Tuesday, November 14, 2017
கீழக்கரையில் இ.சேவை மைய ஊழியர்களால் பொதுமக்கள் அலைக்கழிப்பு!!
‘இன்று போய் நாளை வா’
என்று கூறும் இ.சேவை மைய ஊழியர்களால் பொதுமக்கள் கடும்
அவதியடைந்து வருகின்றனர். ஆகவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழக்கரையில் உள்ள இ.சேவை மையத்தில் ஆதார் கார்டு, ஸ்மார்ட் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவைகளுக்கு பிரின்ட் எடுத்து கொடுப்பார்கள். மேலும் பட்டா, சாதி சான்று, வாரிசு சான்று, வருமான சான்று போன்றவைகளுக்கும் இங்கு பதிவு செய்வார்கள்.
இந்நிலையில் இங்கு ஆதார் கார்டு, ஸ்மார்ட் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை எடுக்க வருபவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். காரணம் அடையாள அட்டை எடுப்பதற்கான அட்டை தீர்ந்து விட்டது. அதனால் நாளைக்கு வாருங்கள் என்று கடந்த ஒரு மாதமாக சொல்லி அனுப்பி விடுவதாகவும், சான்றிதழ்கள் பதிவு செய்ய வருபவர்களிடம் சர்வர் வேலை செய்யவில்லை என்று கூறி அனுப்பி விடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆகவே கலெக்டர் பொதுமக்களின் கஷ்டங்களை போக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.
செய்தி: திரு.தாஹீர், கீழை
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)