முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, October 5, 2017

பொறியியல் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை குறைப்பு!!

No comments :
எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கிய கல்வி உதவித்தொகை குறைக்கப்பட்டதால் 1.5 லட்சம் பொறியியல் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு ஆதி திராவிட நலத்துறை சார்பில், எஸ்.சி., எஸ்.டி., வகுப்பை சார்ந்த உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 85 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை, 2017 ஆக.,11 முதல் 50 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.


அதே நேரம் அரசு நியமித்த கல்வி கட்டணக்குழு கல்வி கட்டணத்தை 70 ஆயிரம் ரூபாயில் இருந்து 85 ஆயிரமாக உயர்த்தி உள்ளது.


உயர்த்தப்பட்ட கட்டணத்தொகையை வழங்காவிட்டாலும், ஏற்கனவே வழங்கப்பட்ட உதவித்தொகையில், 35 ஆயிரம் ரூபாயை குறைத்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. இதனால், 1.50 லட்சம் பொறியியல் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.கல்வி உதவித்தொகை குறைக்கப்பட்டதால், மாணவர்களை கல்லுாரியை விட்டும், விடுதியை விட்டும் கல்லுாரி நிர்வாகங்கள் வெளியேற்றும் நிலை உள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.மாவட்டத்தில் நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை, அரசியல் கட்சியினர் முன்னிலையில்கலெக்டர் நடராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி ஆகியோர் வெளியிட்டனர்.

மாவட்டத்தில், 5 லட்சத்து 61 ஆயிரத்து 868 ஆண்கள்,
5 லட்சத்து 62 ஆயிரத்து 744 பெண்கள்,
67 திருநங்கைகள்,
என 11 லட்சத்து 24 ஆயிரத்து 679 வாக்காளர் உள்ளனர்.

புகைப்பட வாக்காளர் துணைபட்டியல், கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகங்கள், உதவி கலெக்டர் அலுவலகங்கள், நகராட்சிகளில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.


முழுமையான புகைப்பட வாக்காளர் பட்டியல் ஓட்டுச்சாவடிகளிலும் வைக்கப்பட்டுள்ளது. மேலும், புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர் 2018 ஜன.,1ல் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அக்.,3 முதல் 31 வரை பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்யலாம்.

மேலும், அக்.,7 மற்றும் 21 ஆகிய இரண்டு நாட்கள் அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் மக்களுக்கு வாசித்து காட்டப்படும். அக்.,8 மற்றும் 22ல் அனைத்து ஓட்டுச்சாவடி களிலும் வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தப்படும்.

முதன்முறையாக பெயர் சேர்க்க அல்லது ஒரு சட்டசபை தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு இடம் மாறி இருந்தால் படிவம் 6, வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர் பெயர் சேர்க்க 6 , பெயரை நீக்க 7, பெயர், வயது, பாலினம், உறவுமுறை உள்ளிட்டவை திருத்தம் செய்ய மற்றும் புகைப்படம் மாற்றம் செய்ய படிவம் 8 ல் பூர்த்தி செய்ய வேண்டும்.


www.elections.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம், என கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

பொறியாளர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு!!

No comments :
ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு பெறும் வாய்ப்புகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது .

துணை நிறுவன தலைவர் மற்றும் சிந்தடிக் ஃபிளைட் இன்ஸ்டரக்டர், மேனேஜெர், அஸிஸ்டெண்ட் மேனேஜர், ஸ்டேஷன் மேனேஜர் பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்புவது குறித்துஅறிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

ஏர் இந்தியாவில் மொத்தம் நிரப்பபடும் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை மொத்தம் 27 ஆகும்.
 

ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு பெற அக்டோபர் 24 ஆம் நாள் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 1500 பொது பிரிவினர் தொகை செலுத்த வேண்டும் . எஸ்சி , எஸ்டி பிரிவினர் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.



