காரைக்குடி
மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் போட்டி நடைபெற உள்ளது. இதில் 4ம்
வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்கலாம்.
4ம் வகுப்பு முதல் 6ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் ‘எனது கனவு இல்லம்’ என்ற தலைப்பிலும்,
4ம் வகுப்பு முதல் 6ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் ‘எனது கனவு இல்லம்’ என்ற தலைப்பிலும்,
7ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் ‘எனது நாடு - எனது பெருமை’ என்ற
தலைப்பிலும்
10ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் ‘வேளாண்மையே முதன்மை தொழில்’ என்ற
தலைப்பிலும் படங்கள் வரையலாம்.
போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் 9159 935 935 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். குழுவாக பதிவு
செய்வோர் Madurai935@suryanfm.in
என்ற மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்.
4ம் வகுப்பு முதல் 6ம் வகுப்பு வரை படிக்கும மாணவர்களுக்கான போட்டி காலை 9.30 மணிக்கும்,
4ம் வகுப்பு முதல் 6ம் வகுப்பு வரை படிக்கும மாணவர்களுக்கான போட்டி காலை 9.30 மணிக்கும்,
10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான போட்டி காலை 10 மணிக்கும்,
6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான போட்டி காலை 11.15க்கும் தொடங்கும்.
மாணவர்கள் போட்டி தொடங்கும் நேரத்திற்கு அரை மணி நேரம்
முன்னரே வர வேண்டும். மாணவர்கள் அனைவரும் பள்ளி சீருடை, மாணவர்
அடையாள அட்டையுடன் வர வேண்டும். ஒரு பள்ளியிலிருந்து எத்தனை மாணவர்கள்
வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.
மாணவர்கள் வரைவதற்கான வரைபடத்தாள் மட்டுமே வழங்கப்படும். தேவையான பிற பொருட்களை மாணவர்களே கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு பிரிவிற்கும் முதல் மூன்று பரிசுகளும், பத்து ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். மிகச் சிறந்த ஓவியக் கலைஞர்கள் நடுவர்களாக பங்கேற்க உள்ளனர். 8ம் வகுப்புக்கு கீழ் உள்ள மாணவர்கள் பெற்றோர் அல்லது ஆசிரியரின் வழிகாட்டுதலுடன் போட்டி நடைபெறும் இடத்திற்கு வருதல் நல்லது.
பார்வையாளராக பங்கேற்கும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கும் கலைநிகழ்ச்சி, போட்டிகளும் நடைபெற உள்ளன.
பங்கு கொண்டு வென்று வாருங்கள் மாணவ செல்வங்களே.............