முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, September 12, 2017

ராமநாதபுரம் மாவட்டத்தில் உணவு பொருட்களின் தரம் குறித்து புகார் அளிக்க வாட்ஸ் அப் எண்!!

No comments :
உணவு பொருட்களின் தரம் குறித்து புகார் அளிக்க புதிய வாட்ஸ் அப் எண் அறிமுகம்.

இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உணவு பொருட்களின் தரம் குறித்து தொடர்ந்து பல்வேறு புகார் வந்ததையடுத்து மாவட்ட ஆட்சியர் நடராஜன் உணவு பொருட்களின் தரம் குறித்து புகார் தெரிவிக்க புதிய வாட்ஸ் அப் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



இதில் கோடைகாலங்களில் விற்பனை செய்யப்படும் கார்பைடு கல்வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம்,தரமில்லாத குடிநீர் கேன்கள்,பால்,பால் பொருட்கள்,அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் தொடர்பான புகார்களை
94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

செய்தி: திரு. தாஹீர், கீழை



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

குவைத்தில் நடைபெறும் முப்பெரும் விழா!!

No comments :
குவைத்தில் முப்பெரும் விழா!!

- சமூக / கல்வி விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி - கல்வி கேள்வி - பதில் அரங்கம்
- K-Ticன் 13ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி - குவைத் அமைப்புகளின் நிர்வாகிகளின் வாழ்த்தரங்கம்
- ஹிஜ்ரா / இஸ்லாமிய புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி

இன்ஷா அல்லாஹ்... செப்டம்பர் 21, 2017 வியாழக்கிழமை முதல் செப்டம்பர் 23, 2017 சனிக்கிழமை வரை...


தமிழகத்திலிருந்து வருகை தரும் சிறப்பு விருந்தினர்கள்:
பன்னூலாசிரியர் மவ்லவீ சொல்லருவி மு. முஹம்மது அபூதாஹிர் பாகவீ
பேராசிரியர், நூருல் இஸ்லாம் அரபிக்கல்லூரி, சேலம்
பன்னூலாசிரியர் பேராசிரியர் ஒய். முஹம்மது ரஃபீக் எம்சிஏ, எம்பிஏ.,
உதவிப் பேராசிரியர், ஆலிம் முஹம்மது ஸாலிஹ் பொறியியல் கல்லூரி, சென்னை


இரண்டு இடங்கள் - மூன்று நாட்கள் - நான்கு நிகழ்ச்சிகள்
பெண்களுக்கு தனியிட வசதி - விசாலாமான வாகன நிறுத்துமிடம் - இரவு உணவு ஏற்பாடு
அனைவரும் குடும்பத்துடன் வருக! அன்பர்களையும் அழைத்து வருக!! அளவிலா அறிவமுதம் (பெ)பருக!!!


அழைப்பில் இன்புறும்...
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),
+965 9787 2482



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)