முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, October 23, 2017

ரிசர்வ் பேங்க் பணி வாய்ப்புகள், நேர்காணல் இல்லாமல்!!

No comments :
இந்தியாவின் தலைமை வங்கி கிளைகள் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுகிறது. தற்போது இந்த கிளைகளில் உதவியாளர் (அசிஸ்டன்ட்) பணிக்கு 623 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் சென்னையில் 15 பணியிடங்கள் உள்ளன. அதிகபட்சமாக கான்பூர் லக்னோ கிளையில் 44 இடங்களும்புதுடெல்லியில் 47 இடங்களும்கவுகாத்தியில் 36 இடங்களும் உள்ளன.

விண்ணப்பதாரர்கள் 1-10-2017 தேதியில் 24 முதல் 28 வயது உடையவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினருக்கு ஆண்டுகளும்எஸ்.சி.எஸ்.டி. பிரிவினருக்கு ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது.




ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்து, 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கணினி இயக்கும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும்.

முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

**இந்தப் பணிக்கு நேர்காணல் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.**

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.450 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் முன்னாள் படைவீரர்கள் ஆகியோர் ரூ.50 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 10-11-2017-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். பின்னர் பூர்த்தியான விண்ணப்பத்தை நகல் எடுத்து குறிப்பிட்ட முகவரிக்கு 25-11-2017-ந் தேதிக்குள் கிடைக்கும் படி அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிக்கவும், இது பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.rbi.org.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

இந்திய ராணுவத்தில் இளைஞர்களுக்கு பணி வாய்ப்பு!!

No comments :
இந்திய ராணுவத்தில் பல்வேறு பயிற்சி சேர்க்கைகளின் அடிப்படையில் தகுதியான இளைஞர்கள் படைப்பிரிவுகளில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.

தற்போது ஜூனியர் கமிஷன்டு ஆபீசர் (மதபோதகர்) பயிற்சி 85-86 சேர்க்கையின்படி, மதபோதகர் பணியில் இளைஞர்களை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பண்டிட் பிரிவில் 63 பேரும்,
பண்டிட் (கூர்கா) - 3 பேர்,
பத்ரி - 1,
மவுலவி - 2,
மவுலவி (ஷியா) - 1,
புத்த துறவி -1,
கிரந்தி - 2 பேரும் சேர்க்கப்படுகிறார்கள்.

விண்ணப்பதாரர்கள் 1-10-2018 தேதியில் 27 முதல் 34 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன், குறிப்பிட்ட பிரிவு மதபோதகருக்கு அவசியமான கல்வித்தகுதி- சான்றுகளை பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 160 செ.மீ. உயரமும், 77 செ.மீ. மார்பளவும் பெற்றிருக்க வேண்டும். 5 செ.மீ. விரிவடைய வேண்டும். 1600 மீட்டர் தூரத்தை 8 நிமிடத்தில் ஓடிக்கடக்கும் உடல்திறன் சோதனை நடத்தப்படும்.

சான்றிதழ் சரிபார்த்தல், எழுத்து தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் 8-11-2017-ந் தேதியாகும்.


இது பற்றிய விரிவான விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுர மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம், ஏராளமான அபராதங்கள்!!

No comments :
ராமநாதபுரம் பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கையில் தீவிரம், சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ளாதவர்களுக்கு அபராதம் விதிப்பு தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தடுப்பு நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும், டெங்கு பரப்பும் ஏடிஸ் கொசுப்புழு உற்பத்தியாகாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தினமும் அதிகாரிகள் அடங்கி சுகாதாரக்குழுக்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ளாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு,வசூலிக்கப்பட்டு வருகிறது.



நேற்று காலை கலெக்டர் எஸ்.நடராஜன், ஆர்.டி.ஓ., பேபி, நகராட்சி கமிஷனர் நடராஜன், சுகாதார அலுவலர் இளங்கோவன், ஆய்வாளர்கள் ஹரிதாஸ், மதன்குமார், ஜெகதீஸ் ஆகியோர் அடங்கிய குழு ஆய்வு மேற்கொண்டனர். இதில் 2 வது வார்டு பகுதியில் சிவன் சன்னிதி தெருவில் சுகாதாரமற்ற முறையில் இருந்த மூன்று வீடுகளுக்கு தலா 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

அபராதம்: தண்ணீர் டேங்கர் லாரிகளையும் சோதனை செய்தனர். இதில் டேங்கரை முழுமையாக சுத்தம் செய்யாமல் கொசுப்புழுக்களுடன் தண்ணீர் சப்ளை செய்த லாரிக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மற்றொரு டேங்கர் லாரிக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதன் பின்னர் முதல் வார்டு பகுதியில் ஆய்வு நடத்தினர்.

இப்பகுதியில் கழிவு நீரை தெருவில் விட்ட வீட்டின் உரிமையாளருக்கு குற்ற நடைமுறைச்சசட்டம் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

பின் அதிகாரிகள் குழு தொடர்ந்து தங்களது ஆய்வுகளை நடத்தியது.எச்சரிக்கை: இது போன்று சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்திருக்காதவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். இதில் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் உட்பட அனைத்துப்பகுதியிலும் ஆய்வு தொடரும். சுகாதாரமற்ற முறையில் வைத்திருந்தால், நடவடிக்கை எடுக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படும், என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)