ஏர் இந்தியாவில் விண்ணப்ப கட்டணத்தை டிடியாக எடுத்து ஏர்லைன் அலைடு சர்வீஸ் லிமிடெடு பேயபில் அட் டெல்லி என்ற பெயரில் எடுக்க வேண்டும் . ஏர் இந்தியா பணியிடம் இந்தியா முழுவதும் இருக்கும் .
வயது வரம்பு: ஏர் இந்தியா பணியிடங்களிள் விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பு 45 வருடம் சீஃப் பர்சனல்ப் பணிக்கு 45 பணிக்கு வயதுக்குள் இருப்போர் விண்ணப்பிக்க வேண்டும் . சிந்தடிக் பிளைட் இன்ஸ்டரக்டர் 70 வயது இருக்க வேண்டும் . மேனேஜர் 40 வயது இருக்க வேண்டும் . இன்ஸ்ரக்டர் 50 வயது இருக்க வேண்டும் . அஸிஸ்டெண்ட் மேனேஜர் பணிக்கு 35 வயதுகுள் இருக்க வேண்டும். ஸ்டேசன் மேனேஜர் பணிக்கு 40 வயது இருக்க வேண்டும் இவ்வாறு பணியிடங்களுக்கு ஏற்ப வயது வரம்பு மாறுபடுகிறது .

கல்வித்தகுதி : ஏர் இந்தியாவில் பணியாற்ற அஸிஸ்டெண்ட் மேனேஜர் மற்றும் ஸ்டேசன் மாஸ்டர் பணிக்கு விண்ணப்பிக்க எம்பிஏ படித்திருக்க வேண்டும் அவற்றில் சிறப்பு படிப்புகள் விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை பார்க்கவும் .

அத்துடன் பொறியியல் படிப்பு முடித்திருக்க சில பணியிடங்களுக்கு கல்வித்தகுதியாக அறிவிக்கப்பட்டது .

விண்ணப்பத்தை தேவையான சான்றிதழுடன் டிடியுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும் .
ஏர் பர்சனல் டிபார்ட்மெண்ட் ,
அலையன்ஸ் பவன் அஜெஸெண்ட் இடி ,
ஏர் இந்தியா லிமிடெடு,
டெர்மினில் 1பி
ஐஜிஐ ஏர்போர்ட்,
புதுடெல்லி 1100037
இந்தியா.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

108 ஆம்புலன்ஸ் மக்கள் சேவைக்கா? வருமானத்திற்கா?!!

No comments :

அரசின் இலவச ஆம்புலன்ஸ் சேவை மக்களை இலவசமாக சென்றடைவதில்லை என்ற குற்ற்ச்சாட்டு எழுந்துள்ளது.

இது சம்பந்தமாக ரெகுநாதபுரத்திலிருந்து நம் வாசகர் கார்த்திக் மூலம் நமக்கு வந்த தகவல்:

108 ஆம்புலன்ஸ் இலவச சேவை ஊர்தி என்று பெயருக்குத்தான் போல.... கடந்த வியாழக்கிழமை இரெகுநாதபுரத்திலிருந்து இராமநாதபுரம் அரசு மருத்துவ மணைக்கு ஒரு நோயாளியை 108 ஆம்புலன்ஸில் ஏற்றிச்சென்றுள்ளனர்.... அவ்வாறு ஏற்றிச்செல்லப்பட்ட நோயாளியிடம் ரூபாய் 700 வசுலித்துள்ளனர்....



அதேபோல் மீண்டும் நமது இரெகுநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து அனுப்பப்பட்ட நோயாளியிடம் நமது இரெகுநாதபுர அரசு சுகாதார ஊழியர்களே அந்த நோயாளியிடம் ஆம்புலன்ஸ் சுக்கு ரூபாய் 200 குடுத்துவிடுங்கள் என்று சொல்லி அவர்களும் ஒப்புக்கொண்ட பிறகே ஆம்புலன்ஸில் ஏற்றிச் சென்றுள்ளனர்..... உயிரோடு விளையாடும் அரசு ஊழியர்கள்....


சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனிப்பார்களா?

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